ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2019

ஞானத்தைப் பெறும் சந்தர்ப்பம்...!

 
காட்சி:-
ஒரு மீனவன் துண்டிலைப் போட்டு மீன் பிடிப்பதைப் போன்றும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதும் தெரிகின்றது.

விளக்கம்:-
மீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் மாட்டியிருக்கும் புழுவை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.

அதைப் போல மெய் ஞானத்தின் சக்தியை பெறத் தன் ஒளியை இந்த உலகிலுள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அந்த ஒளியை எந்த ஆத்மாக்கள் ஈர்க்கின்றதோ அந்த ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் மாமகரிஷிகள்.

குறிப்பிட்ட ஆத்மாக்களைத் தன் சக்தியின் பால் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் ஈர்க்கவில்லை. உலகிலுள்ள எல்லா உயிராத்மாக்களுக்குமே அவர்கள் பெற்ற பேரொளி பாய்ச்சப்படுகின்றது.
1.மற்றவர்களை உயர்த்தி
2.தானும் வளர்ந்து (உயர்ந்து) பேரொளியைப் பெருக்கி
3.அதன் மூலம் இன்னும் பல ஆன்மாக்களை அருள் வட்டத்தில் வளரச் செய்து
4.இப்படித்தான் தன் சக்தியைச் செயலாக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தப் பேரண்ட மாமகரிஷிகள்.

இதைத் தெரிந்து நம் பயணத்தின் பாதையை நாமாகத்தான் அந்த மகரிஷிகளின் பால் செலுத்த வேண்டும். யாரும் வந்து நம்மை அங்கே அழைத்துச் செல்வதல்ல...! (இது முக்கியம்)