ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2026

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்


இது என்னுடைய இளம் வயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சி. பக்கத்து வீட்டில் நானும் என் நண்பனும் விளையாடுவோம். எனக்கும் அவருக்கும் 6 மாதம் தான் வயது வித்தியாசம்.
 
ஆனால் படிப்பிலே நான் மட்டம். அன்று அவர் எஸ்எஸ்எல்சி வரைக்கும் படித்தார். நான் சரியாகப் படிக்காததனால் அவருடைய அப்பா என்னுடன் சேரக்கூடாது என்று அவரிடம் சொல்வார். நான் அந்த வீட்டிற்குள் சென்றால் நீ உள்ளே வரக்கூடாது ஓடு…!” என்பார் அவருடைய அப்பா.
 
இவர் அமீனாவில் வேலை செய்தார். இளம் வயதில் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டுக்குத் தான் நான் செல்வேன். ஆனால் அவருடைய அப்பா என்னைத் துரத்தி விடுவார்.
 
நண்பர் படிப்பிலே நன்றாகத் தேறி சர்வேயர் ஆகித் தமிழ் நாட்டு அளவில் உயர்ந்த சர்வேயராகக் கடைசியில் வளர்ச்சி பெற்று ரிட்டயர் ஆனார். அவருக்குப் பெண் குழந்தைகள் ஆறேழு பேர்.
 
அந்த பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுக்க வைத்திருந்த பணத்தைச் செலவழித்தார். பையன்கள் இருவர்
1.ஆனால் அவர்களுக்குப் புத்தி கொடுக்கவில்லை.
2.அவர்கள் செலவழித்துக் கடனை உருவாக்கி விட்டார்கள்.
 
அவருக்குப் பென்ஷன் வருமானம் 5000 ரூபாய் வருகின்றது. ஆனாலும் பையன்கள் இப்படிக் கடனாளியாக ஆக்கிவிட்டார்களே…! என்று என்ற எண்ணங்கள் வந்துவிட்டது.
 
அவர்கள் வாங்கிய கடன் ஒரு லட்சத்திற்கு மேல் சென்று விட்டது. தான் குடியிருக்கும் வீட்டையாவது சமாளித்து விற்று விட்டுக் கடனை அடைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றார்.
 
ஆனால் தாய் தந்தையர் சம்பாதித்த இந்தச் சொத்து இப்படி ஆகிவிட்டதே…” என்று எண்ணுகின்றார் வேதனைப்படுகின்றனர்
1.அதையே வளர்த்துக் கொள்கிறார்.
2.வீட்டை விற்ற பின் எண்ணங்கள் சுருங்குகின்றது. நான்கு மாதத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார்.
 
காரணம் ஏழு எட்டு பெண்கள் இவருக்குக் குழந்தைகளாக இருக்கப்படும் பொழுது இவருடைய தாயை இவர் சரியாகக் கவனிக்கவில்லை.
 
நான் அவரிடம் செல்லும் பொழுது அந்த அம்மா என்னிடம் சொல்லும்.
1.அவனை நன்றாகப் படிக்க வைத்தேன் எல்லாம் செய்தேன் ஆனால் என்னைத் தெருவிலே விட்டுவிட்டானே…!
2.அதனால் தான் அவனுக்குப் பெண் பிள்ளைகளாகக் கிடைத்து
3.அவன் செலவழித்துப் பார்த்தால் தெரியும்அவன் அனுபவிக்கின்றான் என்று சொல்கிறது.
 
காரணம் தன்னுடைய தாய்க்குச் செலவுக்குச் சிறிதளவு கூடப் பணம் கொடுக்கவில்லை. வீடு இருக்கின்றது எல்லாம் இருக்கின்றது. ஆனால் ஆப்பம் சுட்டு அதை விற்று வாழுகின்றது. அதை வைத்துத் தான் அது ஜீவனம் நடத்துகின்றது.
1.தாயினுடைய அந்த மனக்குமுறல் இங்கே விளைகின்றது.
2.ஏனென்றால் பையன் ஒரே பையன் தான் வேற யாரும் இல்லை.
 
இந்த அலைகள் இங்கே வரும் பொழுது…” தொடர்ந்து அதே உணர்வைத் தான் அவருடைய பையன்களும் அவருக்குச் செய்கின்றார்கள்.
 
பென்ஷன் வந்தது இருந்தாலும் கடனாகி வீட்டை விற்று விட்டோம் பையன்கள் இப்படி செலவழித்து விட்டார்கள்…” என்ற உணர்வுகள் விளைந்து சீக்கிரம் ஆளை முடித்துவிட்டது.
 
இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கின்றேன்.