ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2026

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்


இயற்கையின் நிலைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மனிதனாக உருப்பெற்ற பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்து நமக்குள் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்… நாம் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.
 
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்வினை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு துருவ தியானம் இருந்து பழகுதல் வேண்டும்.
 
கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்போது பார்த்துணர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று இதைக் கலந்து கேட்டறிந்த தீமை வலுப் பெறாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.
 
அதற்குத்தான் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை வைத்துத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.
 
ஏனென்றால்
1.பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.அதன் வழியில் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.
 
மனித உடலிலிருந்து வெளிப்படும் மம் கார்த்திகேயா என்றும் தீமை என்று தெரிந்த பின் அந்தத் தீமை புகாது தடுக்கும் நிலை தான் சேனாதிபதி ஆறாவது அறிவு என்றும்… முருகன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
 
துருவ நட்சத்திரத்திலிருந்து வருவது நஞ்சினை வென்றிடும் சக்தி…? என்று அதை அறிகின்றோம் கார்த்திகேயா. அதை நமக்குள் நுகர்ந்து உருவாக்கினால் தீமை புகாது அதனை அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றும் சக்தி வரும்…”
 
மனிதனா பின் பல கோடிச்ரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து அதன் அறிவாக அறிந்திடும் அறிவைச் சேர்த்துச் சேர்த்து இன்று நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம்.
1.அந்த ஆறாவது அறிவைத் தான் கார்த்திகேயா என்றும்
2.சேனாதிபதி என்றும் தீமைகள் புகாது பாதுகாக்கும் நிலை என்றும்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டியுள்ளார்கள்.
 
 இத்தகைய நிலைகள் வளர்ச்சி பெற்று அதிலே முழுமை அடைந்தவன் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக உள்ளார். அதனின்றி வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
 
அதை உங்களுக்குள் பதிவாக்கி நீங்கள் அதை எடுக்கும் நிலைக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.
1.அதன் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று ஊழ்வினை என்ற வித்தாக வைத்து
2.அதை மீண்டும் நினைவு கொண்டு அருள் ஒளி என்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
 
அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றதே தவிர… யாரோ வந்து அந்தப் பிறவி இல்லாத நிலை நம்மை அடையச் செய்வார் என்று எண்ணுதல் வேண்டாம்.