ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2017

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடல் உறுப்புகளை எப்படியெல்லாம் மாற்றுகின்றது - ஞானகுரு

உதாரணமாக, வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது சமயம், சந்தர்ப்பம் ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் காண்கின்றோம்.

வேதனைப்பட்ட மனிதனை, நம் கருவிழி ருக்மணி இங்கே பதிவாக்குகின்றதுகண்ணோடு சேர்ந்த காந்தப்புலனோ அதைக் கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றதுஅப்பொழுது அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றது.
1. சிறு குடல் பெருங்குடல் சோர்வடைகின்றது
அப்பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைகின்றது. அது உமிழ்நீராக மாறியவுடன் நமது பெருங்குடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அது சோர்வடைந்து விடுகின்றது.

ஆக, முதலில் சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டிருந்தோம் என்று சொன்னால் அது அஜீரணமாகி, புஷ்..", என்று இனம் புரியாதபடி வயிற்றில் ஒரு வாயு (GAS) உருவாகி வயிறு உப்பிவிடும்.

அது சிறுகுடலுக்குப் போகும்போது அது ஜீரணிப்பதற்காக இழுக்கும்ஆனால், அப்படி இழுப்பதற்கு முன்னால் திகட்டல் ஏற்படும்.

பாம்பு எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன் உணவை விழுங்குமோஅதே மாதிரி இந்த ஆகாரத்தை நம் சிறுகுடல் இழுத்து கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கி ஆவியாக மாற்றுகிறது.

அப்படி அது இழுக்கப்படும் போதுஇதற்கு முடியாததனால் திகட்டக்கூடிய நிலை ஆகிவிடுகின்றது.

அப்படி சிறுகுடல் ஆவியாக மாற்றுவதை கணையங்கள் இழுக்கின்றதுகணையங்கள் அதை வடித்துதண்ணீர் வேறு, ஆசிட் (ACID) வேறு, இரத்தம் வேறாக இப்படி என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.

ஏனென்றால், இப்படி நடக்கும் நிலையில்
நம் உடல் எப்படி இயங்குகின்றது?
என்று நாம் தெரிந்துகொண்டோம் என்றால் அது நன்றாக இருக்கும்.
அதனால்தான் இதைச் சொல்வது.
2. வேதனையான உணர்வு கல்லீரலை வீக்கமடையச் செய்கின்றது
அதற்கடுத்து நம் கல்லீரலுக்குப்போய் அதையெல்லாம் வடிகட்டி மண்ணீரலுக்கு வந்து, மண்ணீரலிலிருந்து வடித்து நம் நுரையீரலுக்கு வரும்.

நுரையீரல் ஒரு PUMP போன்று இயங்குவதுதான். அதாவது இழுத்து வெளிவிடும் நிலைகள் கொண்டது. அதில்தான், கல்லீரல் இப்படி துருத்தி மாதிரி இது இழுத்து வடிகட்டி, உள்ளே இருந்து இயங்குகின்றது.

ஆனால், வேதனை என்ற உணர்வு வரும்போது இந்தக் கல்லீரலில் வந்து வீக்கம் ஆகிவிடும்.
3. நுரையீரலில் மூச்சுத் திணறல் ஆகின்றது
வீக்கமானவுடனேஇங்கே மூச்சுத்திணறலாகும்இதே உணர்வுகள் மண்ணீரலுக்கு வந்துஅந்த விஷத்தின் தன்மையால் அந்த அணுக்களும் மயக்கமாகும்.

பெருங்குடலில் ஆன மாதிரி அதே நிலைகள் இங்கேயும் வருகின்றதுஅப்புறம் நுரையீரலில் வரும்போது என்ன செய்கின்றதுஅங்கே மூச்சுத்திணறலாகும்.

அப்பொழுது, அவர்கள் வேதனைப்பட்ட உணர்வெல்லாம் சுவாசித்தவுடனேகாற்றிலிருந்து இது நேரடியாக வந்துவிடுகின்றது. இந்த அணுக்கள் எல்லாம் மயக்கம் அடைகின்றது.

