
நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”
சில பண்பற்ற குடும்பங்களை நாம்
பார்க்க நேர்ந்தால் “என்ன இப்படிச் சண்டை போடுகிறார்கள்…?” என்று எண்ணுவோம்… அதைக்
கவர்ந்து விடுவோம். ஆக… சந்தர்ப்பத்தால் நாம் எதை இப்படி உற்று நோக்குகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
இதை இராமாயணத்தில் வசிஷ்டர்… பிரம்ம
குரு என்று காட்டுவார்கள்.
1.நாம் எதை அறிந்து கொள்ள
விரும்புகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
2.உயிரிலே பட்டால் அந்த உணர்வின்
தன்மை உடலுக்குள் பிரம்மமாகிறது… அது அணுவாக மாறுகிறது.
3.அணுவாகிவிட்டால் அது
எந்தக் குணமோ அந்த உணர்வின் சக்தியாகத்
தான் அது இயக்கும்… அது
தான் அருந்ததி.
4.திருப்பி எண்ணும் பொழுது
அவர்கள் எதைச் செய்தார்களோ அந்த உணர்வைத் திருப்பிச் செயல்படுத்தும் குரு தான் அது.
அதைத்தான் வசிஷ்டர் பிரம்மகுரு அவரின் மனைவி அருந்ததி
என்று சொல்வது.
அதாவது… யார் உணர்வை நுகர்ந்தோமோ அந்த
உணர்வின் சக்தியை மீண்டும் எண்ணும் போது அதனுடைய இனத்தைப் பெருக்கும் பிரம்மமாகிறது. அந்த அசுத்தத்தை
வளர்க்கும் சக்தியாகவே பெறுகின்றது.
ஆகவே… நாம் எதை
ஆசைப்படுகின்றோமோ அதுவே வளர்கின்றது. ஆனால் நாம் ஆசைப்பட
வேண்டியது எது…?
தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதை விடுத்து விட்டு
1.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற
ஆசைப்பட்டால்
2.அது நமக்குள் பிரம்மாகி அதன்
வளர்ச்சியில் நாம் அதுவாக மாறுகின்றோம்.
அதற்குத் தான் அடிக்கடி
யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம் உங்களுக்குள்
அதை நினைவுபடுத்துகின்றோம். எந்த அளவுக்கு இதை
உற்று நோக்கிக் கவனிக்கின்றீர்களோ
1.உங்கள் நெஞ்சின்
எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் இது
பதிவாகின்றது… ரெக்கார்ட் செய்கின்றது.
2.முதுகு பக்கம் இருக்கும்
எலும்பின் நிலை வேறு… முன்பக்கம் உள்ள
எலும்புகளின் இருப்பது வேறு
3.விலா எலும்புகளில் முன்னாடி தான்… அதில் அனைத்தையும்
ரெக்கார்ட் செய்கின்றது.
4.அதிலே உள்ள பவர்
அதிகமானது… எதைப் பதிவாக்குகின்றதோ அதைக் கவரும் சக்தி பெற்றது.
5.ஆகையினால் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே பதிவாக்குகின்றேன்.
6.அதை நினைவு கூர்ந்து
கவரும்… அந்த வலிமை பெறும் சக்தியைத்
தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம்
தியானத்தின் மூலம் பெறுவோம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அதைப் பாய்ச்சுவோம்… அந்த ஆன்மாவைப்
பரிசுத்தப்படுத்துவோம்.
அதைச் சுத்தப்படுத்தும் போது நம்
ஆன்மா தூய்மை அடைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து
அணுக்களின் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவோம்.
இப்படித் தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால் வாழ்க்கையில் எந்த நேரம்
எது வந்தாலும் “உடனடியாக… ஈஸ்வரா என்று உயிரின்பால் நினைவைச் செலுத்தி…” அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும்.
நாங்கள் பார்ப்பவர்கள்
அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களை அறியாது சேர்ந்த பகைமைகள் அகல வேண்டும் என்று நாம் இதை எண்ணி எடுக்க முடியும்.
1.நமக்குள் பகைமை வராது தீமைகள் வராது
தடுத்துக் கொள்ள முடியும்.
2.என்றென்றும் நாம் மகிழ்ந்து வாழ
முடியும்.