1. “கௌரவரம்
குறைந்துவிடுமே” என்று எண்ணி வேதனைப்படுகின்றோம்
நமது கண் காது மூக்கு வாய் உடல் இதைத்தான் பஞ்ச பாண்டவர்கள் என்றார்கள். “நமது கௌரவம் குறைந்து விடுமே…” என்ற உணர்வு
வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும், பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகின்றது.
பஞ்ச பாண்டவர்கள்தான் நம்மை ஆளக்கூடியவர்கள் என்றாலும் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆட்சி புரிவது
கௌரவர்கள்.
ஒருவர் நம்மை தரக்குறைவாகப் பேசி அதை காதால் நாம் கேட்கப்படும் பொழுது நமக்குள் உணர்ச்சியைத்
தூண்டுகின்றது.
அப்போது “கௌரவப் பிரச்சினை” வந்து “இப்படி நம்மைச் சொல்லிவிட்டானே”என்று நமது கௌரவம்
குறைந்ததாக எண்ணி வேதனைப்படுகின்றோம். இப்படி வேதனை என்ற நிலைகள் வரப்படும் பொழுது
விஷத்தன்மைகள் நமக்குள் வருகின்றன.
நமது கண் காது மூக்கு வாய் உடல் இவை ஆட்சி புரிந்தாலும் கௌரவப் பிரச்சினை என்று வரப்படும்பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகிறது என்பதைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.
2. வியாபாரத்தில்
கொடுக்கல் வாங்கலில் வரும் கடுமையான நிலைகள்
1.நமக்குப் பணம் தர வேண்டியவர் தரவில்லை என்று ஒரு பக்கம் வேதனை
2.நாம் தருகிறோம் என்று கூறியவருக்குத் தரவில்லை என்றால் கௌரவம் போய்விடுமே என்று ஒரு பக்கம் வேதனை
3.நமக்குத் தரவேண்டியவன் தருகிறேன் என்று சொல்லித்“தரவில்லையே” என்று கோபமும்
4.ஏமாற்றிவிட்டானே” என்ற வேதனையும்
சேர்ந்து எலிப்பொறியில்
சிக்கியது போன்று ஆகிவிடுகின்றது.
5.இதனின் வேதனைகளாகும் பொழுது அது நமக்குள் நரகாசுரனாக உருப்பெறுகின்றது.
அதே சமயத்தில் மனிதன் ஒருவன் மற்றொருவனை எண்ணி அவன் நமக்கு “நன்மை செய்தான்” என்று எண்ணினால் அவனுக்கு விக்கல் ஏற்படுகின்றது.
அவன் நமக்குத் “தீமைகள் செய்தான்”என்று எண்ணினால் அவனுக்கு புரையேற்படுகிறது
இதைப் போன்று நாம் நமக்குத் தர வேண்டியவனிடம் எனக்குப் பணம் தராமல் இருந்துவிட்டானே என்று உற்று நோக்கும்பொழுது அவனிடத்தில் இதனின் உணர்வுகள் பதிவாகி நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது.
1.அவனிடத்தில் இனம் புரியாத பதட்டம் வரும்.
2.அவருடைய வியாபாரம் குறையும்.
3.அவர் சீராக இயங்கும் தன்மையும் குறையும்.
அவரும் எண்ணுவார், “அவருக்குக் கொடுக்கவேண்டுமே…, சரியான காலத்தில்
அவருக்குக் கொடுக்கவில்லையே..” என்று நம்மை எண்ணி
எண்ணி வேதனைப்படுவார்.
வேதனையின் உணர்வுகள் அவரிடத்தில் விளைகின்றது. கொடுக்க முடியாத நிலையில் அவருடைய வேதனை அதிகரிக்கும் பொழுது நம்மைப் பற்றிய
நினைவு அவரிடத்தில் அதிகரிக்கின்றது.
