கேள்வி:-
அகத்தியர் பற்றி உங்கள் கருத்து
என்ன…? தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது எப்பொழுது..? தீட்சை பெறுவது எப்படி…?
பதில்:-
அகஸ்தியர் என்பவர் பல இலட்சம்
ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டிலே தோன்றிய “நம்முடைய மூதாதையர்…!” ஆவார். தென்னாட்டுடைய
சிவன் அவர். தக்ஷிணா மூர்த்தி என்பவரும் அவர் தான்.
அவருடைய அக்காலப் பெயர் யாருக்கும்
தெரியாது. இருந்தாலும் அவர் அடைந்த மகோன்னதமான உன்னத நிலையை வைத்து அகத்தை அறிந்ததால்
அகத்தியர் என்று காரணப் பெயர் வைத்தார்கள்.
அகத்தை என்றால் தன்னையும்… விண்ணையும்…
மண்ணையும்… அறிந்ததால் அகத்தியர். தென்னாட்டிலே தோன்றியதால் உடல் பெற்றதால் தென்னாட்டுடைய
சிவன். இந்தப் பூமியையே சமப்படுத்தியதால் அவர் எந்நாட்டவருக்கும் இறைவனாக… குருவாக…
தெற்கிலிருந்து தோன்றியதால் “தக்ஷிணா மூர்த்தி…!”
இந்த உலகை மீண்டும் சமப்படுத்தும்
சக்தியை அவரிடமிருந்து தான் அனைவருமே பெற முடியும். உலகம் என்றால்
1.இந்தப் பூமி என்ற உலகையும்
2.நம் (உடல்) உலகமான நம் உயிரான்மாவையும்
தான்.
துருவ நட்சத்திரமும் அவரே. இந்தப்
பூமியில் எந்த மெய் ஞான வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு மூல காரணம் அது தான்.
அப்படிப்பட்ட அகஸ்தியர் அவர் வாழ்ந்த
காலத்தில் நம் பூமியில் தென் துருவமும் வட துருவமும் சென்றவர். அவருடைய மூச்சலைகள்
நாம் வாழும் பூமியில் அதிகம் பரவியுள்ளது.
அவர் வெளிப்படுத்திய அத்தகைய மூச்சலைகளைச்
சுவாசிக்க வேண்டும். அவர் உணர்வைத்
1.தலையிலிருந்து கால் வரை
2.இரத்தங்களிலும் நரம்புகளிலும்
எலும்புகளிலும்
3.உடலில் உள்ள தசைகளிலும் எல்லா
அணுக்களிலும்
4.தலையிலே தண்ணீரை ஊற்றும் (குளிக்கும்)
பொழுதும்
5.தாகத்திற்காக வேண்டி ஒவ்வொரு
முறை தண்ணீரைக் குடிக்கும் பொழுதும்
6.கண் திறந்திருக்கும் நேரத்திலும்
தூக்கத்தில் எழுப்பினாலும் அவர் நினைவு வந்தால்
7.நாம் தூங்கினாலும் “முழித்து
இருக்கிறோம்” என்று தான் அர்த்தம்.
8.அல்லது முழித்திருந்தாலும் அவருடைய
பாதுகாப்பில் “தூங்கிக் கொண்டிருக்கின்றோம்” என்று தான் அர்த்தம்.
என்னைப் பொறுத்தவரை நான் கண்ணை
மூடித் திறந்தால் ஒரு வாரமே போகிறது. பத்து தடவை திறந்து முடினால் வருடமே போய்விடுகிறது.
எனக்கு நேரம் காலம் எதுவும் இப்பொழுது சரியாக நினைவுக்கு வருவதில்லை.
படுப்பதாகவும் தெரிகிறது மீண்டும்
எழுவதாகவும் தெரிகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் படுப்பதும் காலை எழுந்திருந்து எல்லா
வேலையும் முடித்து விட்டு மீண்டும் படுப்பது என்பது “ஒரு நொடி…” போல் இருக்கிறது.
ஆக மொத்தம் மீண்டும் மீண்டும்
படுப்பதாகவும் மீண்டும் மீண்டும் எழுவதாகவும் தான் தெரிகிறது.
1.இந்த லௌகீக வாழ்க்கையில் தனியாக
எங்கேயும் மனம் நிலைக்கவில்லை
2.அகஸ்தியர் உணர்வு தான் எஞ்சி
இருக்கிறது
தீட்சை என்பதை விட அதற்குப் பெயர்
“தீட்சண்யம்…!” என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய தீட்சண்யம் அகஸ்தியரின் மூச்சலைகளைக்
கவர்வதில் தான் உள்ளது.
அவருடைய மூச்சலைகளைக் கவர வேண்டும்
என்றால் அதை ஸ்பரிசித்தவர்களின் (அகஸ்தியரின் அருகாமையை) உணர்ச்சிகள்தான் நமக்கு வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஞானகுருவின்
உபதேசங்களை (LINK) கூர்ந்து கேட்டாலே அந்தத் தீட்சண்யம் எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்.
அதிலே முக்கியமான உபதேசம் இது
தான்…!
"மகரிஷியும் நானும் – அவன்
தான் நான்… நான்
தான் அவன்…!"
அதிலே சொல்லியிருப்பது அகஸ்தியரின்
பரிபூரணமான ஆசை.
1.உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டு
2.அந்த ஞான வித்தை ஆழமாக ஊன்றி
3.திரும்பத் திரும்ப இரத்தங்களில்
கலக்கச் செய்து உடலில் விளைய செய்தால்
4.தூங்காமல் தூங்கும் ஒளி நிலை
என்பதை ஒவ்வொருவருமே அனுபவிக்க முடியும்
உபதேசத்தைப் பதிவாக்கினால் தான்
அது வரும். வேறு யாரும் (தீட்சை) கொடுத்து அதைப் பெறச் செய்ய முடியாது. இது சாப்பாடு…!
மண்ணிலிருந்து விளையும் விளைச்சல்…! (ரெடிமெட் ஆக காசு கொடுத்து வாங்குவது போல் வாங்க
முடியாது)
அவரவர்கள் எடுத்துச் சாப்பிட்டால்
தான் அவரவர்களுக்குள் பார்க்க முடியும். உங்களுக்காக அடுத்தவர் சாப்பிட்டால் அவர்களுக்குத்
தான் சத்தாகும்.
தீட்சை அந்த அகஸ்தியரின் ஒலிகளுக்குள்
இருக்கிறது (உபதேசத்திற்குள்) LINK https://wp.me/p3UBkg-1Br. “தீட்சண்யம்...” வேண்டும்
என்பவர்கள் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
தீட்சை அந்த அகஸ்தியரின் ஒலிகளுக்குள்
இருக்கிறது (உபதேசத்திற்குள்) LINK https://wp.me/p3UBkg-1Br. “தீட்சண்யம்...” வேண்டும்
என்பவர்கள் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.