
“தியானமே எனக்கு வரவில்லை…” என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை
இயற்கையின் நிலைகளாக… மெய் ஞானிகள் கூறிய “உயிருடன் ஒன்றி ஒளியாகும் உணர்வினை…” யாரும் பின்பற்றவில்லை. இப்பொழுது சொன்னாலும் கூட அதை
ஏற்றுக் கொள்வோர் குறைவாகத்தான் உள்ளார்கள்.
தெய்வத்திற்குக் காசைக் கொடுத்தால் தெய்வம் நமக்கு வரம் தரும்… எல்லாம் சரியாகப் போய்விடும்…! என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.
நாம் உணவாக உட்கொண்ட நிலைகள் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்பத்தான் சத்து ஏற்படும். அதைப் போன்று தான் உயர்ந்த
உணர்வுகளை நாம் கவர்ந்து வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் பதிவாகும்.
திட்டியவனை எண்ணும் பொழுது சோர்வும்
சஞ்சலம் எப்படி நமக்குள் வந்து
1.தவறான வழிகளில் நம்மை அழைத்துச்
செல்கின்றதோ அதே போன்று
2.அருள் உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அது “ஞானிகள்
வழியில்” நம்மை அழைத்துச் செல்லும்.
வாழ்க்கையில் எண்ணங்கள் தடுமாறி… கோபமோ வெறுப்போ வேதனையோ சலிப்பு சஞ்சலமோ
வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
நாம் பெற வேண்டும்.
1.அப்போது சஞ்சலங்களை அது மாற்றும். சிந்திக்கும் தன்மை வரும்… முகமும் அழகாகும்.
2.வேதனைப்படும் பொழுது இந்தத் தியானத்தை எடுத்துப் பாருங்கள்.
3.முகத்தில் ஒரு விதமான மலர்ச்சி ஏற்படும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்… தெளிவான வாழ்க்கையும்
வாழ முடியும்.
ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி
அருள் உணர்வைப் பெறுங்கள்.
சிறிது காலம் இவ்வாறு எண்ணினால் போதுமானது. பின்
தன்னிச்சையாக வரும்.
“தியானமே எனக்கு வரவில்லை…” என்று சொல்ல
வேண்டியதில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்களைத் திறந்தபடியே நினைவினை
துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தச் சக்தி பெற
வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் அந்த சக்திகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.
இப்படிப் பயிற்சி எடுத்துக் கொண்டால் நாளடைவில் உணர்வின்
தன்மை வலிமையான பின் எந்தத் தீமையும்
உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
சிலர் பிராணயாமம் என்று சொல்வார்கள். மந்திரங்களைச் சொல்லி பிற உணர்வுகளை நுகர்ந்த பின் “கம்…” என்று இருண்ட
நிலை ஆகிவிடும். விடுபட்டால் அந்த உணர்வின் விஷத்தன்மையே இயக்கும்.
மந்திர ஒலிகள் கொண்டு தெய்வங்களை எண்ணி ஜெபிக்கப்படும் போது அது
நமக்குள் பதிவாகி இறந்த பின்… அதன்
உணர்வை வேறு எவர் எடுக்கின்றனரோ அதே வழிகளில்
(அந்த மனிதன் சென்ற வழி) அவரையும் அழைத்துச் செல்லும்.
ஆனால் இயற்கையின் உண்மை நிலைகள்
1.ஒளியின் உணர்வைப் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப் பழகினால்
2.இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும்.
ஏனென்றால் “வேண்டிய சக்திகள்…” நமக்கு
முன் இந்தப் பூமியிலே பரவி உள்ளது. அதைப் பதிவாக்கி அதை எடுத்து உங்கள் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி
உயிருடன் ஒன்றி வாழும் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும். அதை நாம்
பழகிக் கொள்ள வேண்டும்.
1.குருநாதர் எனக்கு அப்படித்தான் கொடுத்தார்… பல
அனுபவங்களைக் கொடுத்தார்.
2.அருள் உணர்வுகளை எடுக்கும் முறைகளைக்
கொடுத்தார்… அதை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
3.உங்கள் எண்ணத்தால் கவரலாம்… தீமைகளை
அகற்றலாம்… பிறவியில்லா நிலை அடையலாம்.
4.குடும்பத்தில் வரும் கலக்கங்களை மாற்றலாம்… ஒன்றுபட்டு வாழ முடியும்.
கணவன் மனைவி எப்பொழுதுமே ஒன்றி நிலைகள் பெற வேண்டும். மகரிஷிகளின்
அருள் சக்தி மனைவி பெற வேண்டும் என்று கணவனும் கணவன் பெற வேண்டும்
என மனைவியும்
1.எவரொருவர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி வளர்க்கின்றார்களோ
2.நிச்சயம் பிறவியில்லா நிலை
அடைகின்றார்கள்… அரும்பெரும் சக்திகளையும் பெறுகின்றார்கள்.