ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2017

அன்று தாவர இனச்சத்தைக் கலந்து வர்ணங்களை உருவாக்கினார்கள் இன்று இரசாயணக் கலவை கொண்டு கலர்களை உருவாக்கி காற்று மண்டலத்தையே நச்சாக்கிவிட்டார்கள் – மீளும் வழி என்ன?

விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த உணர்வுகள் கொண்டு புதுப் புது இயந்திரங்களை இன்று உருவாக்கினாலும் அதில் கலந்துள்ள நஞ்சின் புகைகள் வெளிப்படும் பொழுது அதுவே நம்மை மாற்றுகின்றது.

நாம் ஆடைகள் அணிவதற்காக எத்தனையோ நஞ்சு கலந்த வர்ணங்களைக் கலக்கின்றோம். ஆனால், அன்று வாழ்ந்த மெய்ஞானிகள் என்ன செய்தார்கள்?

சூரியனிலிருந்து விளைந்த தாவர இனச் சத்தை இந்த நூல்களில் இணைத்துத்தான் அந்த வர்ணங்களை மாற்றினார்கள்.

இன்றும் நீங்கள் மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலில் பார்க்கலாம். திருமலை நாயக்கர் ஆட்சி புரியும் பொழுது வாழ்ந்த மெய்ஞானிகள் உண்மையின் நிலைகளில் இயற்கையில் உருவாக்கிய இந்த வர்ணங்களை அங்கே சுவர்களால் எழுதியதை அழிக்கமுடியவில்லை.

இன்று விஞ்ஞான அறிவினால் கண்டுணர்ந்த வர்ணங்களை இட்டால் அது சீக்கிரத்திலேயே மங்கிவிடுகின்றது. ஆனால் திருமலை நாயக்கர் மஹாலில் தீட்டப்பட்ட வர்ணங்கள் மங்கவுமில்லை.

சரஸ்வதி ஹாலில் அன்று இயற்கையின் வர்ணங்களை வைத்து எத்தனையோ சித்திரங்களை வரைந்துள்ளார்கள். அதுவும் இன்று மங்கவில்லை.

அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு இயற்கையாக இடப்படும்பொழுது “மனிதனுக்குத் தீமைகள் வரவில்லை”.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பல வர்ணங்களை கெமிக்கல்கள் கலந்து உருவாக்கி புகைகளைப் பரவச் செய்த நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

“பளிச்…” என்று இருப்பதற்காக இத்தகையை வர்ணங்களைத் தூவினாலும் அதிலே கலக்கப்பட்டுள்ள நஞ்சுகள் புதிதாக உருவாகி வெளிப்பட்டதையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இந்த ஆறாவது அறிவால் தான் தனக்கு வேண்டிய வசதிகளுக்காக விஞ்ஞான அறிவால் மாற்றும் பொழுது
1.பல கெமிக்கல்களை இணைத்து நஞ்சாக மாற்றி
2.அவ்வாறு உமிழ்த்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது
3.இந்தக் காற்று மண்டலத்தில் பரவி காற்றே நஞ்சின் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது.
4.மனிதன் சிந்தித்துச் செயல்படும் நல்ல அறிவினை அது இங்கே மறைக்கின்றது.

நம் அணுயும் ஆடைகளுக்குக் கொடுக்கும் வர்ணங்களாக இருப்பினும் கலக்கும் நிலைகளிலிருந்து நஞ்சாக வெளிப்படுகின்றது.

இதனின் கழிவின் தன்மைகள் நீராக பூமிக்கடியில் செல்லும் பொழுது பூமியில் ஏற்படும் வெப்பத்தின் தன்மை ஆவியாக மாறி பூமிக்குள்ளும் இந்த நஞ்சின் தன்மை கலக்கின்றது.

திருப்பூரில் உருவாக்கும் சாயக் கலர்கள் அவை கலந்து கலந்து மற்ற பக்கம் உள்ள நீரில் சுவைத் தன்மைகள் மாறலாம். சூரியனால் கவரப்பட்ட காந்தப் புலனறிவுகள் பூமி சுழலும் நிலைகளில் கொதிகலனாகும் நிலைகளில் பூமியின் நடு மையம் அடைந்துவிட்டது.

அதில் ஏற்படும் வெப்பத்தால் தான் மற்ற உணர்வுகள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றது. ஆக ஆவியின் தன்மை படரப்படும் பொழுது ஊடுருவி பூமி முழுவதும் படர்கின்றது. இந்தக் காற்று மண்டலத்திலும் பரவுகின்றது.

1.தான் கண்டுணர்ந்த இந்த நிலைகளால் தான் பூமிக்குள் இத்தகைய மாற்றங்கள் ஆகின்றது என்று
2.விஞ்ஞான அறிவால் அறிந்து கதிரியக்கச் சக்திகளை பூமியைக் கடந்து வெளியே வீசினான்.
3.ஆனால், அந்தக் கதிரியக்கச் சக்திகள் இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவி அங்கே மாற்றமாகி
4.அந்தக் கதிரியக்கங்கள் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரையைக் கிழித்துவிட்டது”.

ஓசோன் திரை என்பது சூரியனிலிருந்து வெளிவரும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சைத் தனக்குள் புகாது தடுக்கும் நிலையாகச் சிறுகச் சிறுக உறைந்து அதனுடைய படலம் அதிகமாகி ஒரு திரை போன்று மறைத்துத் தனக்கு வேண்டிய அளவு எடுத்துத் தனக்குள் அணுக்களாக மாறிய நிலைகள்.

அத்தகைய ஓசோன் திரையும் இன்று கிழிந்துவிட்டது.

அன்று மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து மனிதர்கள் வாழ்வதற்குண்டான சூழ்நிலையை இங்கே உருவாக்கினார்கள்.

இதையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் மெய்ஞானிகள் கண்டுணர்ந்த நஞ்சினை வென்ற ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்களுக்குள் ஆழப் பதியச் செய்வதற்கே இதைச் செய்கின்றேன்.

அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆழப் பதிந்தால் அது நினைவுக்கும் வரும் பொழுது உங்களைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

ஏனென்றால், விஞ்ஞான அறிவை முதலில் படிக்கும் பொழுது ஒன்றும் தெரிவதில்லை. மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது.., படித்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணைக்கப்படும் பொழுதுதான் விஞ்ஞான அறிவையும் காண முடிகின்றது.

1.அந்த மெய்ஞானிகள் கண்டுணர்ந்த அறிவினை உங்களுக்குள் புகுத்தப்படும் பொழுது
2.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறுகள் வருகின்றதோ
3.அப்பொழுது அந்த மெய்ஞானியின் உணர்வை இணைக்கப்படும் பொழுதுதான்
4.இந்த விஞ்ஞான அறிவினால் வரும் சிக்கல்களிலிருந்து மீட்டிடும் எண்ணம் அதுவாக மாற்றும்.
5.விஞ்ஞான அறிவினால் பரவப்பட்டுள்ள நச்சுத் தன்மைகளிலிருந்து மீளும் உணர்வை ஊட்டும்.
அந்த நினைவின் தன்மையை நீங்கள் கூட்டி எண்ணினால் தீமைகளிலிருந்து மீட்டிடும் நிலையாக அதுவாக நீங்கள் ஆவீர்கள்.

இதைத்தான் வியாசகன் கீதையில் காட்டினார். “நீ எதை எண்ணுகின்றாயோ…, நீ அதுவாகின்றாய்”.