ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2024

ஆத்மாவின் முழுமை புலப்படும் வழி

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்...” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”
3.வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா...?

எண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது... விளை பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே...!”

அஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைபொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.

1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட
2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்
3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்... இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்... ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் - பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி...
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ...
3.அகண்ட... பிரகாச... பேரின்ப ஜோதியாக...
4.ஆத்மாவாக - உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு... காரணம்... ஆனந்தம்...! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ...
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி...!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது...!”