
நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்
ஒருவருடைய
செயலைப் பார்த்து “மோசமானவர்…” என்று அவரை நினைக்கின்றோம்
அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்த பின் நாமும் அதை போன்ற
செயலைச் செய்ய தொடங்கி விடுகின்றோம்.
நம்மை
அறியாமலே அது இயக்கும்…!
1.நாம்
தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம்.
2.ஆனால்
“தவறு செய்கின்றான்…” என்று எண்ணியவுடன்
அந்தத் தவறின் இயக்கம் நம்மை இயக்கி
விடுகின்றது.
அதை மாற்றும்
சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகி விடுகிறது.
அந்தத் தவறிலிருந்து விடுபடும்
முறைக்கே உங்களுக்குள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றோம். எண்ணியவுடனே அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.
நாம் பல விதமான
உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். அதிலே வேதனைப்படும் சொல்களைக் கேட்டவுடன் அந்த
உணர்வுகள் உந்திய பின் அதைச்
சுவாசித்து நம் உடல் சோர்வடைந்து விடுகின்றது. வேதனையான
அணுக்கள் வளர்ந்து விடுகின்றது.
1.இரண்டு
நாளைக்கு இந்த உணர்வுகள் சேர்த்தால்
2.இரத்த
நாளங்களில் இது கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.
நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்த நாளங்களில் தான்
கலக்கின்றது. காற்று மண்டலத்தில் எப்படிக் கலக்கின்றதோ இதைப் போன்று தான் இரத்தத்தில்
கலக்கப்படுகிறது.
இரத்தம் தான்
உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணவை எடுத்துச் செல்கின்றது. அதில்
இருக்கும் உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.
நாம் நுகர்ந்தது உயிரிலே ஆவியின் தன்மை அடைந்த
பின் நம் உடலில் ரத்தத்தில் கலந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு செயலாகிறது.
நாம் உணவாக
உட்கொள்ளும்
போது அதிலே நீரைப் பிரித்து விட்டு அதில்
இருக்கக்கூடிய சத்தை இரத்தமாக மாற்றுகின்றது நம் உடல் உறுப்புக்கள்.
இரத்தத்தின்
தன்மை கொண்டு வரும் பொழுது அணுக்களின் ஆகாரம் அதன் வழியில் பெறப்படுகிறது. நல்ல உணவைப் படைத்துச்
சாப்பிட்டாலும் நல்ல உணர்வை எண்ணினால் நல்ல அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கிறது.
அதே சமயத்தில் நல்ல உணவை
உட்கொண்டாலும்
1.வேதனையான
உணர்வைச் சுவாசித்தால் இந்த உணர்வின்
தன்மை இதற்குள் ஆன பின்
2.வேதனை
உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது நல்ல உணவையே உட்கொள்ள முடியாதபடி ஒதுக்கிவிடும்.
ஏனென்றால்
1.நாம்
எண்ணும் உணர்வுகளை உயிர் அதை அணுக்களாக மாற்றுவதும்
2.உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.