ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2018

கஷ்டங்கள் வந்தால் “ஈஸ்வரா….." என்று ஒரு புருவ மத்தியில் பிரேக் (BRAKE) போட்டுத் தடுத்து நிறுத்துங்கள்….!


ஒவ்வொரு நிமிடத்திலும் வீட்டில் ஏதாவது “குறைபாடுகள்” வரும். வீடு என்று இருந்தாலே
1.நீங்கள் எப்படி எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும் கூட
2.எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

ஆகவே அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

சந்தர்ப்பத்தால் சங்கடத்திலேயோ சலிப்பிலேயோ வெறுப்பிலேயோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்குள் வந்தால்
1.மூக்கின் வழியாகச் சுவாசம் போய்
2.உயிரில் பட்டுதான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அப்போது நமக்குள் அந்தச் சங்கடம் என்ற எண்ணம் வரும் போது என்ன நடக்கின்றது…?
1.இந்த ஆன்டெனா (ANTENNA) நம் கண்கள் அதை இழுக்கின்றது.
2.நம் ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருந்து கவர்ந்து சுவாசத்திற்குள் வருகின்றது.

அப்போது அந்த கெட்ட அணுக்கள் தான் வளர்கின்றது. நாம் சிந்திக்கும் தன்மை போய்விடுகின்றது.

அந்த இடத்தில் அதை உடனடியாகத் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

1."ஈஸ்வரா…." என்று சொல்லி ஒரு “பிரேக்….!” (BRAKE போட வேண்டும்)
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் “உயிருடன் ஒட்டி”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும்
(ஒரு வினாடிக்குள் இந்த மாதிரி இப்படி “பிரேக்” இட வேண்டும்)  

அப்போது என்ன நடக்கின்றது…?

அந்த சங்கட அலை புகாது தடுத்து வெளியிலே உந்தித் தள்ளி விடுகின்றது. உள்ளுக்குள் போகாது.

ஏனென்றால் உயிரில் பட்டால் தான் உயிர் அந்தச் சங்கட உணர்ச்சிகளை இயக்கும்,
1.நெருப்பில் ஒரு பொருள் பட்ட பிற்பாடுதான் அந்த வாசனை வருகின்றது.
2.அதே மாதிரி நம் உயிரில் (நெருப்பில்) படாமல்
3.தீமைகளைத் தடுத்துப் (BRAKE) பழக வேண்டும்.

இப்படிப் பழகிக் கொண்டால் அப்புறம் இதன் வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியை நமக்குள் இழுக்க வேண்டும்.
1.“உயிர் வழி சுவாசம்” என்பது இது தான்
2.”ஆக்ஞை” என்பதும் இது தான்
3.”பிராணாயாமம்” என்பதும் இது தான்
4.”யோகா” என்பதும் இது தான்
5.”மூன்றாவது கண்” திறப்பது என்பதும் இது தான்
6.”மூலாதாரம் குண்டலினி” என்பதும் இது தான்.