நியூட்ரான் என்ற நிலையில் மிக மிகச் சக்தி வாய்ந்த விஷத் தன்மைகளை இயந்திரத்தின்
தன்மை கொண்டு கவர்ந்து அதன் உணர்வை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதைப் பக்குவப்படுத்தி
வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
1.தான் கண்டுபிடித்த அந்த விஷ அலைகளை மக்களுக்குள் பாய்ச்சி
2.அவர்களை எப்படிப் புத்தி பேதமாக்கலாம்...?
3.சிந்தனையை எதன் வழியில் இழக்கச் செய்யலாம்...? என்று கண்டு கொண்டுள்ளார்கள் விஞ்ஞான
அறிவு கொண்டு.
ஏனென்றால் மக்களின் சிந்தனைகள் சிதறினால் அந்த நாட்டை எளிதில் தனக்குக் கீழ் கொண்டு
வரலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இருந்தாலும் இத்தகைய அறிவு கொண்ட விஞ்ஞானியும் சரி அவன் கண்டுபிடித்து உற்பத்தி
செய்த நிலைகளில் வெளிப்பட்ட கசிவுகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அவன்
நாட்டிலும் பரவி விட்டது.
1.இதை அவர்கள் முதலில் உணரவில்லை...
2.இப்பொழுது தான் தான் உணரத் தொடங்கியுள்ளார்கள்)
காணாததற்கு பூமி முழுவதும் பரவி இந்தப் பிரபஞ்சத்திலும் அந்த அணுக் கதிரியக்கங்கள்
பரவத் தொடங்கிவிட்டது. அதனால் நாம் இன்று வாழும் இந்தப் பூமியே மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக
மாறப் போகின்றது.
இதில் சிறிதேனும் மக்களைக் காக்க வேண்டும்... மெய் வழியில் அவர்களை அழைத்துச் செல்ல
வேண்டும்...! என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உங்களுக்கு
உபதேசமாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
மனித வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி நஞ்சினை வென்று அதன் உணர்வு கொண்டு
மகிழச் செய்து மகிழ்ந்த உணர்வை விளைய வைத்து என்றும் மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகள்
பெற்று எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் ஆற்றல் பெற்றது அகஸ்தியன் துருவனாகித்
துருவ நட்சத்திரமானது.
அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையில் பிறவியில்லா நிலையை அடைந்து நஞ்சினை
ஒளியாக மாற்றி என்றுமே பேரொளியாக நம் பூமியின் துருவப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பது
தான் துருவ நட்சத்திரம்.
அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி உலக மக்கள் அனைவரும்
இருளை அகற்றிப் பேரருள் பெற வேண்டும் என்று வெளிப்படுத்திய உணர்வை ஏற்றுக் கொண்டோர்
அனைவரும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அவர்களைப் போல நாமும் ஆயுள் கால மெம்பராகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
இணைவோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தையும் நாம் பெற்று நம்முடன்
தொடர் கொண்டோர் அனைவருக்கும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்குவோம்.
தியானம் செய்யும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி
இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற்றுப் பேரருளைத்
தனக்குள் கூட்டி அவர்களுடைய பார்வையில் இருளை
அகற்றிடும் சக்தி பெற வேண்டும் என்று வேண்டுவோம்.
ஒவ்வொரு குடும்பமும் அருள் ஞானக் குடும்பமாக வளர்ந்திட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு பெற வேண்டும்
என்றும் இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.
1.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நிலையாக
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.நாம் இதை ஒரு பிரமாணமாக எடுத்து நமக்குள் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்வோம்.
4.நம் ஒவ்வொருவருடைய மூச்சும் பேச்சும் உலக மக்களை இருளில் இருந்து அகற்றச் செய்யும்
அருள் உணர்வாக நாம் பெருக்குவோம்.
இந்த முறைப்படி அனைவரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி
பெருக்கிய உணர்வுகளை பரப்பச் செய்யும் போது விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவை மாற்றி அமைக்க
முடியும்.
ஆகவே நாம் பார்க்கும் குடும்பங்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி படர்ந்து அவர்கள் பேரின்பப் பெரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று தியானிப்போம்...
தவமிருப்போம்.
உலக மக்கள் அனைவருமே துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைந்து துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் வாழ்த்துவோம்.