உங்களிடம் திரும்பத் திரும்ப
உபதேசிக்கின்றேன் என்றால் அந்த அருளைப் பெறுவதற்குண்டான அந்த வித்தை உங்களுக்குள் ஊழ்வினை
என்ற வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
AGRICULTURE DEPARTMENT விவசாயப்
பண்ணைகளில் எப்படி ஒரு புதிய வித்தை உருவாக்குகின்றார்களோ அதே மாதிரி தான் உங்களுக்குள்
உருவாக்குகின்றேன்.
நல்ல விதைகள் சிலவற்றை உற்பத்தி
செய்து கொடுக்கின்றார்கள். நாம் அதை வாங்கி சென்று விதைத்த பின் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை
என்றால் பயிர்கள் பட்டுப்போய்விடும். அப்போது விவசாயப் பண்ணையிடம் போய் “என்னங்க…?
பயிர்கள் எல்லாம் பட்டுப்போய்விட்டது…! என்று சொல்ல முடியுமா…?
இப்போது உங்களிடம் குருநாதர்
காட்டிய வழியில் மெய் ஞான வித்துகளை உற்பத்தி பண்ணிக் கொடுக்கின்றோம்.
1.அதை நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…?
2.எதன் மேலேயோ ஆசையைச் செலுத்திக்
கொண்டு ஞானப் பயிருக்குத் தண்ணீர் ஊற்றமாட்டேன் என்கின்றீர்கள்.
3.”எப்படா…! பலன் கொடுக்கும்…?”
என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
4.அடுத்தவரிடமும் இதைத்தான்
சொல்லிக் கொண்டிருக்கின்றீர்களே தவிர
5.ஆனால் தண்ணீர் ஊற்றுவதை
நிறுத்தி விடுகின்றீர்கள்.
6.தண்ணீர் ஊற்றினாலும் அடுத்து
அந்தப் பயிருக்கு அதற்கு மேல் உரம் கொடுக்க வேண்டும்.
7.மணிச் சத்து (சாப்பாடு)
கொடுக்க வேண்டும்… அந்தந்தக் காலத்தில் சாப்பாடு கொடுக்க வேண்டுமா இல்லையா…?
கஷ்டப்படும் போதெல்லாம் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
என்று நினைக்க வேண்டும்.
1.இந்த மாதிரிச் செய்தால்
சாப்பாடு கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்.
2.உங்கள் உணர்வின் எண்ணங்கள்
சீராக வரும்.
3.அதை வைத்து நீங்கள் செயல்படுத்துவதற்கு
நல்லதாக இருக்கும்.
நான் சொல்வது இலேசாக இருக்கும்.
கொஞ்ச நாள் SERVICE (செய்து) பண்ணிப் பாருங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள்
தோன்றும்.
1.காலையில் எழுந்ததும் இதே
மாதிரி துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள்.
2.வேலைக்குப் போவதற்கு முன்
துருவ நட்சத்திரத்தினை எண்ணுங்கள்.
3.வேலை செய்யும் இடங்களை எண்ணுங்கள்.
4.அந்தத் தொழில் நன்றாக இருக்க
வேண்டும்
5.வேலை செய்பவர்கள் நன்றாக
இருக்க வேண்டும்
6.இங்கே உற்பத்தி பண்ணுபவர்கள்
அந்த பொருள்களை வாங்குபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
எப்படியும் அதற்குண்டான நல்ல
வழி உங்களுக்குக் கிடைக்கும்.
விவசாயத்தில் இந்தத் தடவை
இதைப் போட்டேன். என் நேரம் எல்லாம் போய்விட்டது. “நஷ்டம்… நஷ்டம்…” என்று சொல்வதற்குப்
பதில் நீங்கள் துருவ நட்சத்திரத்தை எண்ணி விவசாயம் செய்து பாருங்கள்.
வெள்ளாமை நன்றாக வரும். உங்கள்
எண்ணத்தால் நிச்சயம் நடக்கும்.
இப்பொழுது நீங்கள் சாமி… சாமியார்…
சொல்வதையெல்லாம் கேட்கின்றீர்கள் அல்லவா…!
1.ஏன்…? நீங்கள் அவர்களை மாதிரி
நல்லதை எண்ணி
2.உங்களுக்குள் சமைக்க முடியாதா…..!
3.உங்களுக்கு POWER கொடுக்கின்றேன்..
செய்யுங்கள்… முடியும்…!
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
எனக்கு (ஞானகுரு) இப்படித்தான் கொடுத்தார். என்னை அருள் வழியில் வளர்த்தார். அவர் சொன்ன
வழியில் கடைப்பிடித்தேன். என்னால் வளர முடிந்தது.
இனிமேல் நாம் இந்த உடலுக்குப்பின்
பிறவியில்லா நிலைகள் அடைதல் வேண்டும்.