உதாரணமாக கருடன் கடலுக்கு மேல் பறந்து
கொண்டிருக்கும். கடல் நீருக்குள் மீன் இருக்கும். மீன் கடலுக்கடியில் உள்ளிருந்து மேலே
நீர் மட்டத்திற்கு வருவதற்கு முன்னால்
1.கருடன் மீனின் மணத்தை நுகர்ந்தறிந்து,
2.அந்த மீனை “லபக்...” என்று கவ்விக்
கொண்டு செல்கின்றது.
3.மீன் தண்ணீருக்குள் இருக்கின்றது.
மீனின் உணர்வின் மணத்தை நுகர்ந்தவுடனே “சடாரென்று பாய்ந்து..,” மீனைப் பிடித்து செல்கின்றது.
ஆனால் நாமோ கடலுக்குள் போனாலும் மீனைப்
பிடிக்க முடிவதில்லை. ஆக கருடனின் உணர்வுகள் எப்படி இருக்கும்?
இது போன்றுதான் நமது உணர்வின் இயக்கங்கள்
எதன் வலிமையைச் சேர்த்ததோ அதன் வலுவைப் பெருக்க உதவி செய்கின்றது.
இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக மான் புலியைப் பார்க்கின்றது.
புலியோ மானைத் துரத்துகின்றது. மான் “தீமையிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று புலியின்
வலுவான உணர்வை நுகர்கின்றது.
1.புலியின் தாக்குதலில் மானின் தசைகள்
புலிக்கு இரையானாலும்
2,மானின் உயிரான்மா புலியின் ஈர்ப்பிற்குள்
சென்று
3.புலியின் உணர்வைக் கவர்ந்து வளர்ந்து
4.புலியின் ரூபமாக புலிக்குக் குட்டியாகப்
பிறக்க நேருகின்றது.
இது சந்தர்ப்பம்.
இப்படித்தான் “தீமையிலிருந்து தப்ப வேண்டும்...
தப்ப வேண்டும்...” என்ற உணர்வுகளை எடுத்து எடுத்து பரிணாம வளர்ச்சியில் தீமைகளை வென்றிடும்
ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக நம்மை உருவாக்கியது நமது உயிர்.
கண்களால் பார்த்துத்தான் உணர்ச்சியின்
தன்மையை வளர்க்கின்றது. ஆகையால் கண்ணன் “பிரம்மத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுகின்றனர்.
நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியைப் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குச் செலுத்தி எண்ணிப்
பாருங்கள்.
1.அந்தப் பேரருள் உணர்வை
2.உங்களுடைய கண் உங்களிடத்தில் உருவாக்கும்.
ஞானிகள் காண்பித்த அருள் வழியில் தம்முள்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கித் தீமைகள் தம்முள் வராது காத்துக்
கொள்ளுங்கள்.
பேரின்ப உணர்வுகளை வளர்த்து என்றும்
பதினாறு என்ற பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக வாழ்ந்து
வளர்ந்திட எமது அருளாசிகள்.