ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2024

குனிந்து (விலகிச்) செல்ல வேண்டிய பக்குவம்

“வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம்” எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி...!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ...?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன...? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்...?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் - அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து… ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம்… ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருள் எடை காட்டும் கல் ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு ஆவதைப் போல் அந்த அனுபவ ஞானம் தன் நிறை காண சபரியிடம் பதம் பார்த்தான்.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் சூட்சம விளக்கம் உள்ளது. இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி.

இந்த ஏக்கத்தில் பூர்த்தி செய்ய எப்படிச் சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்டிட்ட வழி காட்டும் குரு பூரணத்துவம் நிறைவு பெறாத் தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் வழியமைத்தான்.

தெளிவின் தொடர்பில் மகரிஷிகளின் தொடர்புபடுத்திப் பெறும் ஜடாக்கினி சக்தி ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட மனித மனங்களின் ஜீவ ஏக்கம் சிஷ்யர்கள் என்ற தொடர்பில் சங்கடமற்று சமமான பாவனையில் நிலை கொண்டிட்டுச் செயலுறும் பொழுது அந்த உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து தெளிந்து சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பில் தொடர்புகளில் தொடர்பு கொண்டு ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும்… இலட்சியத்தை எய்தும்…!

இராமபாணம் திரும்புவதைப் போல்… செயல் கொண்டிட்ட சக்தியும் எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

சபரி மோட்சம் என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் எப்படித் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டு தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று.