முருகனுக்காக வேண்டி முருகனை எண்ணி காவடிகளை எடுத்து வருவார்கள்.
மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டு மந்திர ஒலிகளை எழுப்பிய பின் ஆற்று மணலை எடுத்துக்
கொண்டு போய் சட்டியில் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.
30 நாள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து பல ஆயிரம் பேர் முன் வைத்து காவடியை
எடுத்து வருவார்கள். அந்த 48 நாளும் மந்திர ஒலிகளை மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே
இருப்பார்கள்.
108, 1008 அல்லது ஒரு இலட்சமோ மந்திர
ஒலிகளை எழுப்பி அந்த உணர்வின் தன்மை இவர்கள் ஏங்கி எடுக்கும் பொழுது அந்தக் காலம் உணர்வின்
நினைவாற்றல் பருகப்படும் பொழுது எந்தக் கை கொண்டு இவர் தொட்டாரோ அந்த மணல் சர்க்கரையாக
மாறும்.
இது நமக்குச் சாட்சியாகின்றது.
முருகனுக்காகக் காவடி எடுத்து வந்தேன் நான் இங்கே போய்த் திறந்து பார்த்தேன்.
அங்கே போய்த் திறந்து பார்த்தேன். இல்லை.
இரவும் பகலும் இங்கும் அங்கும் சுற்றுவார்கள். அப்புறம் கடைசியில் பார்த்தால்
சர்க்கரையாக வரும்.
முருகனின் அருள் கிடைத்தது. சர்க்கரை கொடுத்தான் என்று சொல்வார்கள். பார்த்தபின்
பக்தியின் நிலைகள் கொண்டு அதற்காக வேண்டி அதிலே சாய்கின்றோம்.
1.சர்க்கரையை விளையவைத்தான் என்ற
2.இந்த மந்திர ஒலிக்குத்தான் நாம் சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிக் கொண்டோமே
தவிர
3.நம் உணர்வின் தன்மை இனிப்பாக வரும் சாஸ்திரங்கள் இல்லை.
அதே போல நான் (ஞானகுரு) பழனியில் இருக்கும் காலத்தில் மச்சக் காவடி என்று எடுத்து
வருவார்கள். மச்சக்காவடி என்றால் மீனை அறுத்து அதில் மஞ்சள் பொடி போட்டு மற்ற பொருள்களையும்
போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.
பத்துப் பதினைந்து நாள்கள் சுற்றுவார்கள். நானும் கூடப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கின்றேன்.
இந்தக் காவடி எடுத்துச் சுற்றும் பொழுதெல்லாம் சில இடங்களில் வரவில்லை.
அப்புறம் மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த மந்திரங்களைச் சொல்லி அதை எடுத்து
வந்தபின் சரியான நிலையில் வந்தபின் அந்த மீன் உருப்படியாகவே (உயிருடன்) வருகின்றது.
அந்த மீன்களை வையாபுரிக் குளத்தில் கொண்டு விடுகின்றார்கள். கோவிலைச் சுற்றியுள்ள
ஒரு கிணற்றிலும் அந்த மீன்களை விடுகின்றார்கள்.
இதைப் போன்று சேவல் காவடி என்று சேவலைச் சமைத்து மறுபடியும் வந்தபின் இதைப் போல
சேவலும் உருப்படியாக வந்ததைப் பார்த்துள்ளேன்.
ஏனென்றால் இந்த மந்திர ஒலிகளைக் கொண்டு சில நிலைகளைச் செய்கிறார்கள். கந்த புராணத்தில்
எதைச் சொல்லியிருக்கின்றதோ அதற்குள் புராண காவியமாக மாற்றியமைத்து வைத்துள்ளார்கள்.
1.மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதற்குள் படப்பட்டு
2.இது மீண்டும் சரியான பருவம் வரும் பொழுது இணைந்துவிடும்.
3.இதைக் கரையான் மந்திரம் என்பார்கள்,
ஆனால் பக்தி மார்க்கங்களில் இதையெல்லாம் “முருகன் செயல்” என்று நிலைக்கு
வரும் பொழுது
1.அந்த முருகனை வணங்கினால்
2.சாங்கியங்களைச் செய்தால் நமக்கு நல்லது
என்ற நிலையில் தான் இன்று நாம் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்.
ஆனால், அந்த ஞானிகள் சொன்னது பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் அறிவாக
வளர்ந்து வந்த மனிதனின் “ஆறாவது அறிவை” முருகனாகக்
காட்டினார்கள்.
அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை உனக்குள் எடுத்து நஞ்சினை வென்று
ஒளியின் சுடராக “கார்த்திகேயா” என்று பேரொளியாக மாற வேண்டும்.
1.என்றுமே மகிழ்ச்சியின் நிலைகளாக மனிதர்கள் வாழவேண்டும்
2.வாழ முடியும் என்பதை மகிழ்வாகனா (மயில்வாகனா) என்று
3.அந்த ஆட்டங்களைக் காவடி ஆட்டங்களாகக் காட்டினார்கள்.