
நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்
நாம் தவறு
செய்யாமலேயே சில தவறுகள் நடக்கின்றது. நான் போனேன்… போகும் போது “அந்த இடத்தில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
உடனே ஆ…! என்று அதிர்ச்சியோடு நாம் கேட்போம். இந்த உணர்வுகள்
நமக்குள் படப்பட்டு
1.“அவர்
எந்த வகையில் அந்த விபத்து ஏற்பட்டது…” என்று சொன்னாரோ
2.அதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம்மை அறியாமல் அது இயக்கும்.
3.ரோட்டில்
நடந்து சென்றால் அறியாமலே நம்மை நடுரோட்டிற்கு அழைத்துச் சென்று விடும் ஓரத்தில்
ஒதுங்கிச் சென்றாலும் கூட…!
ஏனென்றால்
நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாதபடியே இவ்வாறு அழைத்துச் சென்று விடும்.
இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால்
அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து “அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் பெற வேண்டும்…”
என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழக வேண்டும்.
ஏனென்றால் நல்ல குணத்துடன் நாம் பார்க்கும் பொழுது தான்…
பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி
விடுகின்றது.
மனக்
கவலையும் மனக் குழப்பமும் இனி எப்படி வாழ்வது…? என்ற நிலைகளில் பல திசைகளுக்கு நம்மை ஆளாக்கி விடுகின்றது.
ஆனால்
உடனடியாக நாம் ஆத்ம சுத்தி செய்தோம் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொண்டே இருக்கின்றோம்.
2.அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.
இது ஒரு பழக்கத்திற்கு
வந்து விட்டால்… அத்தகைய அணுக்கள் நமக்குள் வளர்ந்து விட்டால் நம்மை
அறியாமலே “அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சொல் வரும்…”
உதாரணமாக ஒரு பாடலை
பாடிக் கொண்டே இருக்கின்றோம். அது ஆழமாகப் பதிவாகி விட்டால் பாடல் தொடர்ச்சியாக சரியாக வரும்.
ஆனால் பாடிக்
கொண்டிருந்தாலும் இடைமறித்து அதிலே ஒன்றை தனியாகச் சொல்ல வேண்டும்
என்று குறுக்காட்டினால் இரண்டாவது தடவை அது சரியாக
நினைவுக்கு வராது.
மீண்டும் முதலில்
இருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.
ஏனென்றால்
1.வரிசைப்படுத்தி
வரப்படும் பொழுது அதனுடைய தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே
சிக்கிவிட்டால் அந்த நினைவு நமக்குள் வராது.
3.காரணம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அடுத்தடுத்து அந்த
அடுக்குகளிலேயே அது வருகின்றது.
இதனால்தான்
நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. சந்தர்ப்பத்தால் நாம் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி விழித்திருந்து
பழகுதல் வேண்டும்.
இதைத்தான்
சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.
பிறருடைய
கஷ்டங்களும் நஷ்டங்களும் எப்பொழுது பார்த்தாலும்
1.உடனடியாக
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து
நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.நம் நல்ல
குணங்களை வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.