இப்போது விஞ்ஞானி
ஒருவன் பல பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றான்... செய்கின்றான் என்று வைத்துக்
கொள்வோம்.
அவனுக்குள் கண்டுபிடிக்கும்
உணர்வுகள் ஓங்கி வளர்ந்திருந்தாலும் அவன் இறந்த
பின் எதன் ஆசை கொண்டு உடலை விட்டுப் பிரிகின்றானோ அந்த இச்சை சிவ தனுசாகத் தான் மாறுகிறது.
விஞ்ஞானி குடும்பத்தின்
மேல் பற்று கொண்டு இறந்திருப்பான். அல்லது விஞ்ஞான அறிவில் இன்னும் அதைச் செய்ய வேண்டும்
இதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இறந்திருப்பான்.
இப்படிப்பட்ட ஆசையுடன்
இறக்கப்படும் பொழுது அந்த விஞ்ஞானி மேல் அபிமானம் கொண்ட சீடனாக இருப்பவன் விஞ்ஞான அறிவில்
தேர்ந்தான் என்றால் அவன் கூறிய உணர்வை இவன் பெற்றால் அந்த விஞ்ஞானியின் உயிரான்மா அந்த
சீடன் உடலுக்குள் தான் போகும்.
அதே போல மந்திரங்களைச்
சொல்லி மாயங்களைச் சொல்லி வாழ்வோரும் அதே தத்துவத்தைக் கடைசி நேரத்தில்
1.உதாரணமாக இன்றைய
மதகுருக்களாக இருப்பவர்கள் சொன்னார்கள் என்றால் (அவர்கள் குரு காட்டிய மந்திரம்)
2.அதே உணர்வுடன்
தான் அந்த உயிரான்மாவும் வெளி வருகின்றது.
முதலில் சொன்ன குருவும்
சரி... இப்பொழுது இருப்பவரும் சரி...! அந்தப் பற்று கொண்ட நிலையில் யாரொருவர் அந்த
மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜெபிக்கின்றார்களோ குருவின் ஆன்மா இவர் உடலுக்குள் தாவும்.
ஆக கூடுவிட்டுக் கூடு பாயும்.
அவர் பெற்ற உணர்வுகளை
மீண்டும் இங்கே இவர் உடலுக்குள்ளும் இயக்கப்பட்டு சாகாக்கலை என்ற உணர்வுகளைத் தான்
உணர உணர்த்த முடியும். ஆனால் சாகாக்கலை என்றாலும்
1.அடுத்தவர் உடலில்
வரப்போகும் போது அங்கே விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால்
2.அந்த இச்சையைச்
சாகாக்கலையாக மாற்றி விஷத்தின் உணர்வு கொண்ட உடலாக அடுத்து மாற்றிக் கொண்டே இருக்கும்.
3.இதிலிருந்து யாரும்
தப்ப முடியாது.
“குரு வழி...!” என்று
சொல்லிக் கொண்டு இப்படி வந்தாலும் உடலின் இச்சைக்குச் சிவ தனுசைத் தான் இன்று ஆலயங்கள்
தோறும் காட்டுகின்றனரே தவிர அருள் ஒளி பெற்று இருளை நீக்கி வேகா நிலை பெற வேண்டும்
என்று எவரும் காட்டவில்லை.
மனிதனைப் பண்படும்
நிலைகளுக்கு அகஸ்தியன் கூறிய உணர்வுகளைக் கடைபிடித்து அந்த உணர்வின் வழிப்படி ஒழுங்குபடுத்த
ஞானிகள் (அகஸ்தியனுக்குப் பின் வந்தவர்கள்) நினைத்தாலும் காலத்தால் உடலின் இச்சை கொண்டு
மதப் பற்று கொண்டு மக்களின் நிலைகளில் வெறுப்பு கொண்டு தன் மதம் வேறு தன் இனம் வேறு
என்ற இனப்பிரிவு பாகுபாடாகி விட்டது.
அன்றைய அரசர்களால்
செய்யப்பட்ட நிலைகள் எல்லாவற்றையும் சீர் குலைத்து
1.உணர்வின் தன்மை
மதி கெடும் நிலைகளாக ஆகி
2.மதி கெட்ட உணர்வைச்
சேர்த்து
3.மதி இழந்து செயல்படும்
மிருக உடல்களைப் பெறும் நிலைகள் தான் இன்று உருவாகின்றது.
4.இதைப்போன்ற நிலைகளெல்லாம்
இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
வேகா நிலை பெற என்ன
செய்ய வேண்டும்...?
எந்த ஆலயத்திற்குச்
சென்றாலும் “ஈஸ்வரா...!” என்று உயிரை வேண்டி அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப்
பெறவேண்டும் என்றும் அதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும்
பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
1.இந்த ஆலயம் வரும்
குடும்பங்கள் அனைத்தும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்
2.அந்த மகரிஷியின்
அருள் உணர்வுகள் இங்கு வருவோர் பெற வேண்டும்
3.இருளை நீக்கும்
அருள் சக்தி ஒவ்வொருவரும் பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர்
அனைவரும் பேரருள் பேரொளியாக மாற வேண்டும் என்று
5.ஒவ்வொருவரும் இதை
இணைத்துத் தனக்குள் அந்த உணர்வை உருவாக்கிடல் வேண்டும்.
இது தான் மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி. அவர் காட்டிய வழியில் பேரருளை நமக்குள் பெறுவோம்.
உலக இருளை நீக்குவோம் என்ற உணர்வுடன் நாம் உறுதி கொள்வோம்.
பிறவியில்லா நிலை
என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம். ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...!