ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2017

யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “மகரிஷிகள் வாழும் எல்லைக்கே” அது அழைத்துச் செல்லும் – நீங்கள் ஞானியாக ஆவீர்கள்

உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

இந்த விஞ்ஞான உலகில் இனி வரும் பெரும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும்.

குருநாதர் எமக்குக் கற்றுக் கொடுத்த நிலைகளை எல்லாம் என்னுடன் வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தால் என்னாகும்?

எனக்குள் மறைந்துவிடும்.

ஆனால், உங்களுக்குள் இதை உணர்த்தப்படும் பொழுது உங்களுடைய பார்வையால் சொல்லால் பேச்சால் மூச்சால் பலருடைய தீமைகளை மீட்டிடும் சக்தி உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்ற “ஆசையில் தான் சொல்கிறேன்.

சிந்தனையை மறைக்கச் செய்யும் நிலைகளை மாற்றியமைத்துத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக அந்த ஞானத்தின் வழிகளில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்.

நாம் நல்ல குணம் கொண்டு இருந்தாலும் நம் சந்தர்ப்பம் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நல்ல குணத்துடன் சேர்ந்து அது பதிந்து விடுகின்றது.

அந்த அச்சுறும் உணர்வுகள் நமக்குள் விளைந்துவிட்டால் நல்ல குணங்களைக் காக்கும் செயலை இழந்து விடுகின்றது.

ஆகவே, அந்த அச்சுறுத்தும் உணர்வின் தன்மையை மாற்றிடும் உணர்வைச் சொல்லாக இங்கே உபதேசிக்கின்றேன்

சொல்லாகச் சொல்கிறேன் என்றால் அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் என்னுடைய நினைவாற்றல் சென்றது. அதை நான் பெற முடிந்தது. பெற்று அதை வளர்த்துக் கொண்டேன்.

1.யாம் பெற்ற நிலையில் அந்த ஞானிகள் பெற்றதை யாம் இங்கே நினைவு கொண்டு சொல்லும்போது

2.உங்கள் நினைவாற்றல் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த எல்லைகளுக்கே சென்று

3.அங்கே உருவான அந்த அருளாற்றல்களை நீங்களும் நுகர முடியும்.

உதாரணமாக ரோட்டில் இன்ன இடத்தில் ஆக்சிடென்ட் ஆனது என்று கேள்விப்பட்ட உடனே “ஆ…” என்று பதிவாகி விடுகின்றது. பின் அதை யாராவது சொன்னால் மீண்டும் நினைவு வந்து அந்த இடமே தெரிய (படம் போல்) ஆரம்பித்துவிடும். இதைப் போல

1.குருநாதர் கொடுத்த அந்த அருள் வழியில் யாம் உபதேசிப்பதை

2.நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதெல்லாம்

3.அவர் கண்டுணர்ந்த பல தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.

4.அப்பொழுது உங்களுக்குள் சித்திரை – சிறு திரையாக நல்லதை மறைத்து கொண்டிருக்கும்

5.அந்த நல்லதை அறிய விடாது செய்யும் நிலைகளை மாற்றி

6.உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிடல் வேண்டும் என்பதற்கே இதை நினைவுபடுத்துகின்றேன்.

பள்ளியில் படித்த பின் படித்தை நினைவு கொண்டார்களா என்பதை தேர்வில் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

படித்தது நினைவு வந்தால் தேர்வில் எழுதிவிடுகின்றார்கள். நினைவுக்கு வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் அந்தச் செயலாக்கத்தின் படி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றார்கள்.

அதைப் போன்று தான் யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமைகளை எப்படி மாற்றுவது என்ற சிந்தனை கொண்டால்  சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானம் உங்களுக்குள் வருகின்றது.

அந்த ஞானத்தால் உங்கள் தீமைகளை எளிதில் போக்கிக் கொள்ள முடியும். ஆகவே

1.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும்

2.உங்கள் உணர்வுகள் உங்கள் சொல்லைக் கேட்போருக்கும் ஞானத்தை  ஊட்டி

3.அவர்களுக்குள் தீமைகளை மறைத்திருக்கும் சிறு திரையை அவர்களும் நீக்கி

4.நீங்கள் பெற்ற அருள் உணர்வை அவர்களும் பெற்று அவர்களும் தீமைகளை நீக்க வேண்டும்.

5.நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும் என்பற்குத்தான்


உங்களுக்குள் இதைத் தெளிவாக்குகின்றேன்.