
தீமைகள் வரும் நேரத்தில் அதை நன்மை பயக்கும் செயலாக மாற்றும் வழி முறை
நல்ல உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தால்… பிறருடைய
தீமையான உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல அணுக்களில் அது திரை போட்டு விட்டால் என்ன ஆகின்றது…?
1.நம் சிந்திக்கும் நிலைகளுக்கு அதுவே
தடையாக வந்து சேர்ந்து விடுகின்றது.
2.இதைத் துடைக்க வேண்டும்.
அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
என் பார்வை அவர் இருளைப் போக்கும் அருள் சக்தியாக மாற
வேண்டும்.
என் சொல் அவருக்குள் உண்மையை உணர்த்தும் சொல்லாக வரவேண்டும்
என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
1.இந்த உணர்வின் ஒலிகள் படப்பப்படும்
பொழுது நம்மை அவர் எண்ணும் பொழுது “இந்த
உணர்வு அவருக்குள் ஊடுருவும்…”
2.எந்த காரணத்தைக் கொண்டு நாம் அந்த
நல்லதைச் சொன்னோமோ
3.அவருடைய தீமையான உணர்வுகளுக்குள் இது சேரும் போது அங்கே இது முன்னாடி இருக்கும்.
அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னணியில்
இருக்கும். அருள் உணர்வுகளை எடுத்து அதையே
நாம் சொல்லப்படும் பொழுது
1.நாம் சொல்லும் உணர்வுகள் அவனைத்
திருத்தும்
2.இல்லை என்றால் நமக்கு முன்னணியில் இருக்கும் “அவர் உணர்வு” நம்மை மயக்கிவிடும்.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் உண்மையைச் சொல்கின்றோம். அவர் தீமையைச்
சுட்டிக் காட்டுகின்றோம். தீமையான உணர்வுகள் முன்னிலையில்
வருகின்றது அவருக்கு. இந்த உணர்வுகள் முன்னணியில்
இருக்கப்படும் பொழுது அவர் அதை மறுக்கின்றார். அவருக்கு அது எதிர் நிலை.
அதாவது
1.தீமையின் உணர்வுக்கு நாம் சொன்ன நன்மையின் உணர்வு அங்கே மறைத்திருக்கின்றது.
2.அவரிடமிருந்து உருவான தீமையான சொல்களை நாம் கேட்டவுடன் நல்ல உணர்வுக்கு இங்கே திரைமறைவாகின்றது.
3.இருவருக்குமே மறைக்கிறது… அதை மாற்ற வேண்டுமல்லவா…!
அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
இந்தத் தீமையைத் துடைத்து விட்டு அந்த மகரிஷிகளின் நினைவலைகள் கொண்டு சொல்லாகச்
சொல்லப்படும் பொழுது தன்னிச்சையாக அங்கே அவருக்குள் அது ஈர்க்கப்படும்.
பெரிய மனிதர் மாதிரி சொல்ல வந்து விட்டார் என்று முதலில் நினைப்பார்.
1. பின் நாம் வெளிப்படுத்திய அந்த மகரிஷிகளின் உணர்வு சிறுகச் சிறுக அவருக்குள் போகும்.
2.இந்த உணர்வுகள் அங்கே புகுந்து அங்கே ஒரு இக்கட்டான நிலை
வரும்.
3.அப்பொழுது பதில் சொல்ல முடியாது திணறுவார்.
4.அன்று அவர் சொன்னது சரியாகப்
போய்விட்டது என்று திருப்பத்திற்கு வரும் பொழுது நம்மைத் தேடி வருவார்கள்.
இந்த உணர்வின் தன்மை அங்கே இப்படி முடக்கப்படும்
பொழுது சிந்திக்கும் தன்மை நிச்சயம் வரும்.
செய்து பாருங்கள்…!