ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2026

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்...?

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்...?


இனபேதத்தினால் வரக்கூடிய உணர்வுகள் மனிதனிலிருந்து அது விளைந்தது தான். உற்றுப் பார்த்து அந்த உணர்வுகள் பதிவானது. பதிவு மீண்டும் நினைவாகும் பொழுது எது வலுவோ அது தான் நம்மை இயக்கும்… நம்மையும் அந்தப் பேத உணர்வு இயக்கும்.
 
சந்தர்ப்பத்தால் வரும் இது போன்ற ஒரு தீமைகளை மாற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.  குருநாதர் எனக்குக் கொடுத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
 
அதனை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.இந்தக் காற்று மண்டலத்திலே யார் எந்த வகையில் நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்திருந்தாலும்
2.நமது குரு அருளின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்க முடியும்.
3.அவ்வாறு உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை அடைய முடியும்.
4.து தான் கல்கி ஒளி உடலாக மாற்ற முடியும்திலே சிரமம் ஒன்றுமில்லை.
 
உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் எண்ணத்தால் எண்ணி எடுத்தால் இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு டிவி.யை இன்னென்ன அலைவரிசையில் என்று அதை வைக்கப்படும் பொழுது ஒவ்வொரு ஊரிலிருந்து வெளிப்படுத்துவதை அது கவர்ந்து நமக்குக் காட்டுகின்றது.
 
ஆங்காங்கு ஒளிபரப்பு செய்வதை அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்து எடுத்துக் கொள்கின்றோம்.
 
இதைப் போலத்தான்
1.மக்கள் பேசிய தவறான உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு.
2.அவர்களை எண்ணினால் அந்த லைவரிசையில் நமக்குக் கோபம் வரும் வெறுப்பு வரும் சங்கடம் வரும் இத்தனையும் வரும்.
 
ஆனால் அது த்தனையும் நீக்கியது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குரு துணை கொண்டு கவர்ந்து நமக்குள் எடுத்துக் கொண்டால்
1.”அந்த அலைவரிசை…”
2.தீமைகளை நீக்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வரும்… நம் வாழ்க்கையை உயர்த்தும்.
 
இந்த உயர்ந்த உணவுகள் வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை என்ற நிலையை நாம் அடைய முடியும். அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும். அத்தகைய ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்.
 
1.உங்கள் பார்வையால் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும்
2.உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும்
3.உங்கள் பார்வை அனைவரையும் ஞானிகளாக ஆக்க வேண்டும்.
4.இத்தகைய கூட்டம் அமைய வேண்டும்.
5.இத்தகைய கூட்டங்கள் அமைந்தால் தான் மனிதனுக்குள் இருக்கும் பேதங்களை மாற்ற முடியும்.
 
குரு அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்கள்.
 
இதைப் படிப்போர் இதைக் கேட்போர் அனைவரும் இதன்படி செயல்பட்டால் பல ஆயிரம் பேராக மாற்றலாம். அந்த ஆயிரம் பேர் பல லட்சக்கணக்கான பேராக மாற்ற முடியும்…” இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.
 
வேம்பின் கசப்பான உணர்வுகள் வரும் பொழுது மற்ற உணர்வலைகள் எப்படி அது விலகி ஓடுகின்றதோ இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை காலை துருவ தியான நேரத்தில் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது தீமை செய்யும் உணர்வலைகளை விலகி ஓடச் செய்யலாம் அல்லது அது இயங்காதபடி தடைப்படுத்தலாம்…”
 
சாதாரணமாக… நம் உடலுக்குள் பல வகைகளிலும் பலருடைய உணர்வுகள் பதிவாகி இருப்பதனால் அதை இழுக்கக்கூடிய திறன் வருகின்றது. உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணம் ஆகின்றது.
 
துருவ தியானத்திலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதை உடலுக்குள் செலுத்தி ந்தத் தீமை உள்புகாது தடுக்க வேண்டும்.
 
அப்படித் தடுத்தால் காலை ஆறு மணிக்குச் சூரியன் உதயமாகும் பொழுது நாம் இழுக்கத் தவறும் அந்த உணர்வுகளை அது மேலே அழைத்துச் சென்று மாற்றி அமைக்கின்றது. நமது ஆன்மா சுத்தமாகின்றது.
 
வாழ்க்கையில் சந்தர்ப்பத்திலே தொல்லை என்று அடிக்கடி வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வலு சேர்த்து தீமை உள்புகாது தடுத்துப் பழக வேண்டும்.
 
தைத் தான் ஆத்ம சக்தி என்று உங்களுக்குத் தெளிவாகக் கொடுக்கின்றோம். நம் குரு எப்படி அருள் வழியில் செயல்பட்டாரோ அது போன்று நாமும் செயல்பட முடியும்.
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுடன் குருநாதர் செயல்பட்டார்.
2.ஒவ்வொரு உயிரையும் ஈசன் என்று மதித்தார்.
3.அதற்குத் தான் போஸ்டிலே கல்லைக் கொண்டு தட்டுகின்றேன்.
4.எல்லோருக்கும் அந்த ஞானம் வரட்டும் அந்த உயர்ந்த உணர்வுகள் பெருகட்டும் என்று சொன்னார்.
 
ஆகவே நாம் அனைவரும் நம் குரு காட்டிய அருள் வழியில் செல்வோம். விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை விடுபடச் செய்வோம்.
 
அந்த அஞ்ஞான வாழ்க்கையின் உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மை இயங்கிடாதபடி மெய் ஞான உலகை நமக்குள் சிருஷ்டிப்போம்…”