இந்தப் பூமியில்
பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதருமே சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.
சமமான வாழ்க்கையை ஆண்டவன் நமக்கு ஏன் அருளவில்லை என்று எண்ணிவிடாதீர்கள்.
இந்தப் புண்ணிய
பூமியில் பிறந்ததின் நோக்கமே அச்சக்தியின் அருள் பெற்று நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்களை
எல்லாம் நம் நிலையைச் சமமாக்கி வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
அதாவது ஒவ்வொரு
பிறவி எடுக்கும் பொழுதும்
1.அடுத்த
பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி வாழ்ந்திடலாம்
2.சகல தேவரையும்
கண்டிடலாம் என்ற பேராவலுக்காகத்தான் பிறப்பு எடுக்கின்றோம்
பிறவி எடுத்திருந்தாலும்
நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் இன்று இந்த உலகில் உள்ள பாமரர்களின்
நிலை உள்ளது.
மனிதனாகப்
பிறவி எடுத்த நாளிலேயே அடுத்த ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.ஒரே பிறவியில்
தன் நிலை உணர்ந்து சமமான நிலை எய்தி
2.சகல தேவனாக
சூட்சம உலகத்தில் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத்
தெய்வ நிலையாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.
ஆனால் நாம்
எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவியிலும்... இப்பொழுதும்... இன்றும்...
நிறைவு இல்லாமலேயே வாழ்கின்றோம்.
ஆகவே சமமான
நிலை நிலைக்க அந்த ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொள்ள
வேண்டியது மிகவும் அவசியம்.
1.நான் என்ற
நிலையை...
2.நம்மை
ஈசன் இயக்குகின்றான் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்
இவ்வுலக
வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல் நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும்
வாழ்க்கையால்தான் அந்த சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழக்கூடிய தகுதியைப் பெற முடியும்.
அந்தத் தேவாதி தேவர்களின் நிலையையும் எய்திட முடியும்.
சகல தேவர்கள்
என்றால் யார்...? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்.
ஈசன் ஒருவன்
தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அந்த ஈசன் தான் என்னும் பொழுது ”சகல தேவர்கள்” என்று பிரித்துக்
கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்...? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.
1.சகல ரூபங்கள்
கொண்டு
2.ஒவ்வொரு
ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவருக்கு
3.ஆண்டவனாக
வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற
4.“மெய்
ஞானிகளும்... மகரிஷிகளும் தானப்பா அச் சகல தேவர்கள்...!” (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்)
இந்த உலகில்
மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பல கோடி ஆத்மாக்கள் உடலில்லாமல்
ஆத்மாவுடன் (ஆவிகள்) இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது.
1.உலகில்
நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்
2.தன் ஆத்மா
வந்து (தான்) பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்
3.எந்த உடலில்
ஏறினால் அந்த உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை - நன்மையையோ துவேஷத்தையோ
பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை கொண்டும்
4.இப்படித்
தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று உடலுடன் வாழும் மனிதர்களை
6.உடலில்லா
ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டேயுள்ளன.
நாம் நினைக்கின்றோம்...!
நம் எண்ணம்...
நம் உடல்...
நம் ஆன்மா
என்று...!
நம் உடலில்
நாம் மட்டும் வாழவில்லையப்பா.
(நாம் எண்ணுவதைப்
போல் நாம் மட்டும் வாழவில்லை - இது மிகவும் முக்கியமானது)
நம் மன நிலை
எந்தெந்த நிலை கொண்டு மாறுகின்றதோ
1.அந்தந்த
நிலை கொண்ட ஆவி அணுக்கள் நம் உடலில் வந்து எந்தத் திசையிலும் ஏறிக் கொண்டு
2.நம்மையே
ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை
ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக
4.தான் குடியிருக்கும்
கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.
(உடலில்
ஆவிகள் இல்லாத மனிதரே இல்லை என்று சொல்லலாம்)
நம் நிலையைக்
கொஞ்சம் போல மாற்றிக் கொண்டாலே (உணர்ச்சி வசப்பட்டாலே) நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப்
பல அணுக்கள் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளன...! என்பதை இப்பொழுதாவது ஒவ்வொருவரும்
உணர்ந்து கொள்ளுங்கள்.
இதிலிருந்தெல்லாம்
தப்ப வேண்டும் என்றால் நம்முள் அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட
முடியும் என்ற உண்மையை உணர்ந்து பல ஆவி உலக ஆன்மாக்களுக்கு நாம் அடிமையாகாமல் வாழக்
கற்றுக் கொள்ள வேண்டும்.
இது வரை இந்த உலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள்
(பல பிறவிகள்) எல்லாவற்றையுமே நழுவ விட்டு விட்டோம்.
1,இந்தக்
கடைசி நிலை கொண்ட இந்த மனித உடலிலிருந்தாவது
2.நம் உயிரணுவைச்
சமமாக நிலை நிறுத்தி
3.அந்தச்
சகல தேவர்களிடம் (மகரிஷிகளிடம்) ஐக்கியப்படுத்துங்களப்பா...!