ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2018

தீமையையும் உணர்த்தி… அதைச் சேர்க்கக் கூடாது….! என்று உணர்த்தும் அந்த “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா…!”


இப்போது நாம் மனிதனாக இருக்கின்றோம். பிறர் நம்மைப் பற்றிக் தவறாகச் சொன்னால் “பாவி… என்னைப் பற்றி இப்படி இல்லாததைச் சொல்கின்றானே… உருப்படுவானா இவன்…?” என்று சொல்லி விட்டுப் பிடிவாதமாக இருக்கின்றோம்.

அவர்கள் உடலில் எது கெட வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்வு பூராம் இங்கே நமக்குள் கெடுதல் ஆக்குகின்றது.
1.கெடுதல் ஆனாலும் நமக்குள் அது தெரிகின்றது.
2.அவனால் தான் இந்த மாதிரி வருகின்றது.. அதனால் தனக்கு என்னவெல்லாம் வருகின்றது என்றும் தெரிகின்றது.
3.ஆனால் அதை நீக்கத் தெரிகின்றதா...?

ஏனென்றால் நம் ஆறாவது அறிவு அதை உணர்த்துகின்றது. உணர்த்தி  அதை மீட்க வேண்டும் என்ற உணர்வையும் ஆறாவது அறிவு கொடுக்கின்றது.

1.இருந்தாலும் நாம் அந்த ஆறாவது அறிவை அடக்குகின்றோம்
2.அவர்கள் உணர்வால் அது அடக்கப்படுகின்றது.
3.நம்மால் நல்லதைச் சிந்திக்க முடியவில்லை
4.அதிலிருந்து விடுபட்டு வெளியில் வர வேண்டும் என்றால் அவர்கள் உணர்வு தான் வருகின்றது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் போல காரத்தை அதிகமாகச் சேர்த்து விட்டால் என்ன ஆகும். காரம் தான் முன்னாடி இருக்கும். விஷத்தைச் சேர்த்தால் விஷம் தான் முன்னாடி இருக்கும். உப்பைச் சேர்த்தால் உப்பு தான் முன்னாடி இருக்கும்.

ருசியெல்லாம் கெடுத்து விடுகின்றது. “எது அதிகமோ” அது ஆக்கிரமிப்பு செய்கின்றது.

ஆகவே மனித வாழ்க்கையில் வரும் இதைப் போன்ற தீமைகளை நீக்கியவர்கள் யார்...? அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து “பல அலைகள்” பேரருள் பேரொளியாக வருகின்றது.
2.அதை நாம் எடுத்து நம் உடலுக்குள் சேர்த்துத் தீமைகளை அகற்றப் பழக வேண்டும்.
3.சூட்சுமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றது.
4.அதனை எடுப்பதற்குத்தான் விநாயகத் தத்துவத்தையே ஞானிகள் வைக்கின்றார்கள்.
5.ஒரு தடவைப் பதிவு செய்து கொண்டாலும் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதற்குத் தான்
6,அந்த உருவத்தை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

காவியமாகப் படைத்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக “எப்படி ஒளியாக ஆனான்…?” என்று கருத்தினை அறியும்படி செய்கின்றார்கள்.

ஒருவன் தீங்கு செய்கிறான் என்று தெரிகின்றது.. நாம் பார்க்கின்றோம். அது நம் உடலுக்குள் பதிவாகும் போது வினையாகின்றது. அதைப் போன்ற தீய வினைகளை எல்லாம் நீக்கியவன் துருவ மகரிஷி என்று நம் ஆறாவது அறிவால் தெரிகின்றது அது “கார்த்திகேயா…”

நம் வாழ்க்கையில் தீமை வரும் பொழுது அடுத்த கணமே அந்தத் தீய வினையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றோம் என்றால் நமக்குள் வரும் இருளை நீக்கும். நம் உணர்வுகள் தெளிவாகும்.

தீமைகளை நம் உடலுக்குள் உருவாகாதபடி தடுத்து விடுகின்றோம். அதைத்தான் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…!” என்று நம் ஆறாவது அறிவைப் பற்றித் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.