நாம் ஒரு தையல் மெஷினில் தைக்கக் கற்றுக் கொண்ட பின் பிறிதொருவருடன்
பேசிக் கொண்டிருந்தாலும் தையலைச் சீராகத் தைக்க முடியும்.
அதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியை விண்ணிலிருந்து எடுக்கக்
கற்றுக் கொள்ள வேண்டும். “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி எடுக்கும்
பழக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
எத்தகைய துன்பங்கள் வந்தாலும் நம்மை அறியாமலே நினைவின் அலைகள்
விண்ணை நோக்கிச் சென்று அந்த அருளாற்றல்களைக் கவரச் செய்து நம் எண்ணத்தால் துன்பங்களை
அகற்றச் செய்யும். உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும்.
அத்தகைய உணர்வின் அலைகள் பிறர் துன்பப்படும் உணர்வுக்குள்
சென்றால் அவர்களது துன்பத்தையும் நீக்கி ஒளி பெறும் சக்தியாக மாற்றிக் கொண்டு இருக்கும்.
இதனால் தான்
1.மிருக நிலைகளிலிருந்து என்று மனித உரு பெற்றானோ
2.அவனே “முழு முதற் கடவுள்…!” என்று சித்தர்கள் இது விவரித்து
3.அந்த விநாயகர் தத்துவத்தை நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
ஆகவே நமக்குள் எந்த வினையைச் சேர்க்க வேண்டும்…? என்று அறிந்து
கொள்வது மிகவும் நல்லது.
1.மெய் வழி கண்டு… மெய் வழி சென்று… மெய் உணர்வைப் பெற்று…
2.பிறர் உணர்வில் உள்ள இருளை நீக்கும் ஆற்றல் மிக்க சக்தி
பெற்ற
3.அந்த மகா ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் வினையாகச் சேர்த்தால்
4.அதற்கு நாயகனாக உயிர் நம்மை ஒளிச் சரீரமாக ஆக்கும்.
ஆகவே….
எங்கோ இருக்கின்றான்…. இறைவன்
எங்கோ இருக்கின்றான்… கடவுள் என்று
எங்கேயும் எண்ண வேண்டாம்….!
பேரண்டத்தின் பெரும் உணர்வின் தன்மையை உணர்வின் எண்ண அலைகளாக
நமக்குள் நின்றே உணர்வின் இயக்கமாக நாம் எண்ணியதை “நம் உயிர்…”
இயக்கியும்…
உணர்த்தியும்…
உடலுக்குள் இணைத்தும்…
அணுக்களாக வளர்த்தும்…
வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப உடல்களை “மாற்றி மாற்றி”
அமைத்துக் கொண்டேயிருக்கின்றது.
நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றமோ அதுவாகவே உயிர் நம்மை ஆக்கி
விடுகின்றது. ஆகவே
1.மெய் உணர்வைப் பெறுவோம்
2.மெய் ஞானியின் அருள் வழியிலே செல்வோம்
3.அதன் வழி கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளி சரீரம் பெற வேண்டும்
என்று நாம் தியானிப்போம்
4.உலக மக்கள் அனைவரும் அதைப் பெறத் தவமிருப்போம்.