ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2019

செய்த தவறுக்காக ரிஷி சாபம் கொடுத்தார்…! பின் அதற்குரிய சாப விமோசனமும் அவர் கொடுத்தார்…! என்று காவியங்கள் உணர்த்துகின்றது – அந்த ரிஷி யார்…?


ரிஷி என்ன செய்தார்…? .செய்த பாவத்திற்காக வேண்டி நீ பாம்பாகப் போ…! என்றும்… பேயாகப் போ…!” என்றும் சாபமிடுவதாக விளக்க உரையைக் கொடுக்கிறார்கள்.

ஐயனே…! நான் அறியாது செய்த பிழைக்கு என்ன செய்வது….?

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அப்பொழுது அவன் கை படும். நீ மீண்டும் மனிதன் ஆவாய். அதனின் அர்த்தம் என்ன…?

ஒரு நல்லவன் தான் நடந்து போகிற பாதையில் பாம்பைப் பார்க்கிறான். அது தன்னைக் கடித்துவிடும்…! என்று அடிக்கின்றான். “மனிதன் அடித்து விடுவான்…!” என்று அது இவனைப் பார்க்கிறது.

1.பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் இவன் பாம்பு உடலுக்குள் வருவான்.
2.பாம்பை இவன் அடித்தான் என்றால் பாம்பின் உயிர் அவன் உடலுக்குள் போகும்.
3,மனித உடலுக்குள் வரும் பாம்பின் உயிர் மனித உணர்வுகளைக் கவர்ந்து மனிதனாகப் பிறக்கின்றது.

அதே சமயத்தில் நீ பேயாகப் போ…! என்றால் என்ன அர்த்தம்.

என்னை இப்படிச் செய்தானே… அப்படிச் செய்தானே பாவி…! அவன் எல்லாம் பாவி உருப்படுவானா…! என்று நினைப்பார்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவன் உடலுக்குள் போகின்றது. அதே உணர்வை வைத்து அங்கே ஆட்டிப் படைக்கிறது.

அப்பொழுது ஐயனே…! இதிலிருந்து தப்பும் வழி எனக்கு ஒன்றுமில்லயா,,,?

நல்லவனுடைய நிழல் உன் மீது படும். நீ உள்ளிருந்து மனிதனாக ஆவாய் என்று ரிஷி சொல்வதாகக் காட்டுவார்கள்.

ஏனென்றால் நமக்கு இப்படிக் குட்டி கதைகளையும் போட்டு விளக்கியும் காட்டுகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் என்றைக்குப் போய் எதை நாம் புரிந்து கொள்ள போகிறோம்.

காவியத் தொகுப்புகளை ஞானிகள் கொடுத்ததில் தப்பில்லை. ஆனால் அதை எல்லாம் எடுத்து அவரவர்கள் சுயநலத்திற்கு எப்படி எப்படியோ திசை திருப்பி விட்டு விட்டார்கள்.
1.அப்போது அந்த ரிஷி யார்….? நம் உயிர் தான்.
2.நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டிப்பது அவனே தான்.

நமக்கு ஆகாதவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம்…! அவன் அப்படித் தான் பட வேண்டும். வேதனைப்பட்டால் தான் அவனுக்கு அறிவு வரும்..! என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவன் படும் வேதனைகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் விஷத் தன்மைகள் வருகிறது.

ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வுகளை நமக்குள் துடைக்கத் தவறினால் அதே உணர்வை உயிர் நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

ஆகையினால் எத்தனையோ கோடி நிலைகளைக் கடந்து பல உடல்கள் மாறி
1.இன்றைக்கு மனிதனாகி விஷத்தை நீக்கும் ஆற்றல் பெற்ற நிலைகளில் இதைச் செய்யத் தவறினால்
2.அதன் படி நான் வளர்த்தேன் என்ற நிலையில்
3.நமக்குச் சாபமிடுகின்றது உயிர் என்று அதை அங்கே தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.
4.ரிஷி என்பது உயிர். அது தான் இங்கே நீ பாம்பாகப் போ...! என்று சாபமிடுகின்றது.

ஆகாதவனைப் பார்த்தால் அப்படித் தான் கஷ்டப்பட வேண்டும் என்று ரசிக்கின்றான். இப்போது இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால் இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…?

பாம்பு என்ன செய்கிறது…? தன்னுடைய விஷத்தால் மற்ற உயிரினங்களைக் கொத்தி அதை ரசித்து உணவாக உட்கொள்கின்றது. ஆக பாம்பாகப் போ…!

ஒருவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் உடலை விட்டுப் பிரிந்தால் பேயாகப் போ…! அவனை அடித்துக் கொல்ல வேண்டும் என்று எண்ணத்துடன் செல்லும் பொழுது பேயாக (ஆவி) அந்த உடலுக்குள் போய் ஆட்டிப் படைக்கின்றது. அதிலிருந்து மீளும் வழி இல்லை.

மந்திரத்தாலோ தந்திரத்தாலோ யந்திரத்தாலோ அந்தப் பேயை ஓட்டி விடுவேன் என்றால் அது ஒன்றும் முடியாது. ஆனால் இன்னொரு ஆவியின் வலிமையைக் கொண்டு இதை அடக்க முடியும். அப்புறம் கொஞ்ச நாள் போனது என்றால்
1.முதல் ஆவியை அடக்குவதற்காகப் புதிதாக ஏற்றிய அந்த ஆவியும்
2.நானும் வந்துட்டேன்டா அண்ணன்…! என்று சொல்லி விட்டு அதுவும் நமக்குள் ஆட்டிப் படைக்கத் தொடங்கும்.
3.மீண்டும் மீண்டும் தாயத்தை இங்கே கட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு முன்னேற்றமும் இருக்காது.
4.ஆயிரம் தாயத்தைக் கட்டி இருப்பார்கள்….! ஆனால்  கை கால் குடைச்சல் இருக்கும்.

குருநாதர் காட்டிய வழியில் இப்பொழுது நீங்கள் தியானம் இருக்கின்றீர்கள். யாருடைய உடலிலாவது ஆவி இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் நான் பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள அந்த ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நிழல் பட்டால் அந்த உணர்வுகள் ஆகும்…?

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்து இரத்ததத்தில் தான் நாம் கலக்கச் செய்கின்றோம். அந்த ஆன்மாக்களும் (ஆவி) இரத்தத்தில் தான் இருக்கிறது.

மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்து இரத்தத்திற்குள் கலக்கும் பொழுது அதைப் பலவீனப்படுத்துகின்றோம். அந்த அருள் ஞானிகளின் உணர்வை வளர்க்கிறோம்.
1.அந்த ஆன்மாவும் அந்தச் சக்தியைச் சேர்ந்து இழுக்கத் தொடங்கினால்
2.நமக்குள் தீமையின் நிலைகள் மாற்றும். சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…!

அப்போது நல்லவன் நிழல் படும் பொழுது மனிதனாக பிறக்கும் தகுதி பெறுகிறது. இதுகளெல்லாம் நமக்குக் காவியங்கள் மூலம் தெளிவாக வாழ வழி வகுத்துக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஞானிகள் சொன்ன அந்த நிலைகளைத்தான் யாம் (ஞானகுரு) உணர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
1.அருள் உணர்வின் தன்மைகளை எப்படிப் பெருக்க வேண்டும்..?.
2.வாழ்க்கையில் வரும் இடையூறுகளிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்…? என்று தெளிவாக்குகின்றோம்.