ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2017

“யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை” ஆனால் கடுமையான நோய் வருகிறது என்றால் அதன் காரணம் என்ன...?

விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு இன்று பூச்சி புழுக்களைக் கொல்ல கடும் விஷம் கொண்ட பூச்சி மருந்துகளைச் செடி கொடிகளில் பாய்ச்சுகின்றனர்.

உதாரணமாக நெல் பயிரில் விஷத்தைப் பாய்ச்சியபின் பூச்சிகளும் புழுக்களும் மடிந்துவிடுகின்றன. ஆனால், அந்த நெல் பயிரில் விஷத்தன்மை ஊடுருவி விடுகின்றது.

1.அதில் நெல் மணியை உருவாக்கும் அமிலங்களில் இந்த விஷம் கலந்துவிடுகின்றது.
2.நெல்லுடன் சேர்த்து விஷம் அதிகரிக்கின்றது.
3.அதை(த்தான்) நாம் உணவாக உட்கொள்ளுகிறோம்.

ஏற்கனவே நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றும் நம் உடலில்
1.இத்தகையை பூச்சிகளைக் கொல்லும் விஷம்
2.ஒவ்வொரு உணர்விலும் உணர்வுகளிலும் அதிகமாகின்றது.

இன்று எடுத்துக் கொண்டால் எந்தப் பயிர் ஆனாலும் பூச்சிக்கொல்லி “மருந்து தெளிக்காதபடி விவசாயம் செய்ய முடிவதில்லை.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலும் இந்த விஷத்தின் தன்மையே கலந்துள்ளது.

இப்படி நம் உடலில் சிறுகச் சிறுக நஞ்சின் தன்மை அதிகரிக்கப்படும்போதுதான் நமக்கு கை கால் குடைச்சல் இதைப் போன்ற மற்ற உபாதைகளும் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்யும் நிலைகளும் ஏற்படுகின்றது.

இன்று மனிதனுடைய சிந்தனை குறைந்த செயலுக்கு முழுக்காரணமே நாம் உணவாக உட்கொள்ளும் உணவுப் பொருள்களில் கலக்கப்படும் கெமிக்கல் கலந்த மருந்துகள் தான்.

நாம் பரிணாம வளர்ச்சியில் விஷத்தன்மைகளைக் குறைத்துக் குறைத்து விஷத்தைக் கழிக்கும் உறுப்புகளாக வளர்ந்து தான் இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக உருவாகியுள்ளோம்.

ஆறாவது அறிவாக வளர்ந்து வந்த நாம் இத்தகைய பூச்சிகளைக் கொல்லவும், களைகளைக் கொல்லவும் இதைப் போன்று மனிதனுக்குள் வரும் நோய்களை நீக்கப் பல விதமான விஷமான மருந்துகளையும் எடுத்துக் கொண்டால் விஷங்கள் நம் உடலுக்குள் அதிகரித்துவிடும்.

1.விஷத் தன்மைகள் அதிகரிக்கும் பொழுது
2.வேக உணர்வுகள் கூடி சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு
3.தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகிவிடுகின்றது.
4.குற்ற இயல்புகளும் அதிகமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது என்ற நிலையைச் சிந்தித்தல் வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத் தன்மைகள் பரவப்பட்டு விஷ உணர்வுகளை உணவாக உட்கொள்ளும்போது இதே விஷத்தின் தன்மை இன்னொரு பக்கம் வேறொரு நாட்டில் தெரிவதாக இருந்தாலும்
1.அதைப் பார்த்துக் கேட்டறியும் நிலையில்
2.நமக்குள் அவைகளை ஈர்க்கும் சக்தியாகின்றது
3.அதன் வழியிலும் நமக்குள் அதே நோய்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

ஆடு மாடுகள் மற்ற மிருகங்கள் எல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைத் தன் மலமாக மாற்றிவிடுகின்றது.

மனிதர்களான நாம் பூச்சிகளைக் கொன்றுவிட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு காட்டுகின்றது. ஆக, பூச்சியைக் கொன்று பயிரை உருவாக்குகின்றான்.

ஆனால், பயிரை உருவாக்கினாலும் இந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள் விஷத்தன்மையை ஊட்டிவிடுகின்றது.

இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நம் அனைவரின் உடலுக்குள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது.

விஷத்தன்மையைப் பயிர்களில் தூவப்படும்போது நம் உடலில் பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த உணர்வின் தன்மை விளைகின்றது.

1.அப்படி நம் உடலில் விளையும் விஷத்தை நுகரும் அணுக்கள்
2.அந்த உணர்ச்சியை ஊட்டி
3.அதே விஷ உணர்வை உணவாக எடுக்கத் தொடங்கும்போது
4.நம் உடலில் (புதிதாக) ஒவ்வொரு உறுப்பிலும் கடுமையான நோய்கள் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு நஞ்சினை ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவசியம் நாம் நுகரந்தே ஆக வேண்டும்.

மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள் மின் கதிர்கள் போவதைக் கவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும்போது எதிர்நிலையாகி மின்னல்கள் உருவாகின்றது. மின்னலாகிப் பரவும் ஒளிக்கற்றைகளை நம் உடலிலுள்ள அணுக்கள் அதைப் பெறும்.

அதை நாம் பெறத் தொடங்கினால் “நமக்குள் சிந்திக்கும் திறனும் தீமைகள் நமக்குள் உட்புகாது தடுக்கும் வல்லமையும் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று நம்மை நாம் காத்துக் கொள்கிறோம். நாம் வெளிவிடும் மூச்சலைகளால் இந்தக் காற்று மண்டலத்தையும் தூய்மையாக்க முடியும்.

அத்தகையை திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ளவே நஞ்சை ஒளியாக மாற்றிடும் அந்த “அகஸ்தியனின் அருள் ஞான வித்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.


உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும்.