ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2017

இந்த உடலுக்குப் பின் நாம் எந்தக் கூட்டமைப்பில் சேர வேண்டும்? நம் எல்லை எது?

மதத்தின் அடிப்படையில் காட்டிய சாங்கிய சாஸ்திரங்களின் படி அதில் எடுத்துக்கொண்ட வேதங்களையும் படித்துப் படித்து அதனை உருவாக்கி விட்டால் அந்த மதத்தின் பிடிப்பில் இருந்து நீங்கள் விலகுவது இல்லை.

மதத்தின் தன்மை பிடிப்பாக வரப்போகும்போது அதிலே வரும் நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான் அந்த மதத்தை விட்டு அடுத்த மதம் தாவினாலும் அதனின்று
1.“எனக்கு அந்தக் கடவுள் செய்வாரா?” என்ற நிலைகள்தான்
2.இன்று பிரிந்து செல்லும் நிலைகளில் வருகின்றது.

ஜாதகமும், மதங்களால் உருவாக்கப்பட்ட வேதங்களும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு.

இந்த வேதத்தின் தன்மையைத் தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள் தொகுக்கப்பட்டு இந்த மதத்துக்கென்று அரசனாகி அந்த அரசன் வழிகளிலேதான் அந்த நாட்டின் தன்மைகள் வந்தது.

அவ்வாறு விளைந்த உணர்வுகள் அதிலே விளைந்த உணர்வின் தன்மைதான் இன்று நம்முள் விளையப்பட்டு அவர்கள் செருகிய வித்தின் உணர்வுகள் கொண்டு இன்றும் நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வாக இயக்கிக்கொண்டே உள்ளோம்.

ஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு. அந்த மந்திர ஒலிகளின் தன்மை செருகப்பட்ட உணர்வு கொண்டுதான்,
1.அதனதன் மதத்தை இறுக்கிப் பிடித்து,
2.மற்ற மதத்தைப் பழிக்கச் செய்கின்றது.

ஒரு தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு எவ்வாறு தன் சத்தை அது கவர்ந்து கொள்கின்றதோ தன் உணர்வால் அது கவர்ந்து கொள்கின்றது. தன் மணத்தால் மற்றவைகளை அணுக விடுவதில்லை.

மதத்தால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அது தன் எண்ணத்தால் கவர்ந்து கொண்டாலும், அதில் ஏற்பட்ட மணம் தான் அது. 
1.மற்றவர்கள் எது சொன்னாலும், அந்த மணம் தடுக்கத்தான் செய்யும்.
2.அந்த மதத்தின் தன்மை கொண்டு மற்ற மதங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி உங்களில் மீண்டும் மீண்டும் அந்த விண் வழி சென்ற இந்த உணர்வின் ஆற்றலை உங்களில் பருகும்படி செய்கின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் திறனை வளர்த்துக் கொள்ளும் நிலையாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் உரமாக ஊட்டுவது இதற்குத்தான்.

வீண் என்ற பேச்சு இல்லை. விரையமாக்கும் தன்மை இல்லை.

1.அருள்ஞானியின் உணர்வுகள் அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தனரோ
2.அந்த மகரிஷியின் அருள் சக்திகளை உங்களுக்குள் இணைத்து இணைத்து
3.இந்த இணைப்பின் வளர்கொண்டு அதை உங்களுக்குள் உரமாக்கச் செய்கின்றோம்.

அப்படி உரமாக்கிய நிலைகள் கொண்டு, அதில் எண்ணத்தால் நீங்கள் வளரும் அந்தப் பருவம் வந்துவிட்டால் உங்கள் நினைவின் ஆற்றல் அங்கே செல்கின்றது.

பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.  இதற்குத்தான் இதைச்சொல்வது. ஆகவே
1.ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பினும்
2.அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகளை நாம் இயங்கிடும் உணர்வுடன் இணைத்து
3.அதன் நினைவினை உற்று நோக்கி அந்த நினைவுடன்
4.அந்த மகரிஷியின் உணர்வை உங்களுக்குள் ஒன்றச்செய்வது தான் யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள்.

கடந்த கால நலன்களும் வாழ்க்கையில் வந்த தீமைகளும் மதத்தால்  ஏற்பட்ட உணர்வுகளும் அதனால் ஏற்பட்ட நாம் அதைக் காத்திடும் உணர்வாக விளைய வைத்த நிலைகளை அது உணர்த்தி அந்த உணர்வின் நினைவைக் கொண்டு மகரிஷியின் அருளுணர்வை இதனுடன் இணைக்க வேண்டும்.

அதற்குத்தான் யாம் தொடர்ந்து தொடர்ந்து சொல்வது.

பெரும்பகுதியானவர்கள் இறந்த பிற்பாடு நமக்கு என்ன எதுவும் தெரியப் போகிறதா என்ற எண்ணத்தில் தான் உள்ளார்கள். ஆனால் தெரிந்து கொள்ளுங்கள்.

“புழுவில் இருந்து மனிதனாக வந்த நாம்..,” இந்தக் கூட்டமைப்பிலிருந்து மீண்டும் எதனுடைய நிலைகளை இன்று எடுத்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வின் தன்மையாக
1.”வேதனை” என்ற நிலைகள் வந்தால் பாம்பினக் குழுவில் நாம் சேர்ந்து அதனுடைய கூட்டமைப்பிலேதான் இணைவோம்.
2.“கடு கடுப்பென்ற” நிலையான உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால், நம்முடைய எல்லை எதுவாக வைப்போம் என்றால் “தேள்” இனத்தில் தான் போய் வைப்போம்.
4.மாமிச உணவுகளை கோழியோ, மீனையோ, ஆட்டையோ விரும்பி உணவாக உட்கொண்டிருந்தால் அந்தக் கூட்டமைப்பிலே தான் இணைவோம்.

ஆகவே, எந்த உணர்வின் தன்மையை அதிகமாக வளர்த்துப் பழகியுள்ளோமோ அதனின் கூட்டமைப்பில் தான் சென்று சேர முடியும்.

ஆகவே அதற்கு நாம் தயாரா…! இதைப்போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டுமல்லவா.

அதற்குத்தான் மகரிஷிகள் காட்டிய உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கும்படி செய்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் எல்லாவற்றிலும் இணைத்துக் கொண்டு வந்தபின் உங்களுக்குள் சிந்திக்கும் திறனும் அருள்ஞானிகள் அவர்கள் எப்படி தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவருக்குள் விளைய வைத்தார்களோ அந்த உணர்வை நுகரும் நிலையும், உங்களுக்குள் அதைக் கவர்ந்திடும் நிலைக்குத்தான் இதைச் செயல்படுத்துவது.

இதை ஒவ்வொரு நாளும் நீங்கள் நினைவு கொண்டு “நமது எல்லை… எது…? என்ற நிலைக்கு வர வேண்டும்.

1.உயிருடன் ஒன்றிடும் உணர்வின் தன்மை கொண்டு
2.ஒளியின் சரீரம் பெற்று எங்கு சென்றடைந்துள்ளார்களோ
3.அதனுடைய குழுவாக… “கூட்டமாக…,சப்தரிஷி மண்டலமாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ
4.அதைத்தான் நம் எல்லையாக வைக்க வேண்டும்.