இப்பொழுது முறைப்படி நாம் தியானமிருக்கிறோம்
என்று சொன்னால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெறுவதற்குத்தான்.
அதற்கடுத்து ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை
எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின்
அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானிக்க வேண்டும்.
அப்படித் தியானிக்கப்படும்போது இந்தக்
காற்றிலே படர்ந்திருகின்ற மகரிஷிகளின் அருள்சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.
“அந்த அருள் சக்தியாலே “உங்கள் துன்பம் போகும்...” என்று யாம் உபதேசிக்கின்றோம்.
உங்கள் உணர்வுக்குள் பதிவு செய்த இந்த
உணர்வை ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியவுடன் அந்தக் காற்றிலிருந்து அந்தச்
சக்தியை எடுத்து உங்கள் மனம் சஞ்சலப்படும் இந்த நிலையை அது அடக்கும்.
காரணம் சதா உங்களிடம் யாம் வாக்குகளைச்
சொன்னாலும் அதை நீங்கள்
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து
2.உங்கள் உடலைக் கோயிலாக மதித்து
3.அவன் வீற்றிருக்கக்கூடிய கோயிலில்
4.அங்கே நல்ல வாசனையைப் போட்டால் எல்லாம்
மகிழ்ச்சியாக இருக்கும்.
அதைப்போல உங்கள் வாழ்க்கையில் எல்லா
நலமும் பெறவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறவேண்டும். உங்கள் மனமும்
நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த “நல்ல மணங்கள் உங்களுக்குக் கிடைக்க
வேண்டும்” என்று யாம் தியானிக்கின்றோம்.
அதே சமயத்தில் அதற்கு வேண்டிய அந்தச்
சக்தியை எடுத்து உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இன்றும் யாம் ஜெபித்துக் கொண்டேயிருக்கின்றோம்.
அப்படி யாம் உங்களை எண்ணும் பொழுது அந்த சக்திகள் கிடைக்கும்.
சில நேரங்களில் நெற்றியிலே “குறு குறு”
என்று இருக்கும். சில நேரங்களில் பார்த்தால் உங்கள் உடல்களில் "ஒரு விதமான புது
உணர்வுகள்” தோன்றுவதைப் பார்க்கலாம்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் சங்கடமோ
சஞ்சலமோ வரப்படும்போது
1.மனம் நொந்து இருக்கக்கூடிய நேரங்களில்
கூட
2.யாம் எடுத்துக்கொண்ட இந்த ஜெபம்
3.உங்கள் உடலில் சில உணர்ச்சிகளைத் தூண்டும்
.
அந்த நேரமாவது நீங்கள் பார்த்து உணர்ந்து
சுதாரித்து ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ‘மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்
என்று நீங்கள் ஏங்கினால் அந்தச் சக்தி உங்களுக்குள் இணைந்து அந்த மனக்கலக்கத்தைத் தீர்க்க
இது உதவும்.
“நீங்கள் எண்ணி எடுத்தால்தான்” அந்தச்
சக்தி கிடைக்கும்.
ஆகவே ஒவ்வொருவரும் ஆத்மசுத்தி என்ற இந்த
ஆயுதத்தை பயன்படுத்திப் பழகிக் கொள்ளவேண்டும்.