அப்பொழுது நுரையீரலில் நமக்குத் திகட்டல் ஆகின்றதுஅப்பொழுது இந்த வேதனையான உணர்வுகளை இது சேர்த்து எடுத்து வடிகட்டுகின்றது.
4. வேதனை உணர்வானால் சிறுநீரகத்தால் வடிகட்ட முடிவதில்லை
அந்த ரத்தம் சிறுநீரகத்திற்கு வருகின்றது. இதில் இருக்கக்கூடிய விஷத்தை அது பிரிக்கின்றதுஇந்த விஷமான அணுக்கள் அந்த சிறுநீரகத்திற்குள் வந்துவிட்டால் அது இயங்கவில்லை என்றால், அதாவது வடிகட்டவில்லை என்றால் இரத்தத்தில் விஷம் கலந்துவிடுகின்றது,
5. வேதனை கலந்த ரத்தம் இருதய இயக்கத்தை பலவீனமடையச் செய்கின்றது
அப்பொழுது அது இருதயத்திற்கு வருகின்றது. அங்கே வந்து பலவீனமானால்நரம்புகளுக்கு வரும்அப்பொழுது நெஞ்சைப் பார்த்தோம் என்றால் நமக்கு எப்படியோ திகட்டலாகின்றது.

இதில் அந்த நரம்பு நுண்ணிய நரம்புகளாக இருப்பதனால்அது பலவீனம் அடைந்தால் எடுத்து ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் (PUMP செய்ய முடியாமல்) போகின்றது.

அந்த நேரத்தில் பார்த்தால், நெஞ்சு எப்படியோ வலிக்கிறமாதிரி இருக்கின்றது என்று சொல்வார்கள். இது எதனால வருகின்றதுநாம் வேடிக்கை பார்த்ததால் வருகின்றது.

அல்லது அவர்கள் (வேதனைப்பட்டவர்கள்மேல் பாசமாக இருந்து அதைத் தெரிந்துகொள்கிறோம்உயிரிலே படும் பொழுது உணர்கின்றோம். கண்ணிலே பார்க்கிறோம்கண்ணிலே பார்த்தாலும் உயிரிலே பட்டுதான் அந்த உணர்வை நாம் தெரிந்துகொள்கிறோம்.

பூவைக் கண்ணால் பார்க்கின்றோம்நல்ல வாசனையாக இருக்கின்றதுநெருப்பில் போட்டவுடன் என்ன ஆகின்றதுஅது கருகுகின்றதுஅந்தப் பூவின் மணம் அது கருகுவது நமக்குத் தெரிகின்றது.

அதிலிருந்து வெளிப்படக்கூடிய மணம் உயிரிலே பட்டவுடன், அந்த வாசனைஉணர்வுகள் உணர்ச்சிகளாக நமக்குத் தெரிகின்றதுசொல்வது அர்த்தமாகின்றதாபுரிகின்றதா?

இதை நம் கண் எப்படி இயக்குகின்றது?
உயிர் எப்படி இயக்குகின்றது?
நம் உடலில் இருக்கும் உறுப்புகள் எப்படி இயங்குகின்றது?
என்பதனை நாம் நன்றாகத் தெரிந்துகொள்வோம்.

ஆகவே, இந்த இதயத்திலிருந்து போகக்கூடிய நிலைகள் வடிகட்டி உடலிலுள்ள அத்தனை உறுப்புகளுக்கும் இதன் வழியாகத்தான் இரத்தம் வடிகட்டிப் போகின்றது.

முதலில் இங்கு வருவதைச் சுத்தப்படுத்தி, இதயத்துக்குப் போனபின் தான் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் நல்லது போய்ச் சேர வேண்டும்.

இது சுத்தப்படுத்தவில்லை என்றால், பாக்கி எத்தனையோ தொல்லைகள் இந்த உடலில் அவஸ்தைகள் வரும்.
6. மூளை பாகம் உள்ள நரம்புகள் தளர்ந்துவிடுகின்றது
அப்பொழுது, மூளைக்கு நுண்ணிய நிலைகள் போனவுடன் இந்த விஷமான தன்மை (வேதனையான உணர்வுகள்) போனவுடன் மயக்கமடைகின்றது. அப்பொழுது அந்த நரம்பு மண்டலங்களெல்லாம் தளர்ந்து போகின்றது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பார்ப்பதற்குத் தகுந்த மாதிரி
ஒரு பதினைந்து நிமிடத்திற்குள் இதுவெல்லாம் நடக்கின்றது.
நாம் தவறு செய்யவில்லை.

