ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 18, 2018

“படித்து” நான் ஞானம் பெறவில்லை – குரு சொன்னதைப் “பதித்து” ஞானம் பெற்றவன்…!


நான் (ஞானகுரு) படித்து வந்தவன் அல்ல.
1.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
2.பதிந்த நிலைகளை எடுத்து வளர்த்துக் கொண்டவன்
3.எடுத்துக் கொண்ட அந்த உண்மைகளை அறிந்து உணர்த்துபவன்...!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக அதைத்தான் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அந்த உண்மைகளை நீங்களும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அவைகளை நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி என்ற உணர்வைப் பெற முடியும்.

உங்கள் பார்வையால் பிறருடைய தீமைகளையும் பிணிகளையும் போக்க வேண்டுமே தவிர
1.ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிலையைப் பார்த்து
2.என்னை இன்னுமா நீ சோதிக்கின்றாய்...! என்று சொல்வது போல்
3.உங்களைச் சோதனைக்கு ஆளாக்குவதற்கல்ல.

அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்திமானாக நீங்கள் மாற வேண்டும். இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும். (அல்லது அடக்க வேண்டும்.)

உங்கள் உடலுக்குள் மட்டும் தீமைகளை அகற்றுவதல்ல... இந்தக் காற்று மண்டலத்திலுள்ள நச்சுத் தன்மைகளையும் அகற்ற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் “தீமைகளை நீக்கும் வல்லவர்களாக…” ஆகிவிட்டால் இந்தப் பூமியில் பரவிக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை உங்கள் மூச்சலைகள் நிச்சயம் அடக்கும். நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

காற்று மண்டலத்தில் மாசுபடும் உணர்வுகளை மாற்றிவிட்டால் மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற அந்த உணர்வுகளுக்கு
3.அங்கே சென்று ஒளியின் உணர்வுகளாக அங்கே மீண்டும் அது பெருகும்.

இவைகளை எல்லாம் உங்கள் மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் இந்த உடலில் வாழ்வது என்பது சிறிது காலமே…!
1.அதற்குள் நாம் எடுப்பது….
2.எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்தியை
3.உங்களுக்குள் சேர்ப்பிக்கின்றோம்.

இந்தக் குறுகிய காலத்தில் நாம் பேரின்பப் பெரு நிலையைப் பெற்று என்றுமே ஏகாந்த நிலை அடையும் அந்தப் பருவத்தைப் பெறவேண்டும் என்று தான் உங்களுக்கு இதைச் சொல்வது.