உவர் மண்ணை எடுத்துக் கொண்டோம்
என்றால் காலையில் பார்த்தோம் என்றால் அது ஈரமாக இருக்கும். அதைத் தோண்டி தண்ணீரில்
வேக வைத்தோம் என்றால் அது தான் வெடி உப்பு.
வெடி உப்பு இதிலிருந்து
தான் தயார் செய்கின்றார்கள்.
இந்த வெடி உப்பு என்ன செய்கின்றது…?
இந்தப் பனியில் இது அமிழ்கின்றது. வேக வைத்துப் பிரித்து எடுத்துக் கொள்கின்றார்கள்.
அதே சமயத்தில் விஷத் தன்மைகள்
பாறைகள் வழி வருவதை எடுத்துக் கொண்டால் கந்தகம்.
கந்தகம் என்ன செய்கின்றது...?
கொதிகலனாக மாற்றுகின்றது. அதையும் கடல் பகுதிகளிலிருந்து தான் எடுக்கின்றார்கள்.
கந்தகத்தையும் வெடி உப்பையும்
இது இரண்டையும் இணைத்தால் (TOUCH) உடனே வெடிக்கும்…!
கந்தகத்தையும் வெடி உப்பையும்
எடுத்துத் தனித் தனியாகத்தான் வைத்து இருப்பார்கள். இது இரண்டும் மோதி விட்டால் உடனே
தீ பிடிக்கின்றது. இயற்கையின் சிலை நியதிகள் இவை.
நாம் எடுக்கும் உணர்வுகள்…
நாம் சுவாசிப்பது கந்தகம்.. அதாவது வெப்பமாகின்றது. சந்தர்ப்பவசத்தால்
1.வேறு சிலருடைய உணர்வை
எடுத்துக் கொண்டால்
2.“சில்ல்ல்ல்…..” என்று
உடனே நமக்கு வேர்க்கின்றது.
3.அந்த உப்புத் தன்மை ஏற்படும்.
4.யாருடைய குணங்களை எடுத்து
வளர்க்கின்றீர்களோ “படீர்….” என்று வெடித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
5.உணர்ச்சியைத் தூண்டும்
நிலைகள் என்பது இது தான்…!
கந்தகம் ஒரு எரி பொருளாக
மாறுகின்றது. வெடிக்கும் தன்மை கொண்ட உப்பை இதனுடன் சேர்த்தவுடனே “சத்ரு.. மித்ரு..”
என்ற நிலைகள் வருகின்றது.
அதாவது… “இயற்கையில்”
1.ஒரு பொருள் உருவாக்குவதற்கும்
2.ஒரு பொருளை இயக்குவதற்கும்
இந்த நிலைகள் தான் காரணம்
(இதைப் பார்க்கலாம்)
ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவேர் இது இரண்டையுமே எனக்கு நேரடியாகக் காட்டுகின்றார். அவர் உணர்த்திய இயற்கையின்
இயக்கத்தின் பேருண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.
நம்மை எது இயக்குகின்றது
என்பதை “நம்மை நாம் அறிய…!” இது உதவியாக இருக்கும். அதற்குத்தான் சொல்வது.