
எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்
ஒவ்வொரு குணத்திற்கும்
ஒரு சக்தி உண்டு. அதைக் காட்டுவதற்குத் தான் காளி மாரி சாமுண்டீஸ்வரி சண்டாளேஸ்வரி
என்றார்கள். கொடிய தீமைகளை உருவாக்கும் குணங்களை "சண்டாளேஸ்வரி..." என்று கூட அதற்குக் காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.
அதன் இனத்தைப்
பெருக்கும் சக்தியைப் பெறுகிறது என்று சிவனுக்குள் சக்தியாக
உருவாக்குகின்றது. அதாவது… உடலான சிவத்திற்குள் அணுக்களின் தன்மைகள் கொடூர உணர்வுகளைக் கொடூரம் என்று உணர்ந்து நுகர்ந்தாலும்… நல்ல உணர்வுகள் விலகிச் செல்லக் காட்டினாலும்… அந்த உணர்வு இயக்கி உணர்ச்சியைத் தூண்டி “நம்மை மாற்றும் நிலைக்கு…” உருவாக்கி விடுகிறது.
இப்படி நுகர்ந்த உணர்வுகள் கடினமாக்கப்படும் பொழுது
1.இந்த
உடலான சிவத்தையும் நுகர்ந்த அந்தச்
சண்டாள உணர்வுகள்… சக்தி
சிவனை வீழ்த்தி விடுகின்றது.
2.இதைத்தான்
சிவனைத் திரிசூலத்தால் தாக்கிக் கீழே
காலில் மிதித்து வைத்திருக்கிறார் என்று கூறுவார்கள்.
நாம் நுகர்ந்த
உணர்வே சிவமாகின்றது என்ற நிலையும் செயலற்ற நிலையில் நாம்
அதன் கீழ் அடங்கி விடுகின்றோம். அதன் வழி கொண்டு நாம்
செயல்பட முடியாதபடி ஒடுங்கப்படும் பொழுது எதன் உணர்வின் தன்மையோ அதனை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது என்ற
நிலை தெளிவாக்கப்படுகின்றது.
சற்று
சிந்தித்துப் பாருங்கள். ஞானிகள் காவியங்களைப் படைத்தாலும் ஒவ்வொரு குணத்திற்கும் உருவத்தைக் கொடுத்து அதற்குண்டான நிறத்தைக் கொடுத்து அதனுடைய செயலாகங்களைக் காவியமாக படைத்து… அதனை உற்று நோக்கப்படும் பொழுது ஒவ்வொன்றையும்
நாம் அறியும் வண்ணமாகக் காட்டி
உள்ளார்கள்.
1.நம்மை
அறியாது நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள்
விளைந்து விட்டால் என்ன செய்யும்…?
2.அதனுடைய
ரூபங்கள் எப்படி மாறும்…?
3.நுகர்ந்த
நிறங்கள் எப்படி மாறும்…? என்று அவர்கள்
காட்டிய வழிகளில் நாம் நுகர்கின்றோமா…?
பல பல நிறங்கள் சிவப்பு கருப்பு நீலம் மஞ்சள் என்று வந்தாலும் அவைகள்
ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது அதனுடைய நிறங்கள் மாறுகின்றது. அதிலே உருவாகும் உணர்ச்சிகள் மாறுகின்றது.
வித்தியாசமான நிற ஆடையை
அணிந்தால் உடனே சோர்வாகும். நீலக் கலரைப் பார்த்தால் இருட்டடையும் நிலை வருகின்றது. மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் பளிச் என்று இருக்கும் இளம் மஞ்சளைப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் ஆகின்றது. அது ஒளியாகக் காட்டும்
போது தெளிவாகின்றது மனம்.
வெள்ளைத்துணி
அணிந்து இருப்பவரைப் பார்த்தால் பளிச்சென்று தெளிவாகும். இளம் மஞ்சளைப் போட்டிருந்தால் மகிழ்ச்சியூட்டும் நிலைகள் வரும்.
பளிச் என்று
வெள்ளை நிறம் வந்தாலும் கண் கூசும் நிலையும் வருகின்றது.
ஆடையில்
கருப்பும் சிவப்பும் வெள்ளையும் கலந்து இருந்தால் உற்றுப் பாருங்கள். அவர்
முகத்தையும் பாருங்கள்… இருண்ட நிலை
இருக்கும் நுகரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது.
கருப்புச்
சட்டையைப் போட்டுக் கொண்ட பின் திரும்பிப் பார்த்தால் சிந்திக்கும் திறன் இழந்து அந்த உணர்வின் நிலை கொண்டே நம் எண்ணங்களும் செயல்படுவதைப்
பார்க்கலாம்.
ஆடைகளின்
நிறத்திற்குள் இவைகள் எல்லாம் அடங்கியுள்ளது.
இதைத்தான் கீதையில்
நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.கறுப்பு
நிறத்தைப் பார்த்தபின் நம் மனதை இருளடையச்
செய்யும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனை
இழக்க செய்கின்றது.
2.நுகர்ந்ததை இருள் சூழும் உணர்வின் அணுவின் கருவாக உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
அணுவின்
இயக்கம்… அதனின் வளர்ச்சி எவ்வாறு…? என்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள். இதை எல்லாம் உங்களிடம் இப்போது சொல்கிறேன் என்றால் “எனது பாக்கியம்… குருநாதரால் நான்
அறிய முடிந்தது…”
1.அவர்
உணர்த்தியதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது
2.உங்களுக்குள்
இயக்கும் உணர்ச்சியின் நிலைகள் எப்படி
உருப்பெறுகிறது…? என்பதை உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
ஆகவே… ஆறாவது அறிவின் துணை கொண்டு இதையெல்லாம் தெளிவாக்கப்படும் பொழுது “இதைப் பெற
வேண்டும்…” என்ற ஏக்கம் கொள்வோருக்குள் இது
பதிவாகின்றது.
மீண்டும் நினைவு கொண்டால் அதனுடைய ஞானத்தை உங்களுக்குள் பெருக்க முடிகின்றது.