
தியானத்தில் சக்தி கூட்ட வேண்டிய சரியான முறை
குருவின்
துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான
அந்தப் பேரருளை பெற எண்ணி ஏங்கித்
தியானிப்போம். உணர்வுடன் எண்ணி ஏங்குங்கள்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக்
கொண்டு வாருங்கள்.
ஏனென்றால்
புருவ மத்தியைத் தாண்டித்தான்
உயிருக்குள் மோத நேரும்.
1.காலையிலிருந்து நாம் எடுத்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் இதெல்லாம் முன்னாடி இருக்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப்
புருவ மத்தியில் இணைத்து விட்டால் இது முகப்பிலே வந்து விடுகிறது.
3.நம் உடலுக்குள் அந்த்த் தீமைகள் புக விடாதபடி நாம் தடுத்துக்
கொள்கிறோம்.
புருவ மத்தியில் இவ்வாறு தடுத்துப் பழகிய பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர
வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று உணர்வை வேகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.
நாம்
புருவ மத்தியில் தடுத்து உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து
வலுவாக்கப்படும் பொழுது…
1.அவன் இப்படிச் செய்தான் இவன் இப்படிப் பண்ணுகின்றான் தொழிலில் இப்படி ஆனது குடும்பத்தில் இப்படியானது என்ற
2.இந்த உணர்வுகள் எல்லாமே அனாதை ஆகி விடுகிறது.
3.அனாதையான பின் சூரியனுடைய காந்த சக்தி அவைகளை இழுத்துக் கொள்கின்றது. நம்
ஆன்மா சுத்தமாகிறது…!
4.ஆன்மாவைச்
சுத்தமாக்கும் முறை தான் இது… இப்படித் தான் செயல்படுத்த வேண்டும்.
அப்படி இல்லாதபடி என் பையன் நோயாக இருக்கின்றான் உடல் நலம் பெற வேண்டும் என்ற “இந்த ராகம் பாடினால்…” நோய் தான் அங்கேயும் வளரும்
இங்கேயும் வரும். இதை நீக்க முடியாது.
சில
பேர் இப்படித்தான்… என் பையன் நோய் நீங்க வேண்டும்… நோய் நீங்க வேண்டும்…! என்று தான் தியானித்தேன் என்பார்கள். ஏனென்றால் இந்த உணர்வை எண்ணும் பொழுது
அந்த வேதனை தான் இங்கேயும் வரும். அதை மாற்ற முடியாது.
அவன்
படிக்கவில்லை… படிக்கவில்லை என்று சொல்லிவிட்டு… படிக்காமல்
இருக்கின்றானே… படிக்காமல் இருக்கின்றானே…! என்று இதைத்தான் தியானம் செய்வார்கள்.
1.அப்பொழுது
அவன் மீது வெறுப்பு தான் வருகின்றது… அந்த வெறுப்பு தான் இங்கு தியானம் ஆகின்றது.
2.இது எல்லாம் முறையற்றது.
அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்
முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். அவன்
சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும்
இப்படித்தான் எண்ண வேண்டும்.
ஆனால்
இப்படிச் செய்யாதபடி அந்தப் பையனுடைய உணர்வுகள் இப்படி
இருக்கின்றானே என்று குறுக்கே வந்தால் தியானத்தில் நெளித்துப் பார்ப்பார்கள். ஒன்றும்
முடியாது. அந்தப் பையனின் உணர்வு தான் முன்னாடி வரும். தியானத்தில் அருள்
உணர்வை எடுக்க முடியாது.
அப்பொழுது
அந்த மாதிரி நேரத்தில் என்ன
செய்ய வேண்டும்…?
உடனே
கண்களைத் திறந்து… “நேரடியாக அந்தத்
துருவ நட்சத்திரத்துற்குக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.
அந்தத்
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மாக்கள்
பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி விட்டுக் கண்களை மூட
வேண்டும். உடலுக்குள் அதைச் செலுத்த
வேண்டும்.
இப்படி
நமக்குத் தொல்லை கொடுக்கும் வெறுப்பு வேதனை போன்ற பிற உணர்வுகள்
வந்தால்
1.கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால்
கண்ணின் நினைவைச் செலுத்தி கண் வழி கவர்ந்து
2.பின்
கண்களை மூடி உயிர் வழி உள்ளுக்கே
செலுத்துங்கள்… இந்த உணர்வை வலுவாக்குங்கள்.
3.இதைச் செய்து பாருங்கள்…
தியானத்தில் நிச்சயம் சக்தி உங்களுக்குள் கூடும்.
இந்த
முறைப்படி செய்ய
வேண்டும்.
உங்களுக்குள்
அழுக்கு அதிகமாக இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு நாம் இந்த முறையைக் கையாள வேண்டும். உங்களால் முடியும்.
சிறிது
நாள் முயற்சி எடுத்துச் செய்தால் அந்தப் பழைய உணர்வுகள் எல்லாம் மாறும். “ஒரு புதுமையான
சக்தி கிடைக்கும்…”
நல்ல
நிலைகள் கொண்டு நல்ல செயல்களைச் செயல்படுத்தும் போது பிறருடைய தீமையான
உணர்வுகளைக் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் புகுந்து நோயாக எப்படி உருவாகின்றதோ அதே போல
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை நாம் எடுக்க எடுக்க
2.அது
நமக்குள் புகுந்த தீமைகளை மாற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும்.