ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 13, 2018

தாவர இன சத்தையும் உலோகங்களையும் புடம் போட்டுப் பஸ்பமாக உருவாக்கிய “அன்றைய சித்தனின் ஆற்றல் சாதாரணமானதல்ல...!


மின்னல்கள் கடலுக்குள் பாய்ந்தால் மணலாக மாறுகின்றது. அந்த மணலை எடுத்து அதிலுள்ள யுரேனியத்தைப் பிரித்து எடுக்கின்றார்கள் விஞ்ஞானிகள். அதை வடிகட்டி பல மடங்கு செறிவூட்டி எடுத்து வைத்துக் கொள்கின்றார்கள்.

உதாரணமாக நூறு டன் விறகை எறித்து நெருப்பை உண்டாக்கினால் எந்த அளவு வெப்பத்தின் கனல் கிடைக்குமோ அதே வெப்பத்தை இந்த “ஒரு அவுன்ஸிலேயும்...” குறைவாக உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கொடுக்கின்றது.

அதனுடைய வேகம் நீரைச் சீக்கிரம் கொதிகலனாக மாற்றி அதை ஆவியாக மாற்றி இயந்திரங்களை இயக்கச் செய்யக்கூடிய நிலைகளாகின்றது.

அணு மின் நிலையங்களில் மிக மிகக் குறைவான எடையுள்ள யுரேனியத்தை வைத்து வருடம் முழுவதற்கும் மின்சாரத்தைத் தயாரிக்கின்றார்கள்.

ஆனால் அதே மின்சாரத்தை நிலக்கரியை வைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் பல ஆயிரம் டன் தேவைப்படுகின்றது.

இதை எல்லாம் மனிதன் தான் இன்று செய்கின்றான்.

பெரும் பாறையாக இருக்கின்றது என்றால் அதைக் கடினமான இரும்பு உளியைக் கொண்டு அதற்குண்டான இயந்திரத்தை வைத்து அதைப் பிளக்கின்றார்கள். ஏனென்றால் இரும்பிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.

இயந்திரங்களில் இரும்பை அதிகமாக உபயோகப்படுத்தினாலும் மனித உணர்விற்குள் (உடலுக்குள்) அந்த இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால்
1.இரும்பு எப்படி மற்றதை எப்படிப் பிளக்கின்றதோ
2.இதைப் போல மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துக்களைப் பிளக்கும் நிலையாகி
3.இடி மின்னலைப்போல உடலில் வலியும் அதனால் பல நோய்களும் ஏற்படுகின்றது.

ஒவ்வொரு தாவர இனங்களிலேயும் ஒவ்வொரு விதமான உலோகத்தின் தன்மை அதிகமாக விளைந்திருக்கும். அந்தத் தாவர இனச் சத்துக்களைத் தான் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட் கொண்டு வந்துள்ளோம்.

அந்தத் தாவர இனத்தின் மணமே மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்வதற்குக் காரணமாகவும் அமைந்துள்ளது.

சந்தர்ப்பத்தால் நாம் உணவாக உண்ணும் காய்கறியிலோ அல்லது நம் எண்ணத்தால் பல நிலைகள் சுவாசிக்கும் போது இந்த இரும்புச் சத்து நம் நல்ல குணங்களுக்குள் கலந்து விட்டால் கடுமையான நோய்களாகி விடுகின்றது.

இப்படி இருக்கக்கூடிய நிலையை அன்றைய சித்தன் என்பவன் இது மனித உடலில் தொல்லை கொடுக்கிறது என்பதை அறிந்து அதை எப்படி நீக்குவது…? என்று சிந்திக்கின்றான்.

அப்படி அவன் சிந்தித்து வரும் நிலையில் அவன் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகளில் அதை நீக்கக்கூடிய வல்லமை அவனுக்குள் அது வலிமை பெறுகின்றது.

அப்பொழுது பல தாவர இனங்களைப் பறித்து இரும்பை அதற்குள் கலந்து புடம் போடுகின்றான்.
1.அப்பொழுது இரும்பிற்குள் இருக்கும் பாறையை உடைக்கக்கூடிய அந்தக் கடுமையான சத்து வலு இழந்து
2.இரும்பின் சத்தான நிலைகள் கரைந்து போகும் அளவுக்கு அதை
3.ஒரு பஸ்பமாக உருவாக்குகின்றான் அந்தச் சித்தன்.

மனித உடலுக்குள் எவ்வளவு தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்ததோ அந்த உணர்வின் வலுவை அடக்க இந்தப் பஸ்பத்தைக் கொடுக்கின்றான்.

கொடுக்கும் பொழுது மனிதனுக்குள் கடுமையாக  வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியைக் கரைத்து விடுகின்றது.

அப்போது அது உடல் நலம் பெறும் சக்தியாக அங்கே வருகின்றது. இப்படி ஒரு மனிதனின் உடலிலே துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தை அன்று நீக்கினான் சித்தன்.

“எதனுடன்... எதைச் சேர்த்தால்... என்ன ஆகும்...?” என்ற நிலையில் மனிதன் ஆரோக்கியமாக வாழும் நிலைக்காகத்
1.தாவர இனத்தின் சத்திற்குள் உலோகத்தினை இணைத்து
2.தன் எண்ணத்தால் உருவான அந்த சத்தினை இணைக்கச் செய்து
3.அதை உருவாக்கி அதைப் புடமிட்டுச் செய்த இந்த உணர்வுகள்
4.அந்தச் சித்தனின் உடலில் “மிகச் சக்தி வாய்ந்த நிலையாக விளைகின்றது...”

அவர் உருவாக்கிய இந்த மருந்தோ மனித உடலில் இருக்கக்கூடிய நோயை எல்லாம் நீக்குகின்றது. ஆனால் அந்தச் சித்தனோ இத்தகைய கடினமான நிலைகள் தன் உடலிலே வளர விடாத நிலைகளில்
1.அவர் எடுத்துக் கொண்ட ஆற்றல்கள்
2.மெய் ஞானத்தின் உணர்வின் அணுக்களாக அவன் உடலில் விளைகின்றது.

இப்படிக் கடின சக்திகளை வென்றிடும் அந்த உணர்வின் சத்துகள் அந்த உடலிலே விளையப்படும் போது அவனுடைய சிந்தனைகள் அனைத்தும் அவ்வுடலிலே
1.எந்தெந்தக் குணங்களினால் எந்தக் கடினமான நிலைகள் வருகின்றதோ
2.அதை நிவர்த்திக்கும் “உணர்வின் ஞானம்” அங்கே உருவாகின்றது.

அதன் வழி கொண்டு தன்  உடலில் வந்த தீய விளைவுகள் அனைத்தையும் நீக்கி தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையுமே தனக்குக் கட்டுப்படும் நிலையாக அதைச் சரணமடையச் செய்தான் அந்தச் சித்தன் என்பவன்.

அதிலே முதன்மையானவன் ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்.

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த உயிர் ஒளியாக இருந்தது போல அகஸ்தியர் தன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வு அனைத்தையும் ஒளியின் சரீரமாக வளர்த்துத் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

1.விண்ணிலிருந்து வரக்கூடிய பேராற்றல்களையும்
2.பேரண்டத்தில் இருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மைளையும் (எதுவாக இருந்தாலும்)
3.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தத் துருவ மகரிஷி அவைகளை  முறித்து
4.கதிரியக்கச் சக்திகளையும் கடினமான உலோகத்தின் தன்மைகளையும் தனக்கு உணவாக  எடுத்துக் கொண்டு
5.ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு அத்தகைய ஆற்றல்களைத்தான் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.