
நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்
ஒருவன் என்னைப் பழித்துப் பேசி விட்டான் என்றால்… பதிலுக்கு “அவனை நான் அழித்து விடுவேன்…”
என்ற அசுர உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.
ஆனால் அவனை அழித்து விடுவேன் என்று எண்ணும் போது
1.உயிரான நிலைகளில் இங்கே பழித்து… அழிக்கும்
சக்தியை நமக்குள் வளர்த்து
2.அவனை நாம் “நீ தொலைந்து போவாய்…” என்று சொல்லும் பொழுது
3.முதலில் அந்தத் தொலையக்கூடிய உணர்வு
நமக்குள் வந்து விடுகின்றது.
4.இந்த உணர்வை அவன் கேட்டறிந்த பின்
அவனையும் தொலைக்கிறது.
அதற்குப் பின்… இப்படிச் சொன்னானே இப்படிச் சொன்னானே என்று எண்ணும் பொழுது அது
நம் உடலுக்குள் நோயாக மாறுகிறது. அதே போல்
இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? இப்படிச் சொன்னானே… அவன்
உருப்படுவானா…? என்று அங்கேயும் விளைகிறது. அந்த வித்தாக ஊன்றப்படுகின்றது.
இதைத் தடைப்படுத்துவது தான் நரசிம்மா…! நரசிம்ம
அவதாரம். நரசிம்மன் என்ன செய்கின்றான்…? வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான். நாராயணன் நரசிம்ம ரூபம் எடுத்து வாசல்படியில் வைத்துப் பிளக்கின்றான்.
1.நமக்கு வாசல்படி எது…? மூஷிகவாகனா… நாம் சுவாசிக்கும் வழி.
2.ஒரு கெட்டதைப் பார்த்தால் அது தனக்குள்
வராதபடி அதைத் தடைப்படுத்துவதற்குப் பழக வேண்டும்.
3.அந்தத் திறன் நமக்குள் பிறக்க வேண்டும்.
அந்த திறன் பிறக்க வேண்டுமென்றால் அதற்கு எது வேண்டும்…?
அந்த மகரிஷிகள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும்… அதை உருவாக்கிய அணுக்களிலும்…
அந்தச் சக்தியை இணைக்க வேண்டும்.
இந்த உணர்வின் “மணம்…” வரப்படும் பொழுது கெட்டது வந்தால் பிளக்கும்.
பன்றி எப்படிச் சாக்கடையைப் பிளந்து
அதற்குள் நல்லதை எடுக்கின்றதோ அதைப் போன்று நரசிம்ம அவதாரம்…!
1.நம் சுவாசத்திற்குள் வரக்கூடிய எதுவாக
இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.மெய் ஒளியின் தன்மை நமக்குள் சேர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியாகச் செல்வதுதான் கடைசி கல்கி…”
இயற்கையில்… ஒரு பொருளின் தன்மை தனக்குள் இணைக்கும் சந்தர்ப்பம்
பிரம்மா… சிருஷ்டி. உலகிலேயே மனிதனின்
ஆறாவது அறிவுக்குள் சிருஷ்டிக்கும் எண்ணங்கள்
உண்டு. ஒவ்வொன்றையும் படைக்கும் சக்தி பெற்றவன் தான் மனிதன்.
மனிதனுக்கு ஜாதகம் இல்லை ஜோதிடம் இல்லை…! நாம் எதையெல்லாம்
எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தின் நமக்குள் சிருஷ்டித்து
அந்த உணர்வின் பாதையிலேயே தான் நாம்
நடக்கின்றோம்.
அந்த ஞானிகள் சொன்ன மெய் உணர்வை நமக்குள் எடுத்து அதைச் சிருஷ்டிக்க வேண்டும் ரிஷி. ஆறாவது அறிவின் தன்மை… “ஏழாவது சப்தரிஷி…”
நாதங்கள் கொண்டு உணர்வின் தன்மை பாய்ச்சப்படும்
பொழுது அந்த உணர்வுகள் அங்கே இயக்குகின்றது. அது தான் சப்தரிஷி என்பது. ஏழாவது அறிவு கொண்டு
உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் விண்ணில் இருக்கக்கூடிய நிலைகளைத் தான் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.
1,மனிதனுக்குள் விளைந்த உணர்வுகளை
உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றி
2.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் நிலை தான் அது.
3.அந்த ரிஷியின் தன்மையை நாம் பெற வேண்டும்
4.அதைப் பெறுவதற்கு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் சிருஷ்டிக்க
வேண்டும்.