ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2019

தியானத்தில் துருவ நட்சத்திரத்தை எப்படி அணுகுவது...?

 

கேள்வி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருள் சக்தியை எப்படி நாங்கள் எப்படி அடைவது...? அதற்குண்டான வழி முறைகள் தேவை ஐயா...!
பதில்:-
கீழே கொடுக்கப்பட்டவைகளைக் கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்.

1.அம்மா அப்பாவை முதலில் எண்ணி அவர்களின் அருளாசி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்
2.கண்களின் நினைவைப் பூமியின் வடக்குத் திசையில் வட துருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்த வேண்டும்
3.அகஸ்தியன துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனைக் கண்களால் பதிவு செய்ய வேண்டும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும். (கண்களில் அந்த ஏக்கம் – அதாவது அதைப் பெறவேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும்) ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை அங்கிருந்து இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.
5.கண்களின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். ஆய்த எழுத்து போல (ஃ) நினைவிலே கொண்டு வர வேண்டும். (புருவ மத்தியைப் பார்க்க வேண்டியதில்லை) ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...! என்று உயிரான ஈசனை எண்ணி வணங்க வேண்டும்.
6.வில்லிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பு போல புருவ மத்தியிலிருந்து நம் நினைவு பூமியின் வட துருவத்தின் வழி நேராக துருவ நட்சத்திரத்திற்குள் சென்ற மோத வேண்டும். அதாவது நம் உடலில் உள்ள எல்லா உணர்வுகளையும் எண்ணங்களையும் “ஒன்றாகத் திரட்டி... தனுசு கோடி...!” ஆக புருவ மத்தியில் “இராமலிங்கமாக்கி” அங்கிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செலுத்த வேண்டும்.
7.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த வலிமையான எண்ணம் கொண்டு “உயிரான ஈசனிடம் கட்டளையாக இட்டு...” துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அந்த இளம் நீல ஒளிக் கற்றைகளைப் புருவ மத்தி வழியாக இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.
8.மேலே சொன்ன முறைப்படி அந்த உணர்வுடன் செய்தால் நம் உயிரில் இருக்கும் காந்தம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைக் கவரத் தொடங்கும்... இழுக்கும்... உயிரிலே புருவ மத்தியிலேயே அந்தத் துருவ நட்சத்திரத்தின் அலைகள் வந்து மோதத் தொடங்கும்.
9.மோத ஆரம்பித்தவுடனே... புருவ மத்தி கனமாகும். சிலருக்கு அரிப்பு போல குறு...குறு என்று உணர்ச்சிகள் ஏற்படும். இப்பொழுது நம் உயிரும் துருவ நட்சத்திரமும் நேர்கோட்டில் இருக்கும். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அல்லது துருவ நட்சத்திரத்துடன் நாம் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.
10.திரும்பத் திரும்ப நம்முடைய நினைவுகள் (1)கண்கள் (2)புருவ மத்தி (3)பூமியின் வட துருவம் (4)துருவ நட்சத்திரம் என்று பழக்கப்படுத்தி உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் “நேரடியாக...!” இணைத்து விட்டால் அது தான் பிராணாயாமம். சுவாசம் சீராக வரும்.
11.உயிரும் துருவ நட்சத்திரமும் இணைந்து விட்டால் ஒரு நிமிடத்திற்கு நம்முடைய சுவாசம் அதாவது இழுத்து மீண்டும் வெளி விடுவது என்பது மாறி
1). துருவ நட்சத்திரத்தின் அலைகளை இழுக்க 5 அல்லது 6 நொடி
2). துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலுக்குள் தம் கட்ட 2 அல்லது 3 நொடி (உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நிறுத்தி வைக்க வேண்டும்)
3). அதே அலைகளின் தொடர்பை எடுக்க நினைவை வெளி விட 5 நொடி
4). ஒரு நிமிடத்திற்கு ஐந்து அல்லது ஆறு தடவை சுவாசமாக அழுத்தமாக ஆனால் சீராக இருக்கும்.

(இதிலே குறிப்பிட்டுள்ள நேரம் முக்கியம் இல்லை. புருவ மத்தியும் துருவ நட்சத்திரமும் நேர் கோட்டில் இருக்க வேண்டும் அது தான் மிக மிக முக்கியம்.)

துருவ நட்சத்திரதை இவ்வாறு அணுகிய பின் அந்த அலைகளை நமக்கு எங்கெங்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகின்றோமோ அங்கெல்லாம் இதே முறைப்படி இணைக்கலாம்.

நாம் பெறுகின்ற இந்தச் சக்தி மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று உயிரான ஈசனிம் வேண்டி அந்த அலைகளை எல்லோருக்கும் பாய்ச்சலாம்.

என்னுடைய நினைவுகள் துருவ நட்சத்திரத்தை இப்படித்தான் அடைந்து கொண்டிருக்கின்றது. இப்படித்தான் அதனுடன் நான் தொடர்பில் உள்ளேன்.

ஒளிக்கற்றைகள் பளீர் பளீர் என்று புருவ மத்தியில் மோதுவதையும் உடலுக்குள் இணைவதையும் உடலிலிருந்து பளீர் என்று ஒளிக்கற்றைகள் வருவதையும் காணுகின்றேன். என்னுடைய அனுபவம் இது...!