ஆக, பிறருடைய வேதனையான உணர்வுகளை நாம் உணர்கின்றோம். ஆனால், அது அது தன்னிச்சையாக இந்த வேலை நடக்கின்றது.

இதனால் என்ன ஆகின்றது? விஷமான நிலைகள் இரத்தத்தில் படர்கின்றது.
7. கண்ணின் கருவிழியில் வேதனை படர்ந்தபின் எல்லா உறுப்புகளுக்கும் தெரியப்படுத்துகின்றது
நம் கண்ணில் இருக்கக்கூடிய கருமணி தனியானது. வேதனைப்பட்டவரை நாம் கண்ணில் பார்த்தோம் அல்லவா? அந்த வேதனையான உணர்வுகளைக் கண்ணால் பார்த்தவுடன், கருவிழியில் தான் படருகின்றது.

அதாவது ஒரு முட்டையில் இருக்கும் ஊண்  மாதிரி கண்ணுக்குள் (கருவிழிக்குள்) இருக்கும்.

அதிலே பட்டவுடன் அதனுடன் சேர்ந்த நரம்பு மண்டலத்துடன் இணைத்துக் கொடுக்கின்றது. இப்படி எடுத்தவுடன் எல்லா உறுப்புகளுக்கும் தொடர்ந்து விடுகின்றது. ஏனென்றால் எல்லா உறுப்புகளுக்கும் இணைப்பு உண்டு.

ஆக, அப்படிப் படரும் வேதனையான உணர்வுகள் அதனுடன் சேர்ந்த. நரம்பு மண்டலத்துடன் இணைந்து, உடலில் எல்லா உறுப்புகளுக்கும் தெரியப்படுத்துகின்றது. 

தெரியப்படுத்தியவுடன் அந்த உறுப்புகள் என்ன செய்கின்றது? அப்பொழுது இந்த நரம்புகள் பலவீனமானவுடன் ஜீரணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. எல்லா உறுப்புகளும் மாற்றப்படுகின்றது.

உதாரணமாக ஒரு டம்ளரில் பாலை வைத்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு துளி விஷம் பட்டுவிடுகின்றது. பாலைக் கொட்டிவிடுகின்றோம்.

ஆனால், அடுத்து அந்த டம்ளரைக் கழுவாது வேறு ஒரு பொருளை அதில் வைத்தால் அதுவும் விஷமாகிவிடும். அதை உட்கொள்வோருக்கு மயக்கம் வரும்.

அதைப் போன்றுதான் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்க்கின்றோம். அந்த விஷமான உணர்வு கருவிழியில் பதிவாகி விடுகின்றது. 

அடுத்து ஒரு நல்ல காரியத்தைச் செய்யவேண்டும் என்று நினைக்கின்றோம், அல்லது ஒரு நல்லதைப் பார்க்கின்றோம். அப்பொழுது என்ன ஆகும்? நாம் நல்லதைச் சிந்திக்க முடியாது.

ஆக, ஒரு சங்கடமான நிலையைப் பார்த்துவிட்டு எழுத்து வேலை பார்த்தோம் என்றால் நிச்சயம் அந்தக் கணக்கு சரியாக வராது. “தப்பு வரும்”.
அதே மாதிரி, படித்துக் கொண்டிருந்தால் சரியாக வராது.
இரண்டு தரம் படித்தாலும் என்னால் முடியவில்லை
என்றுதான் வரும். கண்கள் கனமாக இருக்கும்.

நாம் தவறு செய்யவில்லை. நாம் கண்களால் பார்த்த நிலைகள் இத்தகைய வேலையைச் செய்கின்றது. ஆகவே, நாம் கண்களில் உள்ள கருமணிகளைச் சுத்தப்படுத்திப் பழகவேண்டும்.
8. நரம்பு மண்டலம் பலவீனமாகி உறுப்புகளின் இயக்கம் குறைகின்றது
அதே சமயத்தில், கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலங்களில் பட்ட இந்த வேதனை உணர்வுகள் நரம்பு மண்டலம் முழுவதும் படருகின்றது.

