ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2026

ஏகாந்த வாழ்க்கை

ஏகாந்த வாழ்க்கை

ஏகாந்த வாழ்க்கை
 
உலக வழக்கில் நாம் என்ன செய்கிறோம்…?
 
கண்களால் பார்க்கப்படும் போது… ஆணா பெண்ணா…? நல்லவரா கெட்டவரா…? வேண்டியவரா வேண்டாதவரா…? இங்கே நடப்பது எல்லாவற்றையும் பார்த்து விட்டு நான் சும்மா எப்படி இருப்பது…? என்று
1.பிறர் உணர்வை மட்டுமே நுகர்கிறோம்
2.அவர்கள் உணர்வு தான் நம்மை இயக்குகிறது
3.ஈஸ்வரபட்டரின் உணர்வு அல்லது ஞானிகள் உணர்வு நம்மை இயக்குவதில்லை.
 
ஞானிகள் காட்டியது,..!
ஏகாதசி
:-
1.எதுவுமே எதிர்ப்பு இல்லாத நிலை
2.நாம் ஏகாந்தமான நிலைகளில் இருப்பது
 
வைகுண்ட ஏகாதசி:-
1.பிறருடைய தீமைகளை எண்ணாதபடி
2.நமக்குள் சந்தோசமான நிலையிலேயே இருப்பது.
 
ஞானகுரு நமக்குக் கொடுப்பது:-
எத்தனையோ கோடிச் சரீரங்களில் இன்னலைக் கடந்து இந்த இன்னலை நீக்கக் கூடிய வலிமையான மனித உடலைப் பெற்றுள்ளோம். ஆறாவது அறிவையும் பெற்றுள்ளோம்.
 
அப்படிப் பெற்ற நிலையில்
1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.இந்த உயிரணு எதைப் பெற வேண்டும்…?
3.ஆறாவது அறிவை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று
4.ஞானிகள் உணர்த்திய உண்மைகளைத்தான் ங்களுக்குக் கொடுக்கின்றோம்.
 
 
ஈஸ்வரபட்டரின் ஏகாந்த வாழ்க்கை நிலை:-
1.யார் தவறு செய்கின்றார்கள்? என்று நான் பார்ப்பதில்லை
2.எப்படிச் செய்கின்றார்கள்? என்பதை நான் சிந்திப்பதில்லை.
3.நான் அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.
 
காரணம்… உலக மக்கள் பித்துப் பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன்…!
 
நாம் செய்ய வேண்டியது:-
நாம் ஈஸ்வரபட்டரைப் போன்று ஏகாந்த நிலை பெற வேண்டும் என்றால் அடுத்தவர்கள் யார்…? அவர்கள் என்ன செய்கிறார்கள்…? ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று
1.பிறர் உணர்வுகள் எதையுமே நுகராதபடி
2.சாமி (ஞானகுரு) சொன்னதை மட்டும் நாம் செய்ய வேண்டும்.
3.நான் செய்கிறேன்… அடுத்தவர்கள் செய்யவில்லையே…! என்று மீண்டும் அப்படி எண்ண வேண்டியதில்லை.