ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2017

கண்கள் செய்யும் திருட்டு வேலை எது...?

நாம் பாலைத் தயிறாக்கிக் கடைந்து அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுத்து அந்தச் சத்தை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

கண்ணன் வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான். கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு மாடு மிரண்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1.அப்பொழுது அது சுவாசித்த உணர்வின் அணுவிற்குள் இருக்கக்கூடிய
2.“அந்த நுண்ணிய அலையை
3.வெண்ணெயைத் திருடுகின்றான்.

அதை நம் கண்கள் கவர்ந்து அதனின் வலிமையை (வெண்ணையை) உணர்த்தி “மாடு மிரண்டு வருகிறது நீ விலகிச் செல் என்று கண்கள் நம்மை வழி நடத்துகின்றது.

உதாரணமாக இன்று ஒருவன் தான் சம்பாதித்து வீட்டைக் கட்டித் தன் வீட்டிற்குள் பணத்தை வைத்திருக்கிறான். ஆனால், மற்றொருவன் பணம் இருப்பதை அறிந்துணர்ந்து அதைக் கொள்ளையடிக்க வருகின்றான்.

அப்பொழுது கொள்ளையடிக்கக் கூடியவன் அந்த வீட்டை நோக்கி வரும் பொழுது, “அந்த வீட்டிற்குரியவன் எப்படி இருக்கிறான்?” என்று தன் நினைவில் எண்ணிப் பார்க்கிறான்.

அங்கு அந்த ஆள் இருப்பதைப் பார்த்தவுடனே, “அந்த வீட்டிற்குள் அந்தப் பணத்திற்குரியவன் இருக்கிறான் என்று இந்தக் கண்ணனே உணர்த்துகின்றான்.

அதே சமயம் அவன் உடலிலே
1.அந்த வீட்டுக்காரர் இருக்கிறார் என்ற உணர்வில்
2.“அவன் மறைந்து நம்மைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுவான் என்பதை
3.“திருடன் என்ற நிலையில் இவன் எண்ணுகின்றான்.
அந்த உணர்வின் சக்தியைத் திருடனுக்கு அந்தக் கண் தான் காட்டுகின்றது.

வீட்டுக்காரன் இருக்கிறான்.., நீ அந்தப் பக்கம் போகாதே என்கிற நிலையைத் திருடச் செல்பவனுக்குச் சொல்லி “நீ இந்தப் பக்கம் போ என்று வழி காட்டுகின்றது.

1.ஆனால் அந்த வீட்டுக்காரனுக்கோ,
2.“திருடன் வருகிறான்.., அவனை எப்படிப் பிடிப்பது?” என்று
3.முக்கிய ஆலோசனையைக் கண்ணன் சொல்கின்றான்.
4.ஆக, அவன் எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் இருக்கக்கூடிய வெண்ணையை கண்ணன் இவனுக்கும் கொடுக்கின்றான்.

திருடப் போகக்கூடிய இந்த உணர்வின் சத்தை இந்தக் கண் திருடனுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையையே அங்கே வீட்டுக்குச் சொந்தக்காரனுக்கும் உணர்த்துகின்றது.

இந்த உணர்வின் சேர்க்கையிலே உடலுடன் பிணைந்த நம் வாழ்க்கைக்காக வேண்டி
1.நாம் எந்தெந்த உணர்வைச் செலுத்தி
2.கண்கள் வழியாக நம் உடலுக்குள் எதை இணைக்கின்றோமோ
3.அந்த உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

சுவாசித்து அந்த உணர்வின் அலையை நமக்குள் அணுக்களாகச் செலுத்தினால் அதை நாம் எண்ணும் பொழுது அதே உணர்வலைகள் கண்ணிலே பட்டவுடனே நம் குணத்தைப் பாதுகாக்கும்.

இதுவெல்லாம் வியாசகரால் கண்டுணரப்பட்டு காவியமாக உணர்த்தப்பட்டுள்ள பேருண்மைகள். அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஞானிகள் உணர்வுடன் காவியத்தைப் படித்தீர்கள் என்றால் அதில் உள்ள மூலங்களை அறிந்து “நாம் யார்?” என்ற நிலையில் நம்மை நாம் அறிய முடியும்.

நமக்குள் எது இயக்குகின்றது. எதை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த உடலுக்குப் பின் என்ன என்பதை அறிந்து அந்த ஞானிகளுடன் ஒன்றிட முடியும்.