உதாரணமாக
மீன் நீருக்குள் நீந்திச் செல்கின்றது. மீனுக்குள் இருக்கக் கூடிய காந்தம் குறையுமானால்
அது மீண்டும் நீரை விட்டு வெளியில் வருகின்றது.
வெளியில்
வந்து தனக்குத் தேவையான காந்தத்தைச் சுவாசித்துவிட்டு மீண்டும் நீருக்குள்
செல்கிறது.
1.நீரின்
வேகம் அதிகமானால்
2.இந்தக்
காந்தத்தைச் சுவாசித்து எதிர் நீச்சலாகி
3.தன்னுடைய
இடங்களுக்குச் செல்கின்றது.
உயரமான
இடங்களிலிருந்து நீர் பாய்ந்து வீழ்ந்தாலும் (நீர் வீழ்ச்சி) அதிலும் சில மீனினங்கள்
எதிர்த்துச் செல்லும் ஆற்றல் கொண்டது.
இதைப்
போன்று தான் நம் வாழ்க்கையில் தீமைகள் வரும் பொழுதெல்லாம் நம் கண்ணின் நினைவை “விண்ணை
நோக்கிச் செலுத்தும்.....” பழக்கம் வர வேண்டும்.
“ஈஸ்வரா....!”
என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மகரிஷிகளின்
அருள் சக்திகளை இழுத்துக் கவர்ந்து சுவாசிக்க வேண்டும்.
1.நமக்குள்
வரக்கூடிய விஷத் தன்மையான தீமைகளை நீக்க
2.தனக்குள்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கூட்டி
3.அந்தக்
காந்த சக்தியின் துணையால் எதிர் நீச்சலாகி
4.ஒளியின்
சரீரமாகப் பெற்று
5.நாம்
விண் வெளி செல்லும் அந்த நிலைகள் பெற வேண்டும்.
வியாசகர்
காட்டிய “மச்சாவதாரம்...!” என்பதன் நிலைகள் இது தான்.