இந்த வேதனைப்படுபவர்களைப் பார்த்தவுடனே உடலில் ஒரு இனம் புரியாத நிலைகளில் இந்த நரம்பு மண்டலத்தில் வித்தியாசமான நிலையை உணரலாம்.

அதாவது நம் உடலில் உள்ள கணையங்கள் இரத்தத்தில் வரும் நிலைகளை அமிலமாக மாற்றி நரம்பு மண்டலங்களுக்குக் கொடுக்கின்றது. அதனின் இணைப்புகளைச் சேர்த்துக் கொண்டுவரும் நிலையில் அந்த எலும்புகளில் இணைப்பு (JOINT) வருகின்றது.

அதில் மூட்டுக்கு மூட்டு இந்த நரம்பு மண்டலம் இணைந்திருக்கின்றது. அது எடுத்து அழுத்தமாகி (PRESSURE) அந்த வாயு மண்டலத்தில்
இந்த அமிலத்தின் துணை கொண்டு,
கையை நீட்டி, மடக்குவதற்கோ, தூக்குவதற்கோ உதவும்.
ஆனால், ஒன்று இறுக்கமாகி (TIGHT) ஒன்று சுருங்கி ஏறும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அந்த உணர்வு இதை இயக்கச் செய்யும். நம் மூளை பாகத்திலிருந்து ஒரு இணைப்பு இருக்கின்றது. அது கொஞ்சம் பழுதானால், நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உறுப்புகளின் அசைவுகள் சிரமமாகின்றது. 
9. எலும்புகளில் BONE T.B. வந்துவிடுகின்றது
அதே சமயத்தில் எலும்புகளுக்குள் என்ன செய்கின்றது? வேதனையான அணுக்கள் எலும்புக்குள் சென்றவுடனே நல்ல அணுக்கள் மயக்கமடைகின்றது. சிறிது நாள் ஆனவுடன்,
அந்த எலும்பை உருவாக்கிய
நல்ல அணுக்களின் மலம்
விஷத்தன்மையான இயக்கமாக ஆகி
(BONE TB) எலும்புருக்கி நோயாக மாறிவிடுகின்றது.

ஆக, எலும்புகளுக்குள் நல்ல அணுக்களின் மலம் இல்லையென்றால் என்ன ஆகும். தப்பித்தவறி கையை மாற்றி ஊன்றினால், “சடக்.,” என்று எலும்பு ஒடிந்துவிடும். அப்பொழுது அந்த எலும்புக்கு வலு இல்லை.

ஏனென்றால், ஒரு வேதனையான உணர்வைப் பார்த்து, நாம் அந்த உணர்வுகளை நுகர்ந்தால் உடலுக்குள் என்னென்ன கெடுதல் செய்கிறது? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.
10. எலும்புக்குள் உள்ள ஊனில் குறைபாடு ஏற்படுகின்றது
அடுத்து, எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் என்ன செய்கின்றது? அந்த ஊனுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் இதையெல்லாம் வடித்து வைத்துக் கொண்டு, மலமாக்கி அதைச் சேமித்து வைத்துக் கொள்கின்றது.

உதாரணமாக மண் இருக்கின்றது. அந்த மண்ணிலிருக்கும் சத்து என்ன செய்கின்றது? ஒரு விதையை மண்ணிலே போட்டவுடன், அதிலிருக்கும் சத்தைக் கவர்ந்து செடியாக வளர்வதற்குக் காரணமாகின்றது.

ஆனால், மண் மட்டமாக இருந்தால் என்ன செய்யும்? செடி சரியாக முளைப்பதில்லை. அதைப் போலத்தான், இந்த எலும்புகளுக்குள் இருக்கும் ஊனில் குறைபாடு ஏற்பட்டதென்றால் சரியான நிலையில் பதிவாவதில்லை.

அதாவது மண்ணில் சரியான சத்து இருந்தால், வித்து அந்தச் சத்தைக் கவர்ந்து செழிப்பாக வளரும்.
மண்ணில் சத்து இல்லையென்றால்
வித்து மக்கிவிடுகின்றது, முளைப்பதில்லை.

இதைப் போல, நமக்குள் நல்ல குணங்களைக் கெடுத்து விடுகின்றது. நம் உடலில் உள்ள நல்ல குணங்களை இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

நாம் தவறு செய்தோமா? சிந்தித்துப் பாருங்கள்.