உதாரணமாக தண்ணீரின் மீது சூரிய வெயில் அடிக்கடி பட்டதென்றால் விஷம் (POISON)
உண்டாகிறது. விஷத்தின் தன்மை பச்சை பசேலென்று என்ன கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது. அந்தத்
தொட்டியில் உறைகிறது.
அப்புறம் பார்த்தால் கொடி போல உருவாக ஆரம்பித்து விடுகிறது. கொடி போல உருவான
பிறகு மனிதனோ மற்ற உணர்வின் உணர்ச்சிகளோள் அதிலே படும்போது அதற்குள் சேர்ந்து அணுத்
தன்மை உண்டாகிறது.
தொட்டியிலே முதலில் தண்ணீர் இருக்கும் பொழுது பார்த்தால் ஒன்றும் இருக்காது.
ஆனால் மேலே சொன்ன நிலைகள் ஆன பின் பார்த்தால் தண்ணீருக்குள் கொச… கொச… என்று நெளிந்து
கொண்டிருக்கும்.
இது எங்கிருந்து உற்பத்தியாகிறது…? சூரியனின் ஒளிக்கதிர்கள் அதனின் உணர்வின்
தன்மை உறையும் போது கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது.
சாதாரணமாக சிறு நீரைக் கழிக்கிறோம் என்றால் இந்த உடலில் உணர்வுகள் அது மோதல்
ஏற்படும். மோதலால் ஏற்படும் உணர்வுகள் உறையும். கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக்
கல் போல வரும். சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதைப் பார்க்கலாம்.
இதே மாதிரி ஒவ்வொரு தன்மையும் நம் இரத்த நாளங்களில் இது கலையும். இதைத் தான் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகளில் விஷங்கள்
வந்தால் நம் கிட்னி (KIDNEY – சிறு நீரகங்கள்) அந்த இரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்கிறது.
1.ஆகாரத்திற்குள் சேர்ந்து வரும் சில விஷங்களையும் வடிகட்டுகிறது.
2.நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கும் நிலைகளையும் இந்தக் கிட்னி வடிகட்டுகிறது.
3.அதாவது நாம் சுவாசிக்கும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் தான்
மீண்டும் கலக்கிறது. அதை வடிகட்டி அனுப்புகிறது.
வடிகட்டி அனுப்பும் போது வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் என்ன செய்கிறது…?
இதனுடைய உணர்ச்சிகள் தாங்காது வடிகட்டும் தன்மையை இழந்து விடுகிறது.
அதீதமான வேதனை உணர்வுகளை கிட்னி வடிகட்டும் போது விஷங்கள் அதிகமாகத் தாக்கித்
தாக்கிக் கிட்னி பலவீனமடைகிறது. அது பலவீனம் அடைந்து விட்டால் விஷத் தன்மைகள் நம் இரத்த
நாளங்களில் அதிகமாகப் பரவுகிறது.
ஒரு சல்லடையில் ஓட்டை அதிகமானால் தொப்… தொப்…! என்று விழுவது போல் இயக்கச் சக்தியின்
தன்மை… பிழியும் தன்மை முடியாத நிலை வரும் போது கெட்ட அணுக்கள் இரத்தத்தின் வழி கூடி
எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
அதனால் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு வேண்டிய நல்ல உணர்வுகள் கிடைப்பதில்லை.
அசுத்த இரத்தம் பரவும் பொழுது இதயத்தில் உள்ள வால்வுகளில் பம்ப் (PUMP) பண்ணிப் போகும்போது
அந்தக் கழிவுகள் இதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறையத் தொடங்குகிறது.
ஒன்றுக்கு ஒன்று வடிகட்டிச் செல்லப்படும் போது உறைந்து விட்டது என்றால் நம்ம
இதயத்தில் தொந்தரவுகள் அதிகமாகிறது. அப்போது அழுத்தம் அதிகமாகப் போகும் போது இரத்தத்தை
இழுக்கும் சக்தி குறைகிறது.
காற்று அடிக்கும் பம்பில் ஒரு ஓட்டை இருந்தால் சரியாகக் காற்றை இழுத்துத் தள்ள
முடியாது. அதைப் போல்
1.இருதய வால்வுகளில் ரொம்பப் பலவீனப்படுத்தும்.
2.அடிக்கடி மூச்சுத் திணறல் வரும்.
வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் அறியாமல் நுகரும் வேதனைகளையோ கோபத்தையோ
ஆத்திரத்தையோ பயமான உணர்வுகளையோ வடிகட்டத் தவறும் பொழுது அதனால் ஒவ்வொரு நிமிடத்திலேயும்
வேதனை உணர்வுகள் வரப்படும் போது இப்படி நம் கிட்னி செயலிழக்கும் தன்மை வந்து விடுகிறது.
கிட்னி செயலிழந்தால் மற்ற உறுப்புகளும் சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. உங்களுக்கு
வைத்திய ரீதியில் இதை எல்லாம் சொல்கிறேன். நான் (ஞானகுரு) வைத்தியம் படிக்கவில்லை.
இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும்
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப்
புருவ மத்தியில் வைக்க வேண்டும்.
அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும்
வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள்
போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.
3.கிட்னி இதயம் தொந்திரவு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது இப்படி
இதை எண்ணி எடுக்க வேண்டும்.
அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச்
சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும். நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும்
ஆற்றல் பெறும். உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும்.
சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம்
“ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.
இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும்
அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.