ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2017

பண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி அருளை வளர்த்து மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்வதே நம் குரு காட்டிய "அருள் வழி"

இன்றைக்கு எடுத்துக் கொண்டால் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போனாலே அதற்குள் “அங்கிருந்து இங்கே வந்துவிட்டான்..,” என்ற நிலை வருகிறது.

மைசூருக்கு இங்கிருந்து தமிழ்நாட்டுக்காரன் அங்கே சென்றால் உதைக்கிற மாதிரி ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் சென்றால் “எங்கே இருந்து இங்கே வந்து நாட்டாமை செய்கிறான் பார்..,” என்பார்கள்.

தமிழ்நாட்டுக்காரர்கள் அங்கே சென்றால் உதைக்கின்றார்கள், தமிழ்நாட்டுக்குப் போ என்கிறார்கள்.

பகைமை உணர்வுதான் வருகிறது.

தமிழ்நாடுதான் என்றாலும் கிராமத்திற்குள் சென்றால் என்ன ஆகிறது?

அந்தக் கிராமத்துக்காரன் இங்கே வந்துவிட்டான், அவன் கொழுப்பைப் பார் என்கிறார்கள்.

ஆக, இப்படி ஒரு கிராமத்திற்கு கிராமம் தனித்து நிற்கும் நிலையும் பகைமை ஊட்டும் நிலைகள் இப்படி உலகம் முழுவதுமே இருக்கின்றது.

இனிமேல் அணுகுண்டு விழ வேண்டியதில்லை.

மனிதனுக்குள் இருக்கும் விஷத்தன்மை விளைந்தால் இவர்களுடைய உணர்வே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை வருகிறது.

மனிதன் என்ற நிலைகளில் எத்தனையோ ஆலயங்கள், சாஸ்திரங்கள், சட்டங்கள் இருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுவதற்குமே இன பேதம், மொழி பேதம், மன பேதம் இருக்கிறது.

மக்களை ஒன்றுபடுத்த அரசாங்கமும் எத்தனையோ வேலைகளைச் செய்கிறது.

அரசாங்கம் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், மக்களுடைய நிலைகள் கொண்டுதான் அரசாங்கம்.

மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று அரசாங்கம் எண்ணினாலும் கிராமத்திற்கு கிராமம் தகராறு ஏற்படுகிறது. மக்கள் (நாம்) ஒற்றுமையாக இல்லையென்றால் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது.

அதே சமயத்தில், கிராமப்புறத்தில் தெய்வங்களை வணங்கும் பொழுதும் எங்கள் இனம் அது அவர்கள் இனம் என்ற நிலையில் நாம் பகைமை கொள்கிறோம்.

ஆக, இந்த மனித உடலில் விளைய வைத்த தீமையின் உணர்வின் எண்ண அலைகள் உலகம் முழுவதும் பரவி அணுக்களாக மாறுகின்றன.

தீமையான உணர்வுகளை விளைய வைக்கும் இந்த நிலைகள் அனைத்தும் வெளிப்பட்ட நிலைகளில் இந்த ஜீவ அணுக்கள் பட்டு அந்த உயிரின் தன்மை கொண்டு மீண்டும் அது புழுக்களாக மாறுகின்றது.

அந்த உணர்வின் அணுக்கள் வரும்போது அதனுடைய நிலைகள் கொண்டு தாவர இனங்கள் உலகெங்கிலும் அழிகின்றது. இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

1.பகைமையான உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.
2.விளைந்த இந்தத் தீமையான நிலைகள்தான் அணுக்களாக மாறி நம்மையே திருப்பித் தாக்குகின்றது.
3.உணவுக்காகத் திண்டாடும் நிலை கூட சில நாடுகளில் இருக்கின்றார்கள்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீண்டிடல் வேண்டும், மற்றவர்களையும் மீட்டிடல் வேண்டும்.

ஆகவே, எந்தக் கிராமமாக இருந்தாலும் ஒரே கிராமம் என்று நாம் எண்ணவேண்டும். எந்த ஊரானாலும் மைசூர் வேறு இல்லை, ஆந்திரா வேறு இல்லை, உலகம் வேறு இல்லை.

அங்கே நாம் செல்ல வேண்டும் என்றால்
1. நட்பு இருந்தால்தான் போக முடியும்.
2.நட்பு இல்லையென்றால் அங்கே போக முடியாது.
3.அவர்கள் வாழவேண்டும் என்று எண்ணினால்தான் நாம் வாழ முடியும்.
4.இல்லை இல்லை.., அவர்களைத் தொலைக்க வேண்டும் என்று நாம் எண்ணினால்,
5.நாம் போனால் நிச்சயம் நம்மைத் தொலைக்கத்தான் செய்வார்கள்.

இந்த உலகம் நமக்குள் அந்த எண்ணமே நம்மைத் தொலைத்து விடுகிறது.., தொலைந்து விடுகிறோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
இந்த ஊர்; இந்த உலகம்;
நாம் எல்லோருமே ஒரே குடும்பம், ஒரே இனம்.

அதாவது, உலகம் அனைத்தும் அதில் வாழும் நாம் அனைவரும் அந்தக் கடவுளின் பிள்ளைகள்தான். அவர்களுடன் நாம் இணைந்து வாழக்கூடியவர்கள் என்ற நிலையில் நாம் எண்ணவேண்டும்.

1.மதமும் இல்லை,
2.மொழியும் இல்லை,
3.இனமும் இல்லை.
4.இவைகள் எல்லாம்.., "நம்மைக் காப்பதே இல்லை".

ஊரும் உலகமும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் “நலம் என்ற உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

ஆக, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோர் மீதும் படரவேண்டும். நாம் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். எல்லோரும் சகோதர உணர்வுடன் ஒன்று பட்டு வாழ்ந்திடவேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நாம் படரச் செய்யவேண்டும். இதுதான் “தவம் என்பது.

1.பண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி, அருளை வளர்த்து
2.மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்வதே நம் குரு காட்டிய அருள் வழி.
3.அருள் வழி வாழுங்கள். ஆனந்த வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.


அதன் வழி கொண்டு பேரின்பப் பெரு வாழ்வாக நீங்கள் வாழ்ந்திட எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.