
எதையுமே சீர்படுத்த “துருவ நட்சத்திர தியானம் மிகவும் அவசியம்…”
இன்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவ ரீதியில் மனிதனுக்கு
வரக்கூடிய நோய்களை மருந்தைக் கொடுத்துக்
குணப்படுத்துகின்றார்கள்.
இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் என்னென்ன நிலை இருக்கின்றது…? என்று கண்டுபிடித்து அதற்குத் தக்க மருந்துகளைக்
கொடுக்கின்றார்கள்.
1.உடலுக்குள் இரத்தத்தின் வழி மருந்து
சென்று
2.அந்த நோய்க்குக்
காரணமான கிருமிகளை வலு இழக்கச் செய்கின்றது…
கொல்கிறது.
ரத்தத்திலே அல்லது உறுப்புகளில் அந்தக் கிருமிகள்…
வைரஸ் எவ்வாறு உருவாகின்றது…? எந்த மருந்தினைக் கொடுத்தால் அந்த வைரஸ் செயலிழக்கும்…? என்று அவர்கள் கண்டறிந்து அந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள்… உடலைச் சரி
செய்கின்றார்கள்.
மருத்துவர்கள் நாடி
பிடித்துப் பார்த்து… இதைச் சாப்பிட்டால் சரியாக வரும் என்று இப்படி எல்லாமே
கொடுக்கின்றார்கள். ஆனால் இதில் சிறிதளவு எதிர்மறை ஆகிவிட்டால் வேறு நோய் வந்து விடுகின்றது.
அதாவது… மருந்தைச் சாப்பிட்டேன் என் வாய்
எல்லாம் புண்ணாகி விட்ட்து. உடலில் சில இடங்களில் கொப்புளித்து விட்டது என்றெல்லாம் சொல்வார்கள்.
வீரிய மருந்தைக் கொடுத்துக் கேன்சரை
நீக்குகிறேன் என்பார்கள். ஆனால்
1.அந்த மருந்து
உடலுக்குள் சென்ற பின் கேன்சர் அணுக்களைக் கொல்வதைக் காட்டிலும்
2.உடலில் இருக்கக்கூடிய
மற்ற நல்ல அணுக்களை எல்லாம் கொன்று விடுகின்றது,
காரணம்… நோய் கடுமையான பின் அதனின் நாடித் துடிப்பு பற்றிச் சரியாகத் தெரியாதபடி மருந்தைக் கொடுக்கப்படும் பொழுது என்ன ஆகிறது…?
1.எந்த நோய் முதலில்
உண்டானதோ அதைக்
குணமாக்கும்.
2.ஆனால் மற்ற நல்ல
அணுக்களுக்கு ரியாக்ஷன்… எதிர் நிலையாகி அதை மாற்றி
விடுகின்றது.
ஆக… எந்த மருத்துவ
முறையாக இருந்தாலும் ஒரு நூல் தவறினால் மறு பக்கம் தீமைகளை
உண்டாக்கி விடுகின்றது. உடல் நலம் பெறச் செய்ய இது போன்று
நாம் செயல்பட்டாலும் கூட அதைச் சமப்படுத்த
வேண்டும்.
அதைச் சமப்படுத்துவதற்கு
1.யாம் சொல்லும் தியானத்தை
எடுத்துக் கொண்டு
2.ஆத்ம சுத்தியைச் சரியான முறையில் வலு
சேர்த்துக் கொண்டால் சீராக்க முடியும்.
3.எதிர்மறையான
நிலைகளையும் தடுத்து நிறுத்த முடியும்.
அதற்குத் தான் காலை
துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.
மனிதனாக இருந்து அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்… துருவனானான். அகண்ட
அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றினான். ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அதிலிருந்து வரும் உணர்வுகளைச்
சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.துருவ நட்சத்திரம் பூமியின்
துருவத்தின் நேர் பகுதியில் இருப்பதால்
2.முதல் பங்காக இங்கே கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகிறது.
3.அதைத் தான் உங்களை நுகரும்படி
அடிக்கடி சொல்கிறோம்.
ஒரு மனிதன்
வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்தால்… அது
நமக்குள் வந்து விடுகிறது. இருவர் சண்டையிடுகிறார் என்று
உற்றுப் பார்த்தால் அதை நுகர்ந்தால் நமக்குள்
அது வந்து விடுகின்றது.
ஒரு தடவை வந்து விட்டால் மீண்டும் எண்ணமாகி நினைவாகி அது வரத்
தொடங்குகிறது. இப்படி மனிதனுக்கு மனிதன் உற்றுப் பார்த்த
உணர்வுகள் கவரப்பட்டு இப்படி நமக்குள் வந்து கொண்டே தான்
இருக்கின்றது. தீமை செய்யும் அணுக்களாக உடலுக்குள் உருவாகின்றது.
ஆனால் இது போன்ற தீமைகளை
எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி
எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்… ஆன்மாவைத்
தூய்மைப்படுத்த வேண்டும்.
நம் ஆன்மா மட்டுமல்ல… நம் உடலில்
இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தையும்
தூய்மைப்படுத்த வேண்டும்.
1.இந்தக் காற்று மண்டலம் விஷத்தன்மை அதிகமாகப் பரவிக்
கொண்டிருக்கும் நேரத்தில்
2.துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள்
தீமை புகாது… நோய் வராது… தடுக்க
வேண்டும்.