ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2018

தீமையான உணர்வுகளை அருள் ஒளி கொண்டு மோதினால் “நாம் ஒளி மயமாகின்றோம்...” ஒளிச் சரீரம் பெறுகின்றோம்...!


யாம் சொல்லும் முறைப்படி நீங்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தியானியுங்கள். அதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அருள் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நம் நாட்டைக் காக்க வேண்டுமென்றால் நம் பிரபஞ்சத்தைக் காக்க வேண்டுமென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கி உங்கள் பேச்சால் மூச்சால்
1.உலக மக்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும் என்றும்
2.இருளை நீக்கிப் பொருள் காணும் தன்மையும்
3.மனித இனம் மனிதனாக வாழும் தன்மையும்
4.உயிரென்ற இனம் உணர்வென்ற ஒளியாக ஒளியான உணர்வு கொண்டு
5.ஒன்று சேர்த்து வாழும் தன்மைகள் நாம் பெற வேண்டும் என்ற நிலைகளில் நீங்கள் முயற்சி எடுங்கள்.

உயிருடன் எல்லா உணர்வும் ஒன்றாகி ஒளி உடலாக நாம் பெற முடியும். பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்தப் பிரபஞ்சமே மாண்டாலும் உலகில் அகண்ட அண்டங்கள்   பல அழிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலமும் அந்தத் துருவ நட்சத்திரமும் என்றும் அழிவதில்லை.

ஏனென்றால் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றது.

எத்தகைய அண்டங்கள் இருந்தாலும் அகண்ட அண்டங்கள் உருவானாலும் ஒரு பிரபஞ்சம் இழுத்து அந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய உணர்வின் தன்மை கொண்டு தான் உயிரணு தோன்றி உயிரணுக்கள் சுழன்று
1.இருளை நீக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றியது… “இதுவே முழுமை…!”
2.முழுமை அடைய வேண்டும் மனிதனான பின் அந்த அருளைப் பெற வேண்டும்.
3.நமக்கு இன்னொரு பிறவி வேண்டாம்
4.இருளை நீக்கும் தன்மை இந்த உடலிலிருந்து தான் பெற முடியும்

நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா. ஒளியைக் காட்டிய பின் இருள் எப்படி நகர்கின்றதோ இதைப் போலப் பேரருள் என்ற உணர்வுகள் நமக்குள் சேர்க்கும் பொழுது நமக்குள் நஞ்சென்ற உணர்வுகள் விலகிச் செல்லும். உணர்வின் ஒளி அலையாக மோதும்.

பொருள்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது உணர்வின் ஒளி அலைகள் எப்படி வருகின்றதோ இதைப்போல தான்
1.தீமை என்ற உணர்வுகள் வந்தாலும்
2.அருள் என்ற வலுவின் தன்மை கொண்டு மோதி
3.ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

உங்கள் எண்ணத்தாலே உங்கள் நோய்களைப் போக்கலாம்.  அருள் ஞானத்தைக் கூட்டும் போது நோயின் உணர்வினைத் தணிக்கலாம்.

மன வலிமை பெற்றால் அதற்கப்புறம் வைத்தியரீதியில் மருந்துகளைக் கொடுத்தால் அந்த மருந்து நமக்கு நல்லதாகும். ஆனால் வேதனை என்ற உணர்வானால் மருந்தே நமக்கு எதிரியாகும். அதுவே விஷத் தன்மையாக மாறும்.

சத்துள்ள உணவாக உட்கொண்டாலும் வேதனை என்ற உணர்வு வந்துவிட்டால் நல்ல உணவும் நமக்குள் விஷமாக மாறுகின்றது. உடலின் நன்மையை நலியச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிலெல்லாம் இருந்து விடுபட்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியும் அவர் உணர்த்திய உணர்வின் தன்மையும் நமக்குள் பதிவாக்கி பதிவான நிலைகளில் நாமெல்லாம் ஒன்றாக இணைவோம் .

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவோம். உலக இருளை நீக்க நாம் பாடுபடுவோம்.

நாம் அனைவரும் அருள் வழியில் வாழப்படும் போது
1.ஒரு விளக்கை வைத்துப் பல விளக்குகளின் வெளிச்சம் ஆவதைப் போல
2.நமக்குள் அனைத்து உணர்வுகளும் ஒளி மயமாக மாறி
3.எதிரியே இல்லாதபடி என்றும் ஏகாந்த நிலையாக
4.நம் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்.

கலி என்ற நிலைகளில் இருந்து கல்கி என்ற நிலைகளுக்கு மாறுவது என்பது இது தான்...!