ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2017

ஞானிகள் காட்டிய வழியில் நாம் “என்றுமே மகிழ்ச்சியாக” வாழ முடியும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

தீமைகளை நீக்கிடும் அருள் சக்திகளை உங்களுக்குள் பெருக்கியபின்
1.ஒருவரை நீங்கள் பார்த்த உடனே அவர் பிணிகள் ஓட வேண்டும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி பெறவேண்டும்.
3.அந்த ஆனந்த நிலைகள் பெறும் தகுதி பெறவேண்டும்.

எத்தனையோ வகையில் சந்தர்ப்பத்தால் நுகரும் ஒவ்வொரு மனிதனும்… “தான் வேண்டும் என்று” தவறு செய்வதில்லை.

நுகர்ந்த உணர்வுகள் அதனின் ஆசையை ஊட்டி அதன் வழியிலே அவனுக்குள் பெருகச் செய்கின்றது.  அதன் வழியே அவனை வீழச் செய்கின்றது.

இராட்சனாக ஆவதும் அசுர உணர்வு கொள்வதும் தீமையினுடைய நிலைகளில் செயல்படுவதும் தீமையே அவனுக்கு ஒரு சந்தோஷத்தை ஊட்டும். ஆனால் தீமையின் நிலைகளை அவன் தொடர்ந்து செய்தால் மனிதப் பிறவியின் நிலையை இழக்கின்றான்.

தீமை செய்கின்றான் என்று அவனைப் பற்றி எண்ணி நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்த அணுவின் தன்மை வந்து நம்மையும் தீமை செய்வோனாக மாற்றுகின்றது.

அத்தகையை தீமையின் நிலைகளைச் செய்தால்… நாம் பார்த்தால்…, அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.பின் தீமை செய்வோர் அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.
2.பொருளறிந்து செயல்படும் எண்ணங்கள் அவர்களுக்குள் வரவேண்டும் என்று
3.அவரைப் பற்றி நாம் கவர்ந்த உணர்வுகளுடன்
4.இதைக் கலக்கின்றோம்.
5.நமக்குள் அந்தத் தீமைகள் விளையாதபடி தடுத்துக் கொள்கின்றோம்.
6.அவர்கள் நாம் சொல்வதை எடுக்கின்றார்களோ இல்லையோ…!
7.அவன் செய்த தீமையின் விளைவுகள் “நமக்குள் வரக்கூடாது”.

தனித்து ஒரு மிளகாய் காரமாக இருக்கின்றது. இதைப் போன்று மற்ற கடுகு இஞ்சி மிளகு எல்லாமே தனித்த நிலையில் காரமாக இருக்கின்றது. ஆனால், மற்ற பொருள்களுடன் இவைகளைக் கலக்கப்படும் பொழுது சுவையான நிலைகள் வருகின்றது.

இதைப் போலத்தான்
1.பிறிதொரு தீமையான உணர்வை நாம் நுகர்ந்தறிந்தாலும்
2.”அது தனித்து விளையாதபடி”
3.அருள் ஞானிகளின் உணர்வு கொண்டு எடுத்து
4.அதை உள்ளடக்குதல் வேண்டும்.

அதன் உணர்வின் அணுக்களாகிவிட்டால் நமக்குள் அவர்களின் அணுக்கள் தீங்கு செய்யும் நிலைகளாக வராது. ஆகவே இதை “மடக்கிப் பழகுதல்” வேண்டும்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் அகஸ்தியன் சென்ற பாதையில் அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் அவன் துருவனாகி துருவ மகரிஷியான நிலை போல நாமும் அடையலாம்.

திருமணமானவர்கள் கணவனுக்கு அந்தச் சக்தியும் மனைவிக்கு அந்தச் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும். இதை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எண்ணுவதை “மறந்துவிடக் கூடாது”.

ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று எண்ண மறந்துவிட்டால் போய்விடும். இதை மறக்காத நிலைகளில் எடுக்க வேண்டும். கணவனோ மனைவியோ முந்தி உடலை விட்டுச் சென்றிருந்தாலும் இதை எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு. அப்பொழுது அந்த அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் என்று “இணைத்தே…” வாழ்தல் வேண்டும்.

நமக்குள் அதைப் பெறப்படும் பொழுது அதன் வழி இருவருமே அங்கே இணைய முடியும்.


உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விட்டால் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் “ஒன்றி வாழும்” நிலைகள் பெறுகின்றது.