ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2026

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!


யாம் தெரியாமல் எதையும் உபதேசிக்கவில்லை.
 
உடலுக்குள் சூட்சமமாக என்னென்ன நடக்கின்றது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான் குருநாதர் பல இடங்களுக்கு எம்மை அனுப்பினார்.
 
கூடுமான வரையிலும் குருநாதர் எம்மைப் பல வகைகளிலும் கஷ்டப்படுத்தித் தான் உண்மைகளை எல்லாம் தெரிய வைத்தார்.
 
ஆனால் நீங்கள் கேட்கலாம் குருநாதர் ஏன் என்னைக் கஷ்டப்படுத்தினார் என்று…?
 
1.என் உடலுக்குள் எத்தனை தீமைகள் என்னைக் கஷ்டப்படுத்துகின்றதோ அந்தத் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்.
2.அது போல் ஒவ்வொரு மனித உடலிலும் விளைந்த உணர்வுகள் கஷ்டத்தை எப்படித் தூண்டுகின்றது…? சந்தர்ப்பத்தால் ஏற்படுத்துகின்றது…?
3.அதிலிருந்து அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்குத் தான் அதைச் செய்தார் குருநாதர்.
 
நான் சிறு வயதில் இருக்கும் பொழுது அறியாத நிலைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கின்றேன். அது பதிவாக்காமல் நினைவு இல்லை.
 
வளர வளர செய்த தவறுகளை மறந்து மறந்து வருகின்றேன். மறந்து வந்தாலும் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே அதனின் வேலையைத் தான் செய்யும்.
 
சிறு வயதில் கோலி விளையாண்டிருந்தால் வயதான பின்பும் இங்கே பையன்கள் கோலி விளையாண்டு கொண்டிருந்தால் ஏய் நானும் கோலி விளையாடுகிறேன்…” என்று இந்த உணர்வுகள் தோன்றி அங்கே செல்வோம்.
1.பெரிய மந்திரியாக இருந்தாலும்
2.பார்த்தால் அது இழுத்துக் கொண்டுதான் போகும்.
 
பம்பரத்தைச் சுற்றுகிறார்கள் என்று பார்த்தால் என்ன செய்வோம்…?
 
நானும் சிறு வயதில் பம்பரத்தைச் சுற்றி விளையாண்டேன் என்று அந்த ஆசை தூண்டப்பட்டு என்னிடம் கொடு நானும் சுற்றுகிறேன்…!” என்று இந்த உணர்வுகள் இயக்கத் தான் செய்யும்… நம்மைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.
 
எது பதிவோ…ந்த நிலை நிச்சயம் வந்தே தான் தீரும்.
 
ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும்…? எதைப் பதிவாக்க வேண்டும்…?
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கூர்மையாக விண்ணிலே செலுத்த வேண்டும்.
 
1.அகஸ்தியன் ஒளிச் சுடரான உணர்வு உங்களுக்குத் தெரிய வரும்.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கற்றைகள் வந்து கொண்டிருக்கின்றதுஇளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
3.அதை நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.
 
விஷத்தை ஒடுக்கிய பின் அத்தகைய நீல ஒளியாகத் தான் அது காட்டும். கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்று தான் ஒளி வீசும்.
 
ஆகையினால் ந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற க்க உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும். அதைக் கூர்மையாக எண்ணி எடுக்க வேண்டும்.
 
1.அதை அதிகமாக எடுத்தால் உயிர் அதன் அவதாரமாக நம்மை ஒளியாக மாற்றும்.
2.இதிலே ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை.