வறுமையிலும் கஷ்டத்திலும் இன்று மாயாஜாலங்களில் சிக்குண்டு
இதிலிருந்து விடுபட மாட்டோமா என்று பிறர் மேல் தான் மனிதர்கள் நம்பிக்கை கொள்கின்றார்களே
தவிர ஒவ்வொரு மனிதனும் தன் மீது நம்பிக்கை இல்லாது இருக்கின்றனர்.
ஜோதிடத்தாலும் மந்திரத்தாலும் யாகத்தாலும் ஜாதகத்தாலும்
வேள்விகளாலும் தான் எதையும் நாம் செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள்
ஒளி நாம் பெறவேண்டும் என்று இந்த உயிருடன் உராயச் செய்யும் பொழுதுதான் அது “உண்மையான
வேள்வி” ஆகின்றது.
ஆகவே, இந்த வேள்விகளை எடுத்துக் கடமையாகச் செய்வோம் என்றால்
நமக்குள் தீமைகள் அகற்றும் எண்ணங்கள் வரும்.
1.இந்த வாழ்க்கையில் நாம் ஒவொருவரும் நம் உயிரைக் கடவுளாக
மதிப்போம்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை ஆலயம் என்று மதிப்போம்.
3.அனைத்தையும் அறிந்திடும் அறிவாக இருக்கும் நம் உயிரை
ஆண்டவனாக மதிப்போம்.
4.ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்ற முடியும் என்ற வலு
கொண்டு தியானிப்போம்.
5.நம்மை உருவாக்கிய தாய் தந்தையரைக் கடவுளாக மதித்து நம்மைக்
காத்தருளிய தெய்வமாக மதிப்போம்
6.நல் வழி போதித்த நம் அன்னை தந்தையரை குருவாக மதித்து
அவர்கள் அருளால் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம்.
7.நம்மை வளரச் செய்த முன்னோர்களையும் குலதெய்வங்களையும்
விண்ணிலே செலுத்தி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
8.அவர்களின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளைப்
போக்க முடியும் என்றும் மனிதன் என்ற முழுமை அடைய முடியும் என்ற நிலைகளில் நாம் பிரார்த்திப்போம்.
தியானிப்போம் தவமிருப்போம்.
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில்
அவர் அனுபவபூர்வமாக அறிவித்த இந்த உணர்வின் தன்மையை நீங்கள் எல்லோரும் பெறமுடியும்.
அதை எல்லாம் எளிதில்
காண முடியும். உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும். அந்த நம்பிக்கையுடன்
நீங்கள் வாழ முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றோம்.
கார்த்திகேயா என்று தெளிந்திடும் ஆறாவது அறிவு கொண்ட நாம்
ஞானிகள் காட்டிய அந்த அருள் வழியில் தெளிந்திட வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட
வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று
2.தீமையிலிருந்து விடுபட்டு “தீமையிலிருந்து நான் விடுபட்டேன்…”
என்று
3,எப்பொழுது நீங்கள் சொல்கிறீர்களோ என் குருநாதரை உங்களில்
காண விரும்புகின்றேன்.
அதைத்தான் குருநாதர் காட்டினார்.
ஒவ்வொரு உயிரையும் கடவுளாக்கி அவர்கள் அறியாது புகுந்த
தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் இந்த உணர்வை “என்று நீ செயல்படுத்துகின்றாயோ..,
என்னை அங்கே காணலாம்…,” என்று குருநாதர் என்னிடம் சொன்னார்.
அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.