
“உங்களுக்குத் தெரியாமலே…” தீமை நீக்கும் சக்தி கொடுக்கின்றேன்
கையில் வைத்திருக்கும் செல்ஃபோனில் நமக்குத் தேவையான எத்தனையோவற்றைப் பதிவு செய்கின்றோம். யார் பேசியது…? என்று தெரிந்து கொள்கின்றோம். பின் நாம் அதைப் பதிவாக்கி
அந்த நம்பர் வந்தவுடன் இன்னார் தான்…! என்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
அதாவது யார் பேசுகின்றார்கள்…? யாரிடம் பேச வேண்டும்…? என்று எல்லாவற்றையும் நாம் அறிந்து அதைப் பயன்படுத்துகின்றோம்.
இதைப் போன்று தான்… “நமது கண்” அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு
செய்கிறது,
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று திரும்ப எண்ணினால் அந்த வேதனை நமக்கு வருகின்றது.
2.அவர்கள் என்னென்ன செய்தார்களோ அந்த நினைவுகள் வருகின்றது.
3.எனக்கு இடைஞ்சல் செய்தானே… அது எல்லாம் நியாயமா…? என்ற எண்ண ஓட்டங்கள் வருகின்றது.
நியாயத்தைப் பேசுவோம்…! ஆனால் இடைஞ்சல்
செய்கின்றார்…! என்று சொல்வோம்.
அப்பொழுது நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் ரத்தத்தில் கலந்து
அணுவாக வளர்ச்சி பெற்றுப் பெருகத் தொடங்குகிறது.
இரத்தத்தில் வேதனை என்ற அணுக்கள் பெருகி விட்டால் அது செல்லும் பாதைகளில் உள்ள… நல்ல அணுக்களுடன்
எல்லாம் போர் செய்யத் தொடங்கும்.
தலை வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது வயிறு வலிக்கின்றது
கால் வலிக்கின்றது என்றெல்லாம் சொல்வோம். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. அந்த அணுக்கள் பெருகுகிறது.
1.ஒரு நான்கு நாள் வேதனைப்பட்டுப்
பாருங்கள்.
2.இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப்
பார்த்தால் அந்த விஷமான அணுக்கள் இருக்கிறது என்று காட்டுவார்கள்.
அது அதிகமாகி விட்டால் மூச்சுத் திணறல் கூட வந்துவிடும்.
நுரையீரலில் வலி கல்லீரலில் வலி கிட்னியில் ஒரு விதமான வலி இருதயத்தில் வலி
என்று வரும்.
ஏனென்றால் இரத்தம் போகும் பாதையில்
எந்தெந்த உறுப்புகளுக்குள் எல்லாம்
செல்கின்றதோ… அங்கெல்லாம் வலி வரத் தொடங்குகிறது.
மருத்துவர்கள் அந்த இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்து விஞ்ஞான அறிவுப்படி அந்த விஷமான
அணுக்கள் எதிலே மடிகிறது…? என்று அதற்குத்தக்க மருந்து கொடுக்கின்றார்கள்.
முன்பிருந்த மருத்துவம் வேறு… ஸ்கேன் வைத்துப்
பார்த்துப் பொதுவான மருந்து கொடுப்பார்கள். இப்பொழுது
1.அந்த இரத்தத்தைப் பரிசீலனை
செய்து அதில் எத்தகைய ரூபமான அணுக்கள்
இருக்கின்றது…?
2.அதற்கு இந்த மருந்தைக்
கொடுத்தால் எப்படி மயக்கமடைகிறது…?
3.அல்லது அது முட்டையிடாமல் எப்படித்
தடுப்பது…? அதை மலடாக்குவது எப்படி…?
ஒரு அணு சென்று விட்டது… அதை மலடாக்க வேண்டும். அப்போது அது
தன் இனத்தைப் பெருக்காது.
1.இனத்தைப் பெருக்கவில்லை என்றால் இங்கே கெடுதல் வராது.
2.இப்படி ஆராய்ச்சி செய்து செயல்படுத்துகின்றனர்.
ரொம்பக் கடுமையாகி விட்டது என்று அதைக் கொல்ல மருந்து
கொடுத்தால் நல்ல அணுக்களும் விஷத்தன்மையாகி
அது கெட்டுப் போய் விடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? அந்தக் கெட்டது உருவாகாதபடி இரத்தத்தில் அந்த அணுக்களை
மலடாக்கி அது முட்டையிடாதபடி தடுக்கின்றார்கள்.
ஏனென்றால் நமக்குள் நடக்கும் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்ள
வேண்டும்.
உயிர் ஈஸ்வரன்… அதற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி… விஷ்ணுவின் மறு அவதாரம்
சீதா ராமன். நாம் சந்தோஷமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உயிரிலே பட்டு உமிழ்
நீராக மாறி நம் உடலில் அணுக்களாக மாறுகிறது.
உயிரைப் போன்றே அணு உண்டாகிறது… சுவைக்கொப்ப
உணர்ச்சிகள் தோன்றுகிறது… அந்த எண்ணங்கள் வருகின்றது.
சந்தோஷமானது நான் சீதா. அதிலிருந்து
வரக்கூடிய உணர்ச்சி தான் எண்ணங்கள்.
1.அது தான் சீதா ராமா…! ராமா சீதா என்று
வராது.
2.உயிர் அந்த உணர்வின் தன்மை ஆகும் போது அந்த எண்ணங்கள் வருகிறது.
அகஸ்தியன் உலகை
அறிந்து கொண்டான்… உணர்வுகளை ஒளியாக மாற்றித்
துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துத் தீமைகளை நீக்க வேண்டும்.
உங்கள் நினைவை அங்கே கொண்டு செல்லும் போது அந்த உணர்வு உங்களுக்குள் உமிழ் நீராக
மாறி அந்தச் சத்து உங்கள் உடலில் ஒளியான அணுக்களாக விளையும். நீங்கள் ஒளியாக வேண்டும்
என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றேன்.
கூர்ந்து கவனிக்கும் பொழுது யாம்
சொல்லக்கூடிய உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப்
பதிவாகின்றது.
1.உங்களுக்குத் தெரியாமல் தான் தீமைகள் வருகின்றது.
2.அதே போல் உங்களுக்குத் தெரியாமலே தீமை நீக்கக்கூடிய
சக்தியை உபதேசத்தின் வாயிலாகக் கொடுக்கின்றேன்.