
ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்
நமது உயிர்
நட்சத்திரத்தின் தன்மை பெற்றது தான். ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் அதனுடைய தூசிகள்
ஒன்றுடன் ஒன்று மோதி “அதிக அழுத்தமாகும் பொழுது” உயிரணுவாக உருவாகிறது.
அதே போல மின்னல்கள்
ஒலிக்கற்றைகளாக வீசப்படும் பொழுது பலவாறு கல் மண்
இவைகளில் அது கலந்து விடுகின்றது. அவ்வாறு
கலந்து விட்டால் மண்ணிலிருந்து விளையும் தாவர இனங்களிலும் அது கலக்கின்றது.
1.நட்சத்திரங்களின்
இயக்கம் எப்படி இந்த உயிரணுவிற்குள் ஒன்றுடன் ஒன்று கலவையாகித் துடிக்கின்றதோ இது போல
2.இரண்டு
நட்சத்திரங்களின் துடிப்பின் உணர்வலைகள் படரப்படும் பொழுது
3.தாவர இனங்களில்
எதனின் உணர்வு… எதனின் உணர்ச்சி கொண்டு அதிகரிக்கின்றதோ அதன்
வலு கொண்டு தான் தாவரங்கள் விளைகின்றது.
4.கல் மண்ணும் இப்படித்தான் விளைகின்றது.
இதை நமது உயிர் இந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து உணவாக உட்கொள்ளும் பொழுது உயிரின்
துடிப்பு கொண்டு “மூன்று…” என்ற நிலை வரும்.
இரண்டு நட்சத்திரத்தின்
உணர்வலைகள் எதிர்நிலையாகும் பொழுது துடிப்பின் இயக்கச் சக்தி பெறுகின்றது
1.அந்தத் தாவர இனத்தை நுகரப்படும் போது உயிரிலே படும் போது தசைகள் உடலாகின்றது.
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எண்ணம் ஆகின்றது.
3.எண்ணத்தின் உணர்வுகள்
அணுத்தன்மையாக நம்மை இயக்கத்
தொடங்குகிறது.
இப்படித்தான் இயற்கையின்
இயக்கங்கள்… மாற்றங்கள் வருகின்றது.
1.கடவுள் என்ற தன்மை
எதுவும் ஒன்று இல்லை…!
2.அதாவது ஒன்று அல்ல
கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான்
கடவுள்.
அதாவது… மூன்று நிலைகள் கொண்ட உணர்வின்
சத்தாகும் பொழுது அது எந்தச் சத்தைக்
கவர்ந்ததோ அதனை… அதே உணர்வை வளர்க்கும்
சக்தி பெறுகின்றது.
இப்படிப் பல உணர்வுகள் சேர்த்துத் தனக்குள்
வருவதை அகஸ்தியன் தன் வாழ்நாளில் அந்த நட்சத்திரங்களின்
உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
1.உயிர் எப்படி
உருவானதோ அதே போல
2.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வினைத் தன் உடலில் இருக்கக்கூடிய
அணுக்களுக்குச் சிறுகச் சிறுக ஏற்றி
3.மின்னல்கள்
வெளிப்படும்போது அதை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து உடலில்
மாற்றினான்.
உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி அமைத்துத் தான்
துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதற்கு உணவு எது…?
27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதைத் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது.
அதன் வழியில் தான் இன்றைக்கும் நஞ்சினை மாற்றி ஒளிச் சுடராக வீசிக் கொண்டுள்ளது.
சூரியனோ தனக்குள்
இருக்கும் பாதரசத்தால் நஞ்சினை மோதிப்
பிரித்து விடுகின்றது. மனித உடலோ உணவாக
உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக
மாற்றுகின்றது.
1.நஞ்சினை
நீக்கிவிட்டால் நல் உணர்ச்சிகளை ஊட்டும்
ஒளியின் உணர்வுகள் நமக்குள் மிஞ்சுகின்றது.
2.சர்வத்தையும் அறிந்து
கொள்ளும் சக்தி பெறுகின்றது… அது தான்
கார்த்திகேயா…!