ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2018

பிறக்காமலே பிறப்பவன் பிரகலாதன்...!


நமக்குச் சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பகைமை பாராட்டும் ஒருவர் மற்றவருக்கு இடைஞ்சல் செய்கிறார். அதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்தவுடனே நமக்குள் அந்த உணர்ச்சிகள் வந்து விடுகின்றது.
1.நமக்குள் இருக்கும் எல்லாக் குணங்களிலும் இது கலந்துவிடுகின்றது.
2.விஷம் கொஞ்சமாக இருந்தாலும் எதற்குள்ளும் ஊடுருவிடும் இல்லையா..?
3.உள்ளுக்குள் வந்தவுடன் நம் நல்ல குணத்தை அடக்கிவிட்டு இது முன்னுக்கு வந்து விடுகிறது.

சதா நல்லதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் விஷத்திற்குண்டான இயக்கம் அப்படித் தான்…!

இரண்யன் என்ன செய்கிறான்..? எந்த வகையிலும் எனக்கு “இறப்பு வரக்கூடாது…” என்று வரம் வாங்குகிறான்.

பிரகலாதன் என்றால் ஒன்றிலிருந்து பிறக்கவில்லை. (பிரகலாதன் – பிறக்காதவன்)
1.ஆனால் பிறக்காமலேயே ஒரு உணர்வுக்குள் வந்து
2.அது எதிலே கலக்கின்றதோ (மோதுகின்றதோ)
3.அதை இயக்கக்கூடிய சக்தியாக உள்ளதைப் பிரகலாதன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

இந்தப் பிரகலாதனுடைய தன்மை என்ன…? அவன் நாராயணனை வணங்குகிறான்.

நாராயணன் (சூரியன்) அந்த ஒளியின் சுடராக வரப்படும் போது
1.நான் இல்லை என்றால் நீ பிறக்க முடியாது. நீ இயங்க முடியாது.
2.இரண்யாய நம என்று சொல் என்கிறான் இரண்யன்.
1.எதையுமே வெல்லக் கூடிய வல்லமை என்னிடம் உள்ளது.
2.இயக்கக்கூடிய வல்லமை இருக்கின்றது என்று
3.பிரகலாதன் கதையைக் காட்டுகிறார்கள் ஞானிகள்,

அதாவது விஷத்தின் தாக்குலால் தான் சூரியனும் உருவானது… சூரியனும் இயங்கிக் கொண்டுள்ளது…! தெளிவாகக் என்று காட்டுகிறார்கள். இது புற நிலைகள் கொண்டது.

அக நிலைக்கு (மனிதனுக்குள்) என்ன செய்தார்கள்…?

தூணிலும் இருக்கிறான்…! துரும்பிலும் இருக்கிறான்….! உன்னிலும் இருக்கிறான்…! என்னிலும் இருக்கிறான்…! என்று பிரகலாதன் சொல்லப்படும் போது “எங்கே அந்த நாராயணனைக் காட்டு…!” என்கிறான் இரண்யன்.

அதாவது அந்த அகந்தை என்ன செய்கிறது…? காட்டு…! அவனை அழித்துவிடுவேன்…! என்று அந்தக் கட்டிடத்தை… (தூணை) இடிக்கிறான். அது “விஸ்வ ரூபம்” எடுக்கிறது.

அப்பொழுது இவனுக்குள் என்ன செய்கிறது…? இந்தக் கட்டிடத்தை (தனக்குள்) இடிக்கிறான்.

அவன் (பிரகலாதன்) இடைமறித்து என்ன செய்கிறான்…? இந்த ஆறாவது அறிவு கொண்டு அருள் மகரிஷியின் உணர்வைத் தான் பெற வேண்டும் என்று எண்ணுகிறான்.

இந்தத் தீமை செய்யும் உணர்வு தனக்குள் உள்ளே புகாதபடி அந்த நினைவின் தன்மை கொண்டு வாசற்படி மீது அமர்ந்து இரண்யனை மடி மீது அமர்த்திப் பிளக்கிறான்.

உயிர் – நர நாராயணன்
மூக்கு – வாசல்படி
மடி – ஆன்மா (நெஞ்சுக்கு முன்னாடி இருக்கும் பகுதி)
இரண்யன் – உணர்வுக்குள் இயக்கும் நஞ்சு (விஷம்)
பிரகலாதன் – விஷத்தின் மோதலில் தன்னைக் காக்க வேண்டும் என்று “தோன்றும் உணர்வு”

தீமையின் உணர்வுகள் தனக்குள் புகாது மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து இங்கே புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும். அது வலு பெறும் போது உள்ளுக்குள் போகாது தடுக்கிறது.

ஒவ்வொருவரும் இவ்வாறு செய்யும் பொழுது யாருடைய உடலுக்குள்ளும் நஞ்சு போகவில்லை என்றால் காலையில் 6 மணிக்கெல்லாம் சூரியன் (நாராயணன்) இழுத்துக் கொள்கின்றது.

அதாவது அந்த அருள் ஒளியை எல்லோரும் எடுத்தோம் என்றால் நமக்குள் தீமைகள் உள்ளுக்குள் புகாதபடி தடுக்கின்றோம். நம்மை வேதனைப்படுத்தும் உணர்வுகளை நம் உடலுக்குள் வளர விடுவதில்லை.

ஆனால் இரண்யனோ தான் வரம் கேட்டபடி நாராயணனிடம் போய்ச் சேர்ந்து விடுகிறான். விஷ்ணு தான் வரத்தைக் கொடுக்கின்றான். ஆனால் நாராயணனிடம் போய்ச் சேர்ந்து விடுகின்றான். அதன்படி அவனுக்கு இறப்பில்லை என்று கொடுக்கின்றான்.

1.விஷ்ணுவிடம் கேட்கும் பொழுது விஷ்ணு (உயிர்) அவனைக் கொல்லவில்லை.
2.உன் வேலையைச் செய்…! நீ போ…! என்று தன்னிடமிருந்து தள்ளி விட்டு விடுகிறான்.

அந்தக் காவியத்தை ஞானிகள் எப்படிக் கொடுக்கின்றார்கள்…? ஞானிகள் கொடுத்த காவியத்தில் உள்ள “மூலத்தை” நீங்கள் அறிந்து கொண்டால் போதும்.

இரண்யனுக்குக் கொடுத்த வரப்படி அவனை அழிக்கவில்லை. ஆனாலும் இந்தத் தீமையை வளர்க்க விடாதபடி அவன் தன்னைக் காக்கிறான்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரமாகப் போகும் போது தனது பங்காக ஒளியாக மாற்றுகிறான். NEGATIVE… POSITIVE…!

சுழற்சியின் தன்மை மோதலில் தான் சூரியனுக்குள்ளும் ஒளி வருகிறது, அதே உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுக்கும் போது துருவ நட்சத்திரமும் ஒளியாக மாற்றுகிறான்.
1.அந்த விஷம் இல்லையென்றால் அந்த உணர்ச்சியின் ஒலி அலைகள் பரவாது.
2.அவனுக்குள் அடங்கி (சூரியனாக இருந்தாலும் சரி - துருவ நட்சத்திரமாக இருந்தாலும் சரி) அது ஒளியாகப் பரவுகின்றது,

ஒரு பொருளுக்குள் விஷத்தின் தன்மை இல்லை என்றால் அந்தப் பொருளின் சக்தியையே
1.அது ஒளியாகக் காட்டாது.
2.அந்த அறிவாக இயங்காது.

அதனால் தான் ஞானிகள் விஷத்தை “ஆதி சக்தி” (ஆதியிலே உருவான சக்தி) என்று பெயரிட்டார்கள். ஆதி சக்தியின் அருள் பெற்ற “ஈஸ்வரா…!” என்று உயிரின் இயக்கத்தையும் தெளிவாக்கியுள்ளார்கள்.

எந்தப் பொருளில் இந்த விஷம் கலக்கின்றதோ அந்தப் பொருளின் மணத்தை வீரியமாக உணர்ச்சியை ஊட்டும்.
1.ஆனால் அதிகரித்து விட்டால்.....
2.இவனையே அது வீழ்த்தி விடும்.
3.மற்றது எல்லாவற்றையும் வீழ்த்தும்.

ஏனென்றால் நம்மை எது இயக்குகிறது…? நாம் எப்படி இயங்குகின்றோம்…? இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சும்மா நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று கேட்டுவிட்டு அப்படியே போகக் கூடாது.