ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2019

மெய் ஞானிகள் இயற்றிய பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!


திருவள்ளுவர் அன்று பாடினார்…. அதற்கு எத்தனை பேர் இன்று வியாக்கியானம்  கொடுக்கின்றார்கள்...?
1.இப்படிச் சொல்லியிருக்கிறார்…
2.அப்படிச் சொல்லியிருக்கிறார்…
3.இதற்காக வேண்டி இப்படிச் சொன்னார்... இல்லை அப்படிச் சொல்லிருப்பார்… என்று
4.அவரவர்களுடைய அனுமானங்கள் தான் வருகின்றதே தவிர
5.அன்று திருவள்ளுவர் சொன்ன உறுதியின் தன்மையைப் பெற முடிகிறதா...? அதைப் பின்பற்ற முடிகிறதா...?

அந்தக் காலத்தில் இதைத்தான் பேசியிருப்பார். இதைத்தான் சொல்லியிருப்பார் என்று சொல்லிக் கொண்டே போவார்கள்.

திருஞானசம்பந்தரைப் பற்றி வியாக்கியானப்படுத்தும் போது அவர் இப்படித் தான் பேசினார். அப்படித் தான் பேசினார் என்று இவருடைய கற்பனைகள் தான் இங்கே வரும்.

ஆனால் திருஞானசம்பந்தரின் தாய் வெகு நாளாகப் புத்திர பாக்கியத்திற்காக வேண்டி ஏங்கி இருந்தது. அந்த ஏக்கத்தின் மூலம் அந்தத் தாய் தனக்குள் சுவாசித்து எடுத்துக் கொண்ட வலுவான உணர்வால் அது கருவுறுகிறது.
1.அப்படிப் பத்து மாதம் அந்தச் தாய் சுவாசித்த உணர்வே ஞானப்பாலாக அந்தச் சிசுவுக்குக் கிடைத்தது.
2.அதனால் தான் அவ்வளவு பெரிய ஞானியாக அவர் உருவானார் என்ற நிலையை
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.

இப்படி அந்தத் தாய் கருவிலிருக்கும் பொழுது அவருக்குள் விளைந்த உணர்வுகளே விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வந்தது.
1,எந்தத் தீமையையும் மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர்
2.வலிமை கொண்டவர்... .வலிமை கொண்டு வாழும் நிலை பெறறவர்...! என்று இருந்தாலும்
3.பராசக்தி ஞானப்பால் கொடுத்ததால் தான் அந்த சக்தியைப் பெற்றார் என்று வியாக்கியானத்தைக் கொண்டு போகின்றார்கள்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று ஞானிகள் சித்தர்கள் தங்களுக்குள் கண்டுணர்ந்ததை எல்லாம் பாடல்களாகவும் கவிகளாகவும் இயற்றியுள்ளார்கள். அதிலே இருக்கும் ஒவ்வொரு இணைப்பையும் பிரித்துப் பார்த்தால் தான் இந்த உலக நிலைகளை உணர முடியும்.

பட்சிகளைப் பற்றிப் பாடுவார்கள்... மற்ற மிருகங்களைப் பற்றி பாடுவார்கள்.. காகம் குருவி அணில் என்று எல்லா உயிரினங்களைப் பற்றியும் பாடியிருப்பார்கள்.

அதனுடைய குணங்கள் எந்த வழியில் இருந்ததோ அதனின் ஒற்றுமையும் நமக்குள் (மனிதனானபின்) சேர்த்துக் கொண்ட ஒற்றுமையும் இப்படி மற்றதுடன் ஒத்து வாழும் உணர்வின் தன்மையைப் பாடல்கள் மூலமாகக் காட்டுவார்கள்,

ஏனென்றால் நாம் பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக வந்த நிலையில் இதற்கு முன்னாடி மிருக வாழ்க்கையில் வாழ்ந்த நிலையும் பட்சி வாழ்க்கையில் வாழ்ந்த நிலையும்
1.அந்த குணங்களையெல்லாம் ஒன்று சேர்த்து வாழ்ந்த நிலைகளை எதனின் உணர்வை நாம் இன்று சேர்த்துக் கொள்கின்றோம்...?
2.அதை எல்லாம் எதன் வழி நாம் வளர்க்கின்றோம்...?
3.எதன் வழியில் இன்று நாம் வாழுகின்றோம்...? என்பதை வைத்துத்தான்
4.புலமைகளாக அதைப் பாடிக் கொண்டு போவார்கள்.

அந்தப் பாடலுக்கு முழுமையான அர்த்தத்தைக் காண வேண்டும் என்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும். இன்றைக்குள்ளவர்களுக்கு அந்தப் பாடலின் மூலம் தெரியுமா என்றால் தெரியாது.

அந்தப் பாடலின் மூலத்தை அறிய வேண்டும் என்றால் அதை இயற்றிய அல்லது பாடிய அந்த ஞானியின் உணர்வலைகளைச் சுவாசிக்க வேண்டும். அதாவது அவர்கள் வெளிப்படுத்திய அந்த மூச்சலைகளைச் சுவாசிக்க வேண்டும்.

காற்றிலிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசிக்காது நமக்குள் பதிவான பிறிதொரு உணர்வை எடுத்துப் பார்த்தால் அது நம்மைத் திசை திருப்பி விடும். உண்மையை உணரவும் முடியாது மற்றவர்களுக்கு அதை உணர்த்தவும் முடியாது.

காற்றில் மறைந்திருக்கும் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரும் சுவாசிக்க வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.
1.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கிச் சுவாசித்தால்
2.அந்த அலையின் தொடர் நமக்குள் வரும்.
3.அது வளர வளர ஞானிகள் கண்ட மூலத்திற்கே நம்மைக் கொண்டு போகும்.