3. கடனைத்
திருப்பிக் கொடுப்பதற்குப் பதில் அவர் உயிரான்மா நமக்குள் வந்துவிடுகின்றது
இப்படி நம்மால் அவர் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகள் நோயாக மாறுகின்றது.
அவர் நோயுடன் இருக்கும்பொழுது “நீ வேண்டுமென்றே…, எனக்குப் பணம் தரவில்லை”என்று நாம் கடுமையாகப்
பேசும்பொழுது அதனின் உணர்வுகள் அவருக்குள் வளர்ந்து நரகாசுரனாக உருவாகி விடுகின்றது.
அதுமட்டுமல்லாமல் நம்மைப்பற்றிய நினைவு கொண்டு வேதனையின் உணர்வுகளை வளர்த்து
1.அது அவருள் கடுமையான நோயாக மாறி
2.அவருடைய உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால்
3.அவருடைய உயிராத்மா நேராக நம்மிடத்தில் வந்துவிடும்.
4.வாங்கிய பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர் உயிராத்மா
நம்முள் வந்துவிடுகின்றது.
அவர் தமக்குள் சேர்த்துக் கொண்ட நரக வேதனையின் உணர்வுகளை நம்க்குள் இங்கே உருவாக்கிவிடுகின்றது.
இது ஒரு பக்கம். அதே சமயம் “இவர் கேட்டாரே.., அவருடைய பணத்தைக்
கொடுக்க முடியவில்லையே”என்று அவர் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகள் “சாப அலைகளாக” மாறுகின்றது.
இதைப் போன்ற நிலைகள்தான் மற்றவருக்குப் பணம் தர வேண்டிய நிலையில் கொடுக்க முடியாத
பொழுதும் உருவாகின்றது.
அவருடைய சாப அலைகள் வளர்ச்சி அடைந்தபின் அவருடைய உயிராத்மாவும் நம்முடலில் புகுந்து “பேய் மனம்” என்ற நிலையில்
நோயின் நிலைகளை நம்முள் உருவாக்கி விடுகின்றது.
அதன்பின் நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால் மனிதனல்லாத பிறவியாகப் பிறக்கின்றோம். இதைத்தான் “சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன்” என்று சிவதத்துவத்தில்
தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
வேதனையின் உணர்வை நுகர நுகர அந்நிலைகள் அவரிடத்தில் அதிகரித்து யாரை நினைத்து வளர்த்துக் கொண்டாரோ அதன் நிலைகள்
கொண்டு உடலை விட்டு அகன்றால் இந்த உயிராத்மா அங்கே சென்று விஷத்தின் தன்மைகளை உருவாக்குகின்றது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வேதனையின் உணர்வுகளால், நம்மிடத்தில் விஷத்தின் தன்மையான
நரகாசுரன்தான் வலிமை பெறுகிறான். அவனை அடக்க வேண்டும்.
4. நம்மிடம்
தொழில் செய்வோருக்கு வருமானம் அதிகம் வரவேண்டும் என்று தியானிக்க வேண்டும்
காலை 4.00 மணிக்கெல்லாம் எழுந்து “ஈஸ்வரா” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி “துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும்.
எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும், துருவ மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் “ஈஸ்வரா” என்று எண்ணி ஏங்கி
கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி நம் உடலுக்குள் அதனின் உணர்வைப் படரச்
செய்தல் வேண்டும்.
அதன்பின் யார் மீது பகைமை கொண்டோமோ அவர்பால் நினைவைச் செலுத்தி துருவ மகரிஷிகளின் அருள் சக்தி
அவர் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற்று
1.அவருடைய தொழிலில் அதிக வருமானம் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
2.என்னுடைய பணத்தை அவர் எனக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெறவேண்டும் என்று
எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.
3.இந்த மாதிரி நாம் தியானிக்கும் பொழுது விஷத்தன்மையான உணர்வுகளிலிருந்து நம்மை
நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.
4.நமக்கு வர வேண்டிய பணமும் வந்து சேர்கின